Tuesday 24 November 2015

248. Iyama- 11 parts

Verse 248
வகையான சமாதியது வகைதான் அஞ்சு
மார்க்கமுடன் இது விபரம் வழுத்தக்கேளு
தகையாதே அங்கிஷையும் சத்தியதினோடு
தானான அந்திகமும் பிரம்மங் கேளு
தேனான மட்சையோடு திருதி கூடம்
தன்மையுள்ள யிதற்காசம் சவுசத்தோடு
வானான யேழ்வகை பதினொன்றுந் தான்
மார்க்கமுடன் கண்டறிந்து வகையாய் நீயும்
ஊனான காயமதை யறிந்துக்கொண்டு
வுறுதியுடன் அஷ்டாங்க யோகஞ் செய்தால்
தேனான அமிர்தரசங் கொள்ளலாகும்
சிவசிவா நேமமதை செப்பக் கேளே

Translation:
Hear about the types of Samadhi, they are five
Listen to me give you the details.
The ahimsa, satyam,
astheyam brahmacharyam, 
kshama, aparigraha, dhruti
daya, aarjavam, mithaahaaram and soucham.  
The sky, way to rise are eleven
knowing them well, 
knowing about the body
if you perform ashtanga yogam
It will be possible to consume nectar
Sivasivaa listen about niyamam.

Commentary:

Agatthiyar is talking about iyama, even though the song does not have a title.  
Similar to Chandilya Upanishad, Tirumandiram and Varaha upanishad Agatthiyar is also mentioning 11 parts in iyama.  This is different from  Patanjali's system which lists only five parts.  

The eleven steps of iyama are ahimsa, satyam(truth), astheyam (not stealing), brahmacharyam (control of senses), kshama (forgiveness), aparighraha (controlling greed), druthi (firm mind), dayaa (mercy), aarjavam (no pretenses), mithaahaaram (controlled food), soucham (purity, cleanliness). These will teach about the nature of body. 

There seems to be some scribal error in the verse. 


சமாதி ஐந்து வகைப்படும் என்று கூறி இப்பாடலைத் தொடங்கும் அகத்தியர் பதினோரு பகுதிகளைக் கொண்ட இயமத்தைப் பற்றி இங்கு கூறுகிறார். இவர் தரும் பட்டியல் சாண்டில்ய உபநிஷத், திருமந்திரம் மற்றும் வராக உபநிடத பட்டியலை ஒத்துள்ளது.  
பதினோரு பகுதிகள் அஹிம்சா (கொல்லாமை), சத்தியம் (வாய்மை), அஸ்தேயம் (களவாமை), பிரம்மசரியம் (புலனடக்கம்), க்ஷமா (மன்னிக்கும் தன்மை), அபரிக்ரகம் (பேராசையைக் கட்டுக்குள் வைத்தல்), த்ருதி (மனவுறுதி), தயை (கருணை), ஆர்ஜவம் (பொய்யின்மை), மித ஆகாரம் (அளவான உணவு), சௌசம் (தூய்மை) என்பவை.

இப்பாடல் பதஞ்சலியின் பட்டியலைவிட வேறுபட்டுள்ளது.  
இப்பாடலில் சில தவறுகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment