Wednesday, 17 February 2016

312. Nirvikarpa samadhi

Verse 312
கேளடா நிருவிகற்ப சமாதிதன்னை
கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
வாளடா தன்னறிவே சாக்ஷியாக
மகத்தான அண்டமெல்லாம் தான்தானாக
கேளடா சகலவஸ்தும் போதமாக
கண்டதுவும் கேட்டதுவும் மாயமாக
ஆரடா ஆனந்தங் கொண்டாயானால்
அரகரா நிருவிகற்ப மதுதான் காணே

Translation:
Listen about nirvikarpa Samadhi
The merciful Pulatthiyaa!  Listen to me say it
With awareness as witness
With all the great universes as self
All the entities as bodham/ consciousness
All that are heard and seen as maya
If you keep yourself so and became blissful
It is nirvikarpa Samadhi.

Commentary:
Savikarpa Samadhi is perceiving everything as self.  Here the distinction of self and others exists.  In nirvikarpa Samadhi all the distinctions are removed.  The yogin does not perceive, but remains as everything.  His awareness becomes the witness.  He remains as the universes, all the entities are his bodham or consciousness, every sensual perception is maya.  He remains as everything without any distinctions.

Let us see Konkanar’s description of this Samadhi.

He says that when the yogin reaches this state he would attained tattva laya Samadhi mukthi, satthaanu vidya mukthi.  He does not hear any sounds, that of birds, anymore.  He remains in a state similar to sleep.  The chittam remains with poornam, chaitanyam.
When the yogin remains in this Samadhi he will realize that all the universes seen within the sphere of time- the three divisions of past, present and future, are false.  He will discard pasa or attachment or relation with the prapancha or manifested universe. 

சவிகற்ப சமாதியில் தானே அனைத்தும் என்று அந்த யோகி பார்க்கிறார்.  நிர்விகற்ப சமாதியில் தானே அனைத்துமாக இருக்கிறார்.  இங்கு காண்பவர் காணப்படுவது என்ற நிலைகள் இல்லை.  அவரது அறிவே சாட்சியாக இருக்கிறது.  பிரபஞ்சங்கள் அனைத்தும் தானாய், எல்லா வஸ்துக்களும் போதமாய், கண்டது கேட்டது என்ற எல்லா வித்தியாசங்களும் மாயையாக இருக்க அந்த யோகி ஆனந்த நிலையில் இருக்கிறார்.  இதுவே நிர்விகற்ப சமாதி.  இதை அமரகவி சித்தேஸ்வரர் ஆனந்த ஆஸ்பதம் என்கிறார்.  இது வெள்ளம் போன்ற ஒரு நிலை என்று விளக்குகிறார்.

இந்த சமாதியைப் பற்றி கொங்கணர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.  இந்த நிலையை அடையும் யோகி தத்துவ லய சமாதி முக்தி பெற்றிருப்பார், சத்தானு வித்யா முக்தியைப் பெற்றிருப்பார் இது தூக்கம் மயக்கம் போன்ற ஒரு நிலை என்கிறார் கொங்கணர்.   முன்பு கேட்டது போன்ற பட்சி சத்தங்கள் எதுவும் அவருக்குக் கேட்காது.  இதைத்தான் அகத்தியர் கேட்டது அனைத்தும் மாயை என்கிறார். 

இந்த நிலையில் அந்த யோகி காலத்தின் முப்பரிணமங்களான இறந்த காலம், நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவற்றில் காணும் பிரபஞ்சங்கள் அனைத்தும் பொய் என்று உணருகிறார்.  பாசத்தை விடுகிறார்.  அவரது சித்தம் சைத்தன்யத்தில் பூரணத்தில் நிற்கிறது.

No comments:

Post a Comment