Saturday 7 November 2015

225. Why should one perform sthambanam?

Verse 225
வாரான தம்பனந்தான் என்னவென்றால்
மகத்தான துஷ்டரொடு மிருகமெல்லாம்
நேராக உன்னுடைய சமுகங் கண்டால்
நேர்மையுடன் மனதொடுங்கி தம்பனமேயாவார்
பேரான வாய்வுடனே நெருப்புத் தண்ணீர்
பிறளாமல் தம்பிக்கும் பெருமையாகக்
கூரான நடன கணபதினாலே
கூர்மையுடன் சகலமுந்தம் பனமாம்பாரே

Translation:
If it is asked, “what is sthambanam?”
Along with evil people, all the animals
When they see your presence
Will have their minds abide and will be arrested
Along with air, fire and water
Will also freeze in their action
Because of the Nadana Ganapathy
Everything will be arrested, see this.

Commentary:
Agatthiyar describes the sthambanam in this verse.  He says that it is freezing or arresting of evil people, animals and all the natural elements such as water, fire and air.  When they see the yogin their natural tendency will be arrested due to Nadana Ganapathy. Why do Siddhas practice this siddhi?  To free themselves from the evil actions of people and animals so that their tapas is not harmed and also to arrest the natural tendency of fire or water so that specific tapas that should be performed within them could be undertaken easily.

It is interesting to note that the mobile form of Ganapathy who is usually depicted in a fixed pose causes the arrest of movements of other entities.

ஸ்தம்பனத்தை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  ஸ்தம்பனம் என்பது பொருட்களின் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது.  தீயமக்களின் செயல்கள், துஷ்ட மிருகங்களின் செயல்கள் காற்று, நெருப்பு நீர் ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவற்றை ஸ்தம்பனத்தினால் நிறுத்தலாம்.  எதற்காக சித்தர்கள் இந்த கர்மத்தைச் செய்ய விழைகின்றனர் என்றால் தீயவற்றால் தமது தவத்துக்குக் கேடு வராமலும் நீர் நெருப்பு ஆகியவற்றின் மத்தியில் செய்யவேண்டிய தவத்துக்காகவும் இந்த சித்தியைப் பயன்படுத்துகின்றனர். 

பொதுவாக அசைவற்ற உருவில் காட்டப்படும் கணபதியின் அசைவுள்ள உருவம் பிற வஸ்துக்களின் அசைவை நிறுத்துகிறது என்று இப்பாடல் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment