Monday 6 June 2016

415. ukaara deeksha- benefits of worshipping moola sakthi

Verse 415
உகார தீக்ஷை
திறமான சத்தியடா உகார சக்தி
சிவசிவா மனம் நிறுத்திப் பூசை செய்தால்
உரமான தேகமடா உறுதியாகும்
உற்ற கலைக் கியானமடா சித்தியாகும்
பரமான அண்டபதம் கைக்குள்ளாகும்
திருவான பூரணமுஞ் சித்தியாகும்
திறமான பராபரமுந் தாந்தானாகும்
பதிவான மூலசத்தி பலந்தான் பாரே

Translation:
Ukaara deeksha
The capable Sakthi is the ukaara sakthi
Siva sivaa!  If the mind is arrested and puja performed
The healthy body will become firm
The kalai gnana siddhi will be attained
The param, the locus of macrocosm will come under control
Siddhi of Thiru, poorna will be attained
The Paraparam will become self,
See the effect of the mulasakthi/primordial sakthi.

Commentary:
Agatthiyar explains the primordial power, mula sakthi, here.  He says that when the sakthi, the ukara is worshipped, arresting the mind then the body will become strong, the kalai jnana or the wisdom of kala will be attained along with the status of Param, the locus in macrocosm.  Poorna siddhi will be attained and Paraparam will become the Self.  Thus, the yogin attains the supreme state by worshipping Mulasakthi or the primordial energy.


இப்பாடலில் மூல சக்தியை விளக்குகிறார் அகத்தியர்.  இந்த சக்தியே உகார சக்தி என்றும் அதை மனதை நிறுத்தி வழிபடுவோர்கள் வலிமையான உடலைப் (காய சித்தி) பெறுவர் என்றும் கலைஞான சித்தியும் திரு எனப்படும் பூரண சித்தியும் பெறுவார் என்றும் பரம் எனப்படும் அண்ட பதவி அவருக்குக் கிட்டும் என்றும் கூறுகிறார் அகத்தியர்.  பராபரமே அவரது தான் என்று ஆகும் என்றும் அவர் கூறுகிறார்.  இவ்வாறு ஒருவர் உச்ச நிலையை மூலசக்தியை வழிபடுவதன் மூலம் அடைகிறார் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment