Monday 16 November 2015

236. Maaranam-2

Verse 236
எண்ணப்பா ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
என்ன செய்வேன் மாரணந்தான் சித்தியாகும்
நண்ணப்பா மாரணந்தான் சித்தியானால்
நாடுமுன்னே சகலபிணி மாண்டு போகும்
கண்ணப்பா தான் கெடுக்கச் சத்துருவின் பேரை
கருணையுடன் தானினைத்து மாரணத்தே யோத
முன்னப்ப குண்ணியவன் மாண்டு போவான்
மூர்க்கமுடன் மாரணத்தை யேற்றியூதே

Translation:
If it is recited thousand and eight times
What can I do, death with be intended
If maarana siddhi is attained
All the diseases will die even before seeking them (to destroy)
If you wish to destroy the enemy
Intending maaranam for them and reciting
Will make him die
Intende maaranam with force, raise it and recite

Commentary:
Agatthiyar shows that maaranam will make all diseases run away even before seeking them to get rid of them.  It is also effective in killing one’s enemies.  He says that the person will decrease in stature and die.  “kunnam” generally refers to leprosy where parts of a person decrease and fall off.


மாரண சித்தி எல்லா நோய்களையும் ஓடிவிடச் செய்யும்.  ஒருவர் அவற்றைத் தேடி ஒழிக்க முனைவதற்கு முன் இந்த சித்தி அவற்றை ஓட்டிவிடும் என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த சித்தி ஒருவரது எதிரிகளையும் அழிக்கும்.  மாரணத்தை விரும்பி ஒருவர் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த எதிரி குண்ணிச் சாவார் என்று அகத்தியர் கூறுகிறார். “குன்னம் அல்லது குண்ணம்” என்பது பொதுவாக தொழுநோயைக் குறிக்கும்

No comments:

Post a Comment