Monday 16 November 2015

235. Maaranam-1

Verse 235
மாரணம்
சித்தியுள்ள வேஷணத்தைச் சொன்னேன் மைந்தா
தீர்க்கமுள்ள மாரணத்தைச் செப்பக் கேளு
பத்தியுடன் தென்கிழக்கு முகமாய்க்கொண்டு
பாலகனே விபூதியை உத்தளமாய்ப் பூசி
வெத்திபெற வேங்கையாசன மேற்கொண்டு
வேகமுள்ள எட்டிமணி கையால் வாங்கி
முத்தியுடன் உக்கிரகண பதியின் சூக்ஷம்
மூர்க்கமாய் ஓம் றீங் நசியென்றெண்ணே

Translation:
Son, I told you about vidveshanam
Now hear about maaranam
Facing the southeast, with devotion
Son, adorn the sacred ash
To attain success sit on plank made of vengai tree (Pterocarpus marsupium)
Hold the etti” beads (nux vomica)
The subtlety of Ugra Ganapathy
Think, with force, om reeng nasi.

Commentary:
Agatthiyar starts to describe maaranam.  This accomplishment is said to confer death to those intended.  Agatthiyar says that the yogin should sit facing south east and adorn the sacred ash.  He should sit on a plank made of Vengai tree and hold beads made of nux vomica.  He should contemplate on Ugra Ganapathy and recite om reeng nasi.


அகத்தியர் வித்வேஷணத்தை அடுத்து மாரணத்தை விளக்கத் தொடங்குகிறார்.  மரணம் என்பது மரணத்தை ஏற்படுத்துவது.  அகத்தியர் இந்த மாரணம் எவ்வாறு ஒரு யோகிக்கு உதவுகிறது என்று மூன்று பாடல்களில் விளக்குகிறார்.  இந்த சித்தியைப் பெற ஒரு யோகி தென் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து விபூதியைப் பூசி வேங்கை மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து கையில் எட்டி மணி மாலையைக் கையில் கொள்ள வேண்டும்.  இந்த சித்திக்கு அதிபதி உக்கிர கணபதி.  இதற்கான மந்திரம் ஓம் ரீங் நசி என்பது.

No comments:

Post a Comment