Verse 322
பாரப்பா ருத்திரனார் தவத்தாலந்த
பக்குவமாய் அக்கினியை படைத்து நின்றார்
பேரப்பா பெற்றதொரு பிரம்மாவுந்தான்
பெருகிநின்ற பூமிதனைப் படைத்தாரப்பா
நேரப்பா திருமால்தான் கருணையாலே
நிச்சயமாய்ச் சலமதனை படைத்து நின்றார்
காரப்பா முன்சொன்ன சத்திசிவன் ரெண்டும்
கருணையுடன் ரவிமதியு மானார்தானே
Translation:
See son, Rudra
with tapas
Created the
fire
Then Brahma
Created the
earth
Then Tirumal,
through mercy
Created water
See son, the
Siva and Sakthi mentioned before
Became Ravi
and madhi.
Commentary:
The order of
creation is described further in this verse.
Rudra created fire, Brahma created earth, Vishnu created water and Siva
and Sakthi became Ravi and Madhi.
ஸ்ருஷ்டி கிராமம் இங்கு மேலும் விளக்கப்படுகிறது. ருத்திரன் அக்னியைப் படைத்தார், விஷ்ணு நீரைப்
படைத்தார், பிரம்மா பூமியைப் படைத்தார், சிவனும் சக்தியும் ரவியும் மதியுமாக
நின்றார்கள் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment