Saturday 14 November 2015

230. Real purpose of aakarshanam

Verse 230
ஓதியே ஆயிரத்தெண் ணுருவே செய்தால்
உத்தமனே கிருசனந்தான் சித்தியாகும்
நீதிஎன்ற கிருசனந்தான் உறுதியாலே
நினைத்தபடி நின்றுவிளை யாடும்பாரு
சோதியென நின்றுவிளை யாடுதற்குச்
சொல்லுகிறேன் வாலைகண பதியினாலே
ஆதியென்ற வினைகளெல்லாம் அகன்று போகும்
அடங்காத விதங்களெல்லாம் அடங்கும் பாரே

Translation:
If it is recited thousand eight times
The supreme one! Kirushana siddhi will occur
Due to the definitue of kirushanam
Dharma or neethi will dance as wished
For that to dance as jyothi
I will tell you.  Due to Vaalai Ganapathy
All the origin, karma will go away
Everything will abide, see it.

Commentary:
Akarshana siddhi has Vaalai Ganapathy as the deity.  Vaalai is kundalini sakthi.  One's karma are nullified by kundalini sakthi.  Thus the intended purpose of aakarshana is to attract all the original karma and make them nonexistent.  The yogin then experiences jyothi as the karma that is holding his evolution are removed by Vaalai Ganapathy’s grace. 


ஆகர்ஷணத்தின் உண்மையான நோக்கத்தை இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார்.  ஆகர்ஷனத்துக்கு அதிபதி வாலை கணபதி.  வாலை என்பது குண்டலினி சக்தி.  ஒருவரது கர்மங்களை குண்டலினி சக்தியே எரித்துப் பொசுக்குகிறது.  அவ்வாறு ஒருவரது பிறவிப் பிணி அறுக்கப்படுகிறது.  அதனால் ஆகர்ஷணத்தின் உண்மையான நோக்கம் ஒருவரது கர்மங்களை அழிப்பதுதான்.
ஆகர்ஷணம் ஒருவரது கர்மங்கள் அனைத்தையும் தன்னை நோக்கி இழுத்து அவற்றை இல்லாமல் போகச் செய்கிறது.  அதனால் ஆகர்ஷண சித்தி ஒருவருக்கு ஜோதி தரிசனத்தை அளிக்கிறது என்று கூறுகிறார் அகத்தியர்

No comments:

Post a Comment