Saturday 25 June 2016

432. Mother vaadham, the pauper

Verse 432
பாரடா இவளாட்டுக் காலேவாதம்
பத்திகொண்டு கண்டுபிடி வாதஞ் சித்தி
ஊரடா உப்பாலும் அப்பினாலும்
உள்ளபடி கண்டுபிடி வாதத்தாயைக்
காரடா முப்பூவிற் கட்டும் வித்தை
கையறிந்த ரசவாதங் கொள்ளையாச்சு
நாரடா நாறிமன மார்தான் கேழ்ப்பார்
நல்ல பதங்கண்டவர்கள் ஏழைதானே

Translation:
See son, the kaal that she shakes is vaadham
Holding it discover vaadha siddhi
The locus, through uppu and appu
Discover the mother vaadham in her natural state
Find out the trick of tying in the triple “poo”
The alchemy became accomplished
With the mind smelling offal, who will listen.
Those who saw the good locus are paupers/the seven.

Commentary:
The common expression, “kaalai aattudhal” or shaking the leg is used in the contect of yoga in this verse.  Agatthiyar says that the sakthi “shaking the leg” is vaadham or alchemy.  It means the flow of breath is due to Sakthi’s action.  That action produces the transformation or alchemy.  Agatthiyar also says that one should hold on to that kaal or leg, that is, breath and attain vaadha siddhi.  The mother, vaadha, should be discovered by uppu and appu or ukara and akara.  The trick of tying it in the muppu or triple salt/flower mentioned here means akara, ukara and Makara.  When one knows this trick then it is attainment of rasavaadha.  Rasa here means the saptha dhaatu in the body.  They are solidified into wax, as we saw before. The next line, “with the mind smelling offal” means the mind is destroyed.  He concludes this verse saying that those who saw the good locus “ezhai” which in the general sense means paupers.  In this context it means “those who saw the seven good loci” are those whose mind was destroyed and those who knew how to tie the rasa with the help of the triple salts-akara, ukara and makara.

சாதாரணமாக நாம் காலை ஆட்டுதல் என்று உபயோகிக்கும் தொடரை அகத்தியர் இங்கு யோக பரிபாஷையில் பயன்படுத்தியுள்ளார்.  சக்தி காலை ஆட்டுவதே வாதம் என்கிறார் அவர்.  இங்கு கால் எனப்படுவது மூச்சுக்காற்று.  அது உள்ளேயும் வெளியேயும் போவது சக்தியினால்தான்.  இந்தக் காலைப் பிடித்துக்கொண்டே வாத சித்தியைப் பெறவேண்டும்.  இங்கு வாதத்தாயை உப்பாலும் அப்பினாலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இங்கு உப்பு அப்பு எனப்படுபவை உகாரமும் அகாரமும் ஆகும்.  இவ்வாறு முப்பூவில் கட்டுவதை அறிந்துகொண்டால் அதுவே ரசவாதம் என்கிறார் அகத்தியர்.  இங்கு முப்பூ என்பது அகார உகார மகாரங்கள்.  ரசத்தைக் கட்டுவது என்பது உடலில் உள்ள திரவத்தை மெழுகாக்குவது.  ரசம் என்ற சொல் உடலில் உள்ள சப்த தாதுக்களைக் குறிக்கும்.  மனம் நாற என்று அடுத்தவரியில் கூறுவது மனத்தை இல்லாமல் அழித்துவிடுவது என்று பொருள் தரும்.  அவ்வாறு இருப்பவர் நற்பதம் காணும் ஏழை என்கிறார் அடுத்து.  இங்கு ஏழை என்று குறிப்பிடுவது ஏழு என்னும் எண்ணால் குறிக்கப்படும் ஏழு நிலைகளை, சக்கரங்களை.  அவையே நற்பதங்கள். 


No comments:

Post a Comment