Saturday 17 October 2015

202. Time for pancha gana deeksha

Verse 202
 பஞ்சகண தீக்ஷை
ஆச்சப்பா பஞ்சகண தீக்ஷை போதம்
அப்பனே வகைவிபரம் நன்றாய்க் கேளு
நீச்சப்பா சிவதீக்ஷை உதயமாகும்
நிசமான மாலையிலே சத்தி தீக்ஷை
பேச்சப்பா பேசாத வாலை தீக்ஷை
பேணி மனங் கண்டவுடன் தெண்டம் பண்ணு
மூச்சப்பா நிறைந்ததொரு வாமரூபி
முக்திகொண்ட பஞ்ச கெணந் தான் தானாகும்

Translation:
Pancha gana deeksha
The knowledge about pancha gana deeksha
Listen to details about it.
The Siva deeksha should be performed early in the morning
The Sakthi deeksha should be performed in the evening.
The silence, is the vaalai deeksha.
When they are perceived by the mind fall at their feet
The breath is the vaama roopi
These are the pancha gana that grant mukthi.

Commentary:
Agatthiyar described the pancha gana deeksha is contemplation on the primal bindhu, fire of kundalini, the nadhantha state, the poorna or the supreme state and the prana.  The primal bindu is the seed for manifestation.  The fire of kundalini is the primary fire that causes creation, the nadhantha state is the state of para and parai.  The poorna state is above these.  It is the parapara state.  The prana, the amrit is the microcosmic component of the primal bindu.

In this verse Agatthiyar talks about the time when the pancha gana deeksha is performed.  We have to remember that deeksha means worship.  The Siva deeksha or akaara deeksha is performed early in the morning.  The Sakthi deeksha or ukaara deeksha is performed in the evening.  Whenever silence is maintained, the state of silence is held, it is vaalai deeksha.  Sikaara deeksha is holding the mind in the state of poorna and falling in front of it as a sign of respect.  The fifth, vakaara deeksha is breath regulation or pranayama.  All these constitutue the pancha gana deeksha.  Mukthi is granted by pancha gana deeksha.


பஞ்ச கண தீட்சை என்றால் ஆதிபிந்துவான அகாரத்தையும் மூலத்தீயான உகாரத்தையும் நாதாந்த நிலையான மகாரத்தையும் பூரண நிலையான சிகாரத்தையும் பிராணன் அல்லது அமிர்தமான வகாரத்தையும் தியானிப்பது என்று அகத்தியர் முந்தைய பாடல்களில் விளக்கினார்.

இங்கு பஞ்ச கண தீட்சையை எப்போது செய்யவேண்டும் என்று அவர்  குறிப்பிடுகிறார்.  அகார தீட்சை அல்லது சிவ தீட்சையை உதயகாலம் செய்யவேண்டும்.  உகார தீட்சை அல்லது சக்தி தீட்சை மாலையில் செய்யப்பட வேண்டும்.  எப்போது மௌனநிலை நிலவுகிறது அது வாலை தீட்சை.  சிகார தீட்சை அல்லது பூரணத்தை மனத்தில் எப்போதும் கொண்டு அதற்கு தெண்டனிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.  கடைசியான வகார தீட்சை என்பது பிராணாயாமம் என்று கூறி முக்தியை இந்த பஞ்ச கண தீட்சை அருளும் என்று கூறி முடிக்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment