Wednesday, 29 June 2016

437. Magical sword-kadgamala ?

Verse 437
மந்திரவாள் தியானம்
கெதியான கேசரமே மணியின் சோதி
கணேசனடி மூலமடா ஆதியந்தம்
மதியான மையமடா ருத்திரமூலம்
மகத்தான வாசியடா சீம் றீங்கென்று
விதியான எழுத்தறிந்து ஓதுதற்கு
விளம்பரிது ஓங்கார விஞ்சை மூலம்
பதியான பதியறிந்து மந்திரவாளை
பத்தி மனங் கொண்டபடி இன்னங் கேளே

Translation:
Dhyana of the magical sword

The path of kecharam is the effulgence of the jewel
The bottom terminus of Ganesan is the beginning
The middle, that of the mind is the rudra mula
The great vaasi is shreem reeng
To recite, knowing the letters
It is hard to explain.  The origin, the omkara
Knowing the locus, the magical sword
Mind with devotion, listen some more.

Commentary:
Kecharam means roaming in space.  The space is the sushumna nadi in the body and beyond the sahasrara.  Thus when the yogin’s consciousness roams in the gathi or path it experiences the effulgence of the jewel at the ajna.  The ajna is the top terminus the bottom terminus being muladhara the locus of Ganesha and the middle locus is anahata, the locus of Rudra. The mantra for vaasi to go through this path is shreem and reeng.  These mantra are part of the total sequence that should be uttered.  Agatthiyar is not giving the full mantra as it should be learnt from a guru.  Agatthiyar introduces a new concept, the magical sword, here.  The last two lines can be explained as “holding the magical sword listen to the nature of the mind” or by holding on the magical sword with mind sufficed with devotion.

An important step in Srividya upasana is reciting the Devi Kadgamala stotra.  Kadgam means sword.  Agatthiyar is referring to that concept here.  As this stotra has several bhija akshara ne has to say it only after getting upadesa from a guru.

கேசரம் என்றால் வெளியில் சுற்றுதல் என்று பொருள்.  இங்கு வெளி என்பது உடலினுள் சுழுமுனை நாடி, உடலின் வெளியில் பரவெளியாகும்.  இந்த கதியில், வழியில், போகும் யோகி ஆக்ஞையில் மணியின் ஒளியைப் பார்க்கிறார்.  இவ்வாறு இந்த வழியின் முடிவு ஆக்ஞை, முதல் கணபதியின் இடமான மூலாதாரம்.  நடுவில் இருப்பது ருத்திரனின் தளமான அனாகதம்.  வாசிக்கான மந்திரம் ஸ்ரீம் ரீங்.  இந்த மந்திரங்கள் முழு மந்திரத்தின் பகுதியாகும்.  அதை ஒருவர் குருமுகமாகவே அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால் அகத்தியர் இந்த முக்கிய பீஜங்களை மட்டும் கொடுத்துள்ளார்.  இப்பாடலில் மந்திர வாள் என்ற ஒரு புதிய கருத்தைக் கூறுகிறார் அகத்தியர்.  கடைசி இரண்டு வரிகளுக்கு மந்திர வாளைப் பற்றி மனத்தைக் கொண்டு கேள்” அல்லது “மந்திரவாளை பக்தி தோய்ந்த மனத்தைக் கொண்டு கேள்” என்று பொருள் கூறலாம். 


ஸ்ரீவித்யா உபாசனையில் தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் என்ற ஒன்று சொல்லப்படுகிறது. கட்கம் என்றால் வாள்.  இப்பாடலில் அகத்தியர் இதை மந்திர வாள் என்கிறார். பல பீஜ மந்திரங்களைக் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பிறகே சொல்ல வேண்டும். 

Monday, 27 June 2016

435. Kechari vidya

Verse 435   
தொட்டுமிகக் காட்டுவது அந்தரங்கத் தோடு
குறிபோல காட்டுவது சூக்ஷா சூக்ஷம்
கட்டுவது அங்கையடா இருகால் தொட்டு
காரணத்தால் தொட்ட இடம் கருணையாகும்
எட்டும் ரண்டுங் கூடியல்லோ திறவு கோலாய்
இதையறிந்து பூரணத்தால் அதிர்ந்து பார்க்க
கிட்டுமடா பூரணத்தின் வட்டம் பாரு
கேசரத்தின் கேசரியின் கிருபை பாரே

Translation:
That which is shown by touching, that which is shown
As a personal sign is subtlest of subtle
That which is tied is the beautiful hand, touching both legs
The place touched by the causality is mercy
With the eight and two coming together, as the key,
Knowing this and seeing with shock, by the poornam
It will be attained.  See the circle of poornam
See the mercy of kechari of kecharam.

Commentary:
Siddhas use the three expressions, “vitta ezhutthu, vidaadha ezhutthu and thotta ezhutthu”.  These correspond to the letters uttered where the air is let in or inhibited.  Thus, vitta ezhutthu is akara where the air is allowed to come inside, vidaadha ezhutthu is makaara uttered by closing the mouth and not letting the air in and thotta ezhutthu is ukara where the air touches the mouth when uttered.  Thus, “thuttukkaattu” in this expression means ukaara. 
Agatthiyar says that it is the subtle of the subtle.  The subtle is Sivam, akaara.  The subtle of subtle is ukaara.  The ukaara shows the nature of akaara as the supreme subtlety.  Thus “angai” is “am” or akaara. “iru kaal” or two legs are inhalation and exhalation.  “kaaranam” and “pooranam” means sivam and sakthi.  Thus, the supreme locus is reached by the mercy of the kaaranam or Supreme consciousness.  The key to attaining this state is “eight and two” or akaara and ukaara.  These two letters represent the numbers eight and two, in Tamil scipt.  This state is reached by being shaken by Sakthi.  Agatthiyar calls this as “quaken by the poornam”  The circle of poornam refers to the supreme state.  This is the mercy of sakthi, Kechari of the kecharam



சித்தர்கள் விட்ட எழுத்து, விடாத எழுத்து தொட்ட எழுத்து என்ற மூன்றைக் கூறுகின்றனர்.  இவற்றில் விட்ட எழுத்து என்பது காற்றை உள்ளே அனுமதிக்கும் அகாரம் ஆகும்.  அ என்று கூறும்போது வாயைத் திறப்பதனால் காற்று உள்ளே விடப்படுகிறது.  விடாத எழுத்து என்பது மகாரம் அல்லது ம் என்ற எழுத்து.  இது வாயை மூடியவண்ணம் உச்சரிக்கப்படுகிறது.  தொட்ட எழுத்து என்பது உகாரமாகும்.  உ என்று கூறும்போது காற்று வாயைத் தொட்டுக்கொண்டு வெளியே செல்கிறது.  இவ்வாறு விட்ட எழுத்து தொட்ட எழுத்து விடாத எழுத்து என்பவை அகார உகார மகாரன்களைக் குறிக்கும்.  தொட்டு குறியாகக் காட்டு என்று அகத்தியர் இங்கே கூறுவது உகாரத்தைக் குறிக்கும்.  அகார உகாரங்கள் காரணம் பூரணம் என்றும் அழைக்கப்படுகின்றன.  உகாரம் அகாரத்தை சிவத்தை, அதன் செயல்பாட்டு நிலையைக் குறிக்கிறது.  இவ்வாறு இது குறியாகிறது.  இதை சூட்சத்தின் சூட்சம் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு தொட்டுக் காட்டுவது அங்கை அல்லது அகாரம் இதை இருகால் எனப்படும் உள்மூச்சு வெளிமூச்சு என்ற இரண்டால் காணலாம்.  இதைத் திறக்க உதவும் திறவுகோல் எட்டும் இரண்டும் அதாவது அகார உகாரங்கள்.  இந்த எழுத்துக்கள் தமிழ் எட்டு இரண்டு என்ற எண்களைக் குறிக்கின்றன.  அதை பூரணத்தால் அதிர்ந்து காணவேண்டும்.  அப்போது பூரணத்தின் வட்டத்தைக் காணலாம்.  இதுவே கேசரத்தின் சக்தியான கேசரியின் கருணை என்கிறார் அகத்தியர்.  கேசரி வித்யாவைப் பற்றிய விவரங்களை மேற்கூறிய தளங்களில் காண்க.

434. Saagaram

Verse 434
காணுதற்கு என்ன சொல்வேன் விதிதான் வேணும்
கண்டவர்கள் விண்டதுண்டோ கனியின் மார்க்கம்
பூணுதற்கு மனம் பூண்டு காலைப் பார்க்க
புலம்பி மனம் நிலையாதே மூலம் பார்க்க
தோணுதற்கு மும்மலமும் கண்டு போகுஞ்
சுகமாக சாகரத்தை அறிந்துகொள்வாய்
பேணுதற்கு ஏக வெளி சூக்ஷாசூக்ஷம்
புரிந்துகொள்வதற்குத் தொட்டுக் காட்டே

Translation:
To see, what shall I say, one should have fate
Has anyone who saw it explained it?
To adorn it, adorn the mind and see the breath
The mind will not abide (otherwise).  To see the muladhara
For it to appear, the triple faults will go away
You will comfortably know the sagaram
The singular space- to nurture, subtle of the subtle
Touch it and show- to understand.

Commentary:
Agatthiyar says that even though one puts in the effort fate should cooperate for it to become fruitful and those who experienced this state will not attempt to verbalize it as it is beyond any description.  This experience will occur when the mind abides.  Quietitude is not the natural state of the mind.  To bring the mind under control one should watch the breath.  Then all the faults will go away and muladhara will become perceptible.  Agatthiyar says that then one will know the sagaram.  Thus, this verse explains the name of this composition. Saumya sagaram  means ocean of wellness.  It is pool of nectar, the lalata cakra. This experience will reveal the singular space. 


யோகத்தின் உச்ச நிலையை அடைய ஒருவர் முயற்சிசெய்தால் மட்டும் போதாது, அதற்கு விதியும் ஒத்துழைக்க வேண்டும்.  அவ்வாறு உச்ச நிலையைக் கண்டவர்கள் அதை வார்த்தைகளால் விளக்க முனைய மாட்டார்கள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அந்த நிலை வார்த்தைக்கு அப்பாற்பட்டது.  இந்த அனுபவம் ஏற்பட ஒருவர் தனது மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.  அது இயற்கையாக ஏற்படாது.  மூச்சைக் கவனிப்பது மனத்தின் ஓட்டத்தை நிறுத்த ஒரு வெற்றிதரும் வழியாகும்.   இவ்வாறு செய்தால் ஒருவர் சாகரத்தை அறிவார் என்று அகத்தியர் கூறுகிறார். இவ்வாறு அவர் இந்த நூலின் பெயரை விளக்குகிறார். இதனால் சாகரம் என்றால் லலாடம், அமிர்த கற்பம் என்பது தெரிகிறது.  சௌமியம் என்றால் நன்மையை பயப்பது என்று பொருள்.  நன்மையைப் பயக்கும் கடல் அமிர்த்த கற்பம்.  இந்த அனுபவம் ஏகமான வெளியைக் காட்டும் என்கிறார் அகத்தியர்.

Saturday, 25 June 2016

433. The plantain bloomed, ketaki flowered

Verse 433
அமுர்தரசம் உண்ண
ஏழையென்றே யான் பார்த்தேன் என்னைப் போலே
ஏக நிராமயமான சோதிப்பாலை
காலையிலே கருவறிந்து கொண்டோருக்கு
கண்டபடி கண்டவற்குத் தொண்டு செய்வேன்
வாழையிலே தலைகுலை சாய்ந்த மார்க்கம்
வசையரியார் துறையறியார் மனத்தைக் காணார்
தாழையிலே பூப்பூத்து சனியுண்டாச்சு
சதாபோத யோகமதால் காணுவாயே

Translation:
I saw them as seven.  Like me
The milk of the eka niramaya jyothi
For those who knew the essence in the kaal
I will serve those who saw it as is
The path of the plantain that bloomed and fruited at the top
Those who do not know it do not know the path, they donot see the mind
The ketathi flowered and movement occurred
You will see by “sadhaa bodha yogam”.

Commentary:
Agatthiyar says that he saw all the seven, the essence of the singular faultless effulgence and that he would willingly serve those who saw them, like him, through the breath.  He says that the banana plant bloomed and fruited at the top.  It refers to the sahasrara blooming, the ketaki flowered on the top.  This could be experienced by sahda bodha yogam.


அகத்தியர் அந்த ஏழையும் தான் பார்த்தேன் என்றும் அவ்வாறு அதை ஏக நிராமய சோதியாகப் பார்த்தவர்க்குத் தான் எவ்வித தொண்டையும் செய்வேன், அதாவது, அவர்கள் மிக உயர்ந்த ஆத்மாக்கள் என்று கூறுகிறார்.  இந்த நிலையை அவர் வாழை தலைக்குலை சாய்த்தது தாழை பூப்பூத்தது என்று கூறுகிறார்.  இதை ஒருவர் சதாபோத யோகத்தால் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.   

432. Mother vaadham, the pauper

Verse 432
பாரடா இவளாட்டுக் காலேவாதம்
பத்திகொண்டு கண்டுபிடி வாதஞ் சித்தி
ஊரடா உப்பாலும் அப்பினாலும்
உள்ளபடி கண்டுபிடி வாதத்தாயைக்
காரடா முப்பூவிற் கட்டும் வித்தை
கையறிந்த ரசவாதங் கொள்ளையாச்சு
நாரடா நாறிமன மார்தான் கேழ்ப்பார்
நல்ல பதங்கண்டவர்கள் ஏழைதானே

Translation:
See son, the kaal that she shakes is vaadham
Holding it discover vaadha siddhi
The locus, through uppu and appu
Discover the mother vaadham in her natural state
Find out the trick of tying in the triple “poo”
The alchemy became accomplished
With the mind smelling offal, who will listen.
Those who saw the good locus are paupers/the seven.

Commentary:
The common expression, “kaalai aattudhal” or shaking the leg is used in the contect of yoga in this verse.  Agatthiyar says that the sakthi “shaking the leg” is vaadham or alchemy.  It means the flow of breath is due to Sakthi’s action.  That action produces the transformation or alchemy.  Agatthiyar also says that one should hold on to that kaal or leg, that is, breath and attain vaadha siddhi.  The mother, vaadha, should be discovered by uppu and appu or ukara and akara.  The trick of tying it in the muppu or triple salt/flower mentioned here means akara, ukara and Makara.  When one knows this trick then it is attainment of rasavaadha.  Rasa here means the saptha dhaatu in the body.  They are solidified into wax, as we saw before. The next line, “with the mind smelling offal” means the mind is destroyed.  He concludes this verse saying that those who saw the good locus “ezhai” which in the general sense means paupers.  In this context it means “those who saw the seven good loci” are those whose mind was destroyed and those who knew how to tie the rasa with the help of the triple salts-akara, ukara and makara.

சாதாரணமாக நாம் காலை ஆட்டுதல் என்று உபயோகிக்கும் தொடரை அகத்தியர் இங்கு யோக பரிபாஷையில் பயன்படுத்தியுள்ளார்.  சக்தி காலை ஆட்டுவதே வாதம் என்கிறார் அவர்.  இங்கு கால் எனப்படுவது மூச்சுக்காற்று.  அது உள்ளேயும் வெளியேயும் போவது சக்தியினால்தான்.  இந்தக் காலைப் பிடித்துக்கொண்டே வாத சித்தியைப் பெறவேண்டும்.  இங்கு வாதத்தாயை உப்பாலும் அப்பினாலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இங்கு உப்பு அப்பு எனப்படுபவை உகாரமும் அகாரமும் ஆகும்.  இவ்வாறு முப்பூவில் கட்டுவதை அறிந்துகொண்டால் அதுவே ரசவாதம் என்கிறார் அகத்தியர்.  இங்கு முப்பூ என்பது அகார உகார மகாரங்கள்.  ரசத்தைக் கட்டுவது என்பது உடலில் உள்ள திரவத்தை மெழுகாக்குவது.  ரசம் என்ற சொல் உடலில் உள்ள சப்த தாதுக்களைக் குறிக்கும்.  மனம் நாற என்று அடுத்தவரியில் கூறுவது மனத்தை இல்லாமல் அழித்துவிடுவது என்று பொருள் தரும்.  அவ்வாறு இருப்பவர் நற்பதம் காணும் ஏழை என்கிறார் அடுத்து.  இங்கு ஏழை என்று குறிப்பிடுவது ஏழு என்னும் எண்ணால் குறிக்கப்படும் ஏழு நிலைகளை, சக்கரங்களை.  அவையே நற்பதங்கள். 


431. Aacchi, Pecchi

Verse 431
சூக்ஷமென்ற ஆச்சியுட கலையைப் பாரு
சூதான மான கெதி இருகாலய்யா
சூக்ஷியினுள் சூக்ஷத்தின் காலைக்காண
கண்காட்சி யானாக்கால் வாதமாச்சு
தாக்ஷிஎன்ற நிஜக்காக்ஷி அமுர்தமுண்ண
தானறிந்த கண்காக்ஷி தானாய்நின்று
பேச்சி என்ற சூட்சமடா  பின்னேதுமில்லை
பிலமான அனுபோகியானார் பாரே

Translation:
See the kala of the mother (aacchi), the subtlety
The “sootham” the path are the two breaths
To see the air of subtlety within the witness
If the “eye” becomes visible it becomes the “vaadham” (transformation)
To consume the vision, the nectar of true vision,
To remain as self, the experienced vision
The subtlety of speech- there is none other than this
They became the strong anubhogi (enjoyer).

Commentary:
Agatthiyar says that the sakthi kala are the two airs.  When visions are seen within the subtlety it is rasavadha or alchemy of transformation.  To consume or enjoy the vision, the nectar the speech should be addressed.  Then one will become anubhogi or enjoyer of vision.  That is, when the yogin reaches the state of silence, he will experience the visions and perceive the self.
The visions become perceivable by the breath flowing through the ida and pingala nadi, pranayama.

The word “pecchi” usually refers to the Vakdevi, sarasvathi.  Here Agatthiyar uses this term to refer to the sakthi of speech.  Speech is the gross form of sakthi which is the subtlety.


ஆச்சி எனப்படும் சக்தியின் கலையைப் பார்க்க இரு கால் எனப்படும் உள்மூச்சு மற்றும் வெளி மூச்சு என்ற இரண்டுமே வழி என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு பிராணாயாமத்தயால் சக்தி எனப்படும் குண்டலினியை எழுப்பினால் பல காட்சிகள் காணலாகும்.  இந்த காட்சிகளை அந்த யோகி கண்டு அனுபவிக்கும் அனுபோகியாகிறார் என்கிறார் அகத்தியர். 

பேச்சி என்ற பெயர் பொதுவாக வாக்தேவியான சரஸ்வதியைக் குறிக்கும்.  இங்கு அகத்தியர் வாக்குக்கு அதிபதியான தெய்வத்தைக் குறிக்கிறார்.  பேச்சு என்பது தூலம் அதற்கான சக்தியான பேச்சி சூட்சமாகும்.  

430. Para jnana shrikona mother's path

Verse 430
வாங்கியிரு கலையறிந்து மவுனமா
மவுனமென்ற மாங்கனியை கனிவாயுண்க
ஓங்கிஎழு சபைதாண்டப் பிலமுண்டாகும்
ஒடுங்கி மனக்கால் கெதியை ஊணிப் பாரு
பாங்குபெற அண்டரண்டஞ் சுற்றி மீளும்
பரஞான ஸ்ரீ கோணத் தாயினாட்டு
மாங்கனி தானுண்ட பிலங் கெதியுண்டாச்சு
மகத்தான சூக்ஷமென்ற சூக்ஷம் பாரே

Translation:
Receiving it knowing the two kala,
The silence, the mango fruit, consume it with mercy
The strength to cross the seven sabhas will occur
For the mind to abide, see the gati (flow) of the breath
It will roam around the universes in a proper way
The land of the Parajnana Srikona mother
The speed/path with the strength from consuming the mango fruit occurred
See the great subtlety.

Commentary:
Agattiyar says that when the mango fruit, the supreme silence, is consumed the yogin with get the strength to cross the seven cakras or sabhas.  The path that the breath traverses should be watched to make the mind abide in quietitude.  The vaasi will roam around the universe, the path of Sakthi whom Agatthiyar calls as the “Parajnana srikona thaai”.

This verse reminds us of the story of Ganesha and Subramanya competing for the mango fruit.  While Ganesha got it after circumambulating Siva and Sakthi Muruga goes around the world on his peacock.
Ganesha represents the kundalini sakthi which reaches the state where sakti and siva are together, when nadha and bindu are together. This state results in the mango fruit of the great silence.  Muruga on the other hand travels on ahamkara in the external world.  His journey was external instead of being inwards and hence he lost out on the mango fruit.  This seems to be the inner meaning of the story. Ganesha travelled the worlds created internally by the cakra. 

மாங்கனி எனப்படும் மவுனத்தை உட்கொண்டால் ஏழு சபைகளைத் தாண்டுவதற்குத் தேவையான பலம் கிடைக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மௌனம் வாசியால் ஏற்படுகிறது என்று முந்தைய பாட்டில் கூறினார்.  இத்துடன் மனத்தை அடக்க வேண்டும் என்றால் மூச்சின் கதியைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  இந்த வாசி அண்டரண்டம் முழுவதும் சுழன்று திரியும் என்றும் அவர் கூறுகிறார்.  அது திரியும் பாதையை பர ஞான ஸ்ரீ கோணத் தாயின் கதி என்கிறார் அவர். 


இப்பாடல் முருகனும் கணபதியும் மாங்கனிக்காக போட்டியிட்ட கதையை நினைவுபடுத்துகிறது.  கணபதி சிவசக்திகளை பிரதட்சணம் செய்து மாங்கனியைப் பெற்றார்.  அதாவது நாத பிந்துக்கள் ஒன்றாக இருக்கும் நிலையை அடைந்து மாங்கனியைப் பெற்றார்.  அவர் மேற்கொண்ட பாதை உள்ளே குண்டலினியின் கதி.  முருகனோ அகங்காரமான மயிலின் மேல் ஏறி வெளியுலகைச் சுற்றி வந்தார்.  அவருக்கு மாங்கனி கிடைக்கவில்லை.  இதுவே இந்தக் கதையின் சூட்சுமப் பொருளாகத் தோன்றுகிறது.

Friday, 24 June 2016

429. Para jnana poornam, silence

Verse 429
ஞானமென்ற ஞானமடா மவுனஞானம்
நாதாந்த போதமென்ற ஞானந்தன்னை
மோனமென்ற மனதடங்கி ஞானப்பாலை
முத்தியிருகலை அறிந்து ஊதிவாங்க
பானமென்ற பானமடா மதுரபானம்
பரஞான பூரணமாய் நின்றுபாயும்
தானமென்ற தலமறிந்து வாய்வாலுங்க
சங்கையுடன் வாசிகொண்டு வாயால் வாங்கே

Translation:
Jnana, the wisdom is the wisdom of silence
The jnana which is nadhanatha bodham
The mind abiding as silence, the milk of wisdom
The liberation, consume it by blowing the two airs
The drink, the madhura paanam
Will flow uninterrupted as parajnana poornam
Knowing the locus, the sthana and receiving with air
With the help of vaasi, receive it, with attention, by the mouth.

Commentary:
Thirumular, while describing the steps of manifestation says that originally there was parapam.  Bodham or awareness occurred in it and it became parapari.  Thus, the original male and female principles attained identity when awareness emerged.  Agatthiyar is conveying the same idea here.  The original state is the nadhantha bodham, the state beyond the nadha.  It is the jnana or wisdom of silence.  Here the mind abides and silence occurs.  This state results in the emergence of the milk or amrit.  This is the para jnana poornam.  It is consumed with the help of inhalation and exhalation, with the help of vaasi. 


திருமூலர் திருமந்திரத்தில் தோற்றத்தை விளக்கும்போது ஆதியில் இருந்தது பராபரம்.  அதில் போதம் தோன்ற ஞானம் தோன்ற அது பராபரை என்றாகியது.  இவ்வாறு ஆண் பெண் தத்துவங்கள் தமது தனியிருப்பைப் பெற்றன.  அகத்தியரும் அந்த கருத்தையே இங்கு கூறுகிறார்.  இந்த போத நிலை என்பது நாதாந்த போதம் என்றும் பர ஞான பூரணம் என்றும் அவர் கூறுகிறார். இந்த நிலையை வாசி எனப்படும் பிராண மூச்சு கலவையால் உள்மூச்சு வெளிமூச்சு என்ற இரு காற்றுக்களால், அதாவது பிராணாயாமத்தினால் பெற வேண்டும் என்கிறார் அகத்தியர்.

427. Mango fruit

Verse 427
மாங்கனி
வாங்கியது சுவையறிய மதுரங்கொண்டு
மனங்கனிய மாவடியில் மலர்க்கண் சாரி
பாங்குபெற குருவடியில் பதிவாய் நின்றால்
பதிவாக சிவயோகப் பலத்தினாலே
தாங்கி நின்ற மூலமுதல் ஆராதாரந்
தனக்காசி புவனமெல்லாம் தானேதானாய்
ஓங்கியதோர் வாசியுட பலத்தினாலே
ஊத்தை மனைபிலத்துதடா உறுதிப்பாரே

Translation:
Mango fruit
Consuming the “madhuram” that was received, knowing its taste
The melting mind is placed at the flower in the great bottom
If remained firmly in the guru adi, to attain the state
Due to the strength of the siva yogam
The six adhara, from muladhara
Will belong, all the worlds as self,
Due to the strength of the vaasi that flows greatly
The destructible house became strong, see it.

Commentary:
Siddhas call the amrit that flows from the lalata by different names.  Two among them are the mango fruit, the maangaai paal or essence of the mango.  Scientifically, the fluid or the nectar emerges from the pineal gland.  Its shape resembles a mango. 
When the nectar flows down the yogin consumes it and places his attention at the muladhara.  Agatthiyar calls this as guru adi or the bottom terminus that grants the light of awareness.  Then all the six adhara will come under control. Everything will be perceived as self.  The vaasi that flows with great force will draw in the universal prana sakthi and strengthen the body.  This is called kaya siddhi.

அமிர்தம் சுரக்கும் பகுதி நமது உடலில் பினியல் கிளான்ட் எனப்படுகிறது.  அதன் தமிழ்ப்பெயர் திரிகோண குண்டலி.  இதன் அமைப்பு ஒரு மாங்கனியைப் போல உள்ளது.  அதிலிருந்து சுரக்கும் அமிர்தத்தை சித்தர் பல பெயர்களில் அழைக்கின்றனர்.  அவற்றில் மூன்று, மாங்கனி, தேமாங்கனி, மாங்காய்ப்பால் என்பவை.


லலாடத்திலிருந்து அமிர்தம் சுரக்கும்போது அதை உறிஞ்சிக் குடிக்கும் யோகி தனது கனிந்த மனத்தை குரு அடி அல்லது மலரடி எனப்படும் மூலாதாரத்தில் வைக்கிறார்.  அப்போது சிவயோகத்தின் பலத்தினால் ஆறு ஆதாரங்களும் வசப்படுகின்றன.  பிரபஞ்சமே தானாகத் தெரிகிறது.  பெரும் வேகத்துடன் ஓடும் வாசியின் பலத்தினால் பிரபஞ்ச பிராண சக்தி உடலுள் வந்து அழிவுக்குட்பட்டதான உடலை வலுப்படுத்துகிறது.  இதுவே காயசித்தி எனப்படுகிறது. 

Thursday, 23 June 2016

428. The Srikonam

Verse 428
உறுதியுள்ள பஞ்சகண பஞ்சமூலம்
உண்மையென்ற ஸ்ரீகோண மந்தத்தாலே
பருதி மதி சுடரொளியாய் அண்டஞ் சூழ்ந்து
பதிமணியாந் திசநாத வாசியாலே
சுருதி வாசியம்மா வாசியாலே
சுகசீவ பிராணகலை சோதியாகி
சரிதையொடு கிரிகை சிவயோகமாகி
சகலகலைக் கியானமென்ற ஞானமாமே

Translation:
The firm pancha gana, pancha moolam
Due to the truth, the terminus, Srichakra
The universe surrounded by the light of sun, moon and flame,
Due to the disanadha vaasi, the jewel in the locus
Due to the sruthi, the vaasi, the ammaavaasi,
Becoming the sukha jeeva prana kala jyothi,
Becoming charya, kriya and sivayoga
The jnana- the sakala kala jnana.

Commentary:
The Supreme state of union of all the dichotomies including siva and sakthi is represented by the Srichakra which is a map of the universe.  It represents the universe surrounded by the three lights, the sun, the moon and the fire or flame.  These three flames represent the nadha, bindhu and consciousness.  The vaasi is the united breath and prana that is regulated.  The sruthi is nadha and ammavaasi is the supreme state where the vaasi flows with great force.  The flame of sukha jeeva prana kala jyothi is the state of union of limited prana in the body and the universal prana.  The four states of charya, kriya, sivayoga and jnana represent different states of the soul namely, salokhyam, sameepyam, saroopyam and sayujyam. 


ஸ்ரீ வித்யா உபாசனையின் முக்கிய அங்கமான ஸ்ரீ சக்கரம் என்பது ஒருமை நிலையைக் குறிக்கிறது.  சிவ சக்தி, நாதம் பிந்து ஆகியவை ஒன்றாக இருக்கும் நிலையையும் அண்டத்தை சூழ்ந்துள்ள சூரியன் சந்திரன் அக்னி என்ற மூன்று ஒளிகளையும் அது குறிக்கிறது.  திசநாத வாசி சுருதி, பெரும் வேகம் கொண்டு ஓடும் அம்மாவாசி சுக ஜீவபிராண கலை ஜோதி, நான்கு பாதங்களான சரியை, கிரியை, யோகம் ஞானம் அல்லது சாலோகம், சமீப்பியம், சாரூப்பியம் மற்றும் சாயுச்சியம் என்ற நான்கு நிலைகளையும் அது குறிக்கிறது.

Wednesday, 22 June 2016

426. When amrit flows

Verse 426
தானென்ற மவுனாதி மவுனமாது
தனையறிந்த காலமதில் தானேதானாய்
தேனென்ற திவ்வியரச பானங்கொள்ள
சிவந்த மலர்க்குவிந்தபூ விரிந்தகாலம்
ஊனென்ற மதுராச மெழுகுதன்னில்
உகந்து மனங்கொண்டு வாய்வேகமாகி
கோனென்ற குருவருளா லுருஞ் சிவாங்கி
குவிந்தமலர்க் கனிந்த மணி சுவைத்து வாங்கே

Translation:
The silence, the original silence, is the lady
At the time when self was realized
To consume the honey-like drink of divya ras
At the time when the ruddy flower bloomed
In the body, the madhu raja wax
Becoming happy mentally, the air picking up speed
Drawing it in forcefully, by guru’s grace
The closed flower, the matured jewel, receive it tasting it.

Commentary:
Agatthiyar is talking about the amrit that flows as a result of vaasi yogam.  He calls it divya rasa paanam.  When this occurs the chakra are fully opened. He calls this as the time when the red hued flower bloomed fully.  The body is called madhu raja mezhugu or madhu raja wax.  The prana flows with a great force.  At this time the amrit starts flowing.  Agatthiyar says that this occurs due to guru’s grace and that one should suck it in with force.  He also calls this as the matured jewel and says that one should enjoy tasting it.


அமிர்தம் சுரக்கும் நிலையைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார் அகத்தியர்.  அமிர்தத்தை அவர் திவ்ய ரச பானம் என்கிறார்.  தேன் போல இனிக்கும் அது சுரக்கும்போது பூக்களாகக் குறிக்கப்படும் சக்கரங்கள் முழுவது விரிந்த நிலையில் இருக்கின்றன.  மனம் ஆனந்த நிலையில் லயித்திருக்கிறது.  வாயு அல்லது பிராணம் மிக வேகமாக ஓடியவாறு இருக்கிறது.  அப்போது மதுராஜமெழுகு எனப்படும் உடலில் குருவருளால் அமிர்தம் சுரக்கிறது.  அதை ஒருவர் சுவைத்தவாறு உறிஞ்ச வேண்டும் என்கிறார் அகத்தியர்.

Sunday, 19 June 2016

425. Inba rasa kaayaadhi karpam- kayakalpa of bliss

Verse 425
கிண்டி மிகத்தானெடுத்து ரவியில் போட்டு
கிருபையுடன் பீங்கான் தன் தாளிச்சேர்த்து
அண்ட கேசரிமாது தன்னைப் போற்றி
ஆக்கை நிலை தனையறிந்து அந்தி சந்தி
குண்டுமணி அளவெடுத்துக் கொண்டாயானால்
குடிலமென்ற தீவினைகள் காணாதோடும்
எண்திசையும் கீர்த்திபெற வாழ்வாரப்பா
இன்பரச காயாதி கற்பந்தானே

Translation:
Stirring it, placing it in ravi
Collecting it in the ceramic, with mercy,
Praising the lady anda kechari
Knowing the state of the body, during ends and junctions
If a small (bead size) is consumed
The kutila, the evil karma will disappear
They will live with glory in all eight directions
This is kaayaadhi karpam of blissful rasa.

Commentary:
Agatthiyar is continuing the previous verse.  He says that the product of sakti, siva, vaalai, nadha, bindhu, prana and consciousness are merged together to draw down the nectar which is saved in the vishuddhi.  It is consumed or brought down to muladhara the terminus (andhi) and manipuraka twilight (sandhi).  Then all the evil karma will run away and the yogin will live gloriously. He calls this as “inba rasa kaayaadhi karpam” the potion that grants inba rasa or bliss.


முந்தைய பாடலைத் தொடரும் அகத்தியர் மேற்கூறிய பொருட்களை நன்றாகக் கிண்டி பீங்கானில் சேகரிக்க வேண்டும் என்கிறார்.  அதாவது, நாதம், பிந்து, வாலை, பிரபஞ்சப் பிராணன், உணர்வு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, துவாதசாந்தம் அல்லது அண்டகேசரி சக்தியிலிருந்து அமிர்தத்தைக் கீழே இறக்கி அதை அந்தி எனப்படும் மூலாதாரத்தையும் சந்தி எனப்படும் மணிபூரகத்தையும் அடையச் செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்தால் தீவினைகள் ஓடிவிடும், ஒருவர் எட்டு திசைகளும் போற்ற கீர்த்தியுடன் வாழ்வார் இதுவே இன்ப ரச காயாதி கற்பம் என்கிறார் அகத்தியர்.

424. Sakthi uppu thailam

Verse 424
சத்தியுப்பு தயிலம்
சேரப்பா அஞ்சையுமே ஒன்றாய்ச் சேர்த்து
திறமாக மத்தித்து ரவியில் போடு
சாரப்பா இன்னமொரு கருமானாங் கேள்
சத்தியுப்பு தன்னுடனே வீரம்பூரம்
காரப்பா கருவறிந்து சேர்த்துக் கொண்டு
கவசமத்தில் தானமுழ்த்தித் தயிலம் வாங்கி
நேரப்பா முன்சொன்ன அஞ்சும் போடே
நிசமான தயிலமதை விட்டுக் கிண்டே

Translation:
The oil of salt of Sakthi (sakthi uppu)
Assemble all the five together
Center it and place it in ravi
Listen to another preparation
Along with sakthi salt add veeram and pooram
Adding them knowing the composition
Immersing in the armour and extract the medicinal oil
Add the previously mentioned five
Stir it adding the true medicinal oil.

Commentary:
The philosophical explanation:  the five from previous verse- sakthi, siva, vaalai, poornam and ravi bhijam.  They are nadha, bindhu, kundalini which is a combination of breath, prana, mind and consciousness, and akara.
The sakthi uppu is ukara.  Veeram and pooram (verse 319) was the prapancha prana or the space principle. They are immersed in the armour which may be the body or the sushumna nadi.  The oil is the fluid in the body.  To this is added the above five and stirred with the medicinal
Agatthiyar is indicating seed letters or bhija akshara that are recited during this process.  These mantra should be obtained from a guru.  Hence, he has not mentioned them explicitly.

இப்பாடலுக்குத் தத்துவ விளக்கம்:  ஐந்து என்றது சிவ சத்திவாலை, பூர்ணம் மற்றும் ரவி பீஜம். சிவ சக்தி வாலை என்பவை நாதம், பிந்து, குண்டலினி அல்லது சிகாரம் என்பதை முன்னே பார்த்தோம். சக்தி உப்பு என்பது உகாரம், வீரம் பூரம் என்பது பிரபஞ்ச சக்தி என்று முன்பு அகத்தியர் கூறினார்.  இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதிலிருந்து வரும் தைலத்தில் மேற்கூறிய ஐந்தையும் சேர்த்து கிண்ட வேண்டும் என்கிறார் அகத்தியர்.


இங்கு கூறப்பட்டுள்ளவை மந்திர உச்சரிப்புடன் பிராணன், பிரபஞ்ச சக்தி, நாதம், பிந்து, உணர்வு மற்றும் மனம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் குண்டலினி யோகத்தின் வழி முறைகள்.  இவற்றை ஒருவர் குருமுகமாகப் பெற வேண்டும் என்பதனால் அவற்றை வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கொடுக்கிறார்.