Friday 16 October 2015

194. kechari dhyana and attaining Vednta deha (body of vedanta)

Verse 194
தானான அமிர்தமடா வகாரமாச்சு
சங்கையுடன காரமதைத் தானே தானாய்
வாரான கேசரியைத் தியானம் பண்ணி
வரிசையுடன் உதயத்தில் தியானஞ் செய்தால்
ஊனான தேகமதில் நின்ற பீடை
உத்தமனே அப்போதே விலகிப் போச்சு
வீணான பீடையது விலகிப் போனால்
வேதாந்த திரேகமது சித்தியாச்சு

Translation:
The nectar became the vakaara
With clarity, considering akaara as self
Contemplating on kechari
Methodically during emergence
The evil present in the body
The Supreme Man! Will leave immediately
If the evil in the body goes away
The Vedanta body is attained.

Commentary:
Agatthiyar will explain the vakaara in a latter verse.  He mentions that the divine nectar transforms into vakaara.  He tells Pulatthiyar to contemplate on Kechari during “udhayam”.  We saw details about Kechari in verse 155. The term udhayam usually means sunrise.  Here it refers to emergence.  When kechari dhyana is performed it will remove the evils or “peedai” in the body.   The evil referred to here is the limitations in the body.  When this is crossed the yogin attains Vedantha deha.  Vedanta deha is the body that is beyond knowledge, it is the body of experience.


வகாரம் என்பதை அகத்தியர் பின்னொரு பாடலில் விளக்குகிறார்.  வானிலிருந்து இறங்கும் அமிர்தமே வகாரமாகிறது என்கிறார் இங்கு.  இப்பாடலில் அவர் புலத்தியரிடம் கேசரியை உதயத்தில் தியானம் செய்யவேண்டும் என்கிறார்.  உதயம் என்னும் சொல் பொதுவாக சூரிய உதயத்தைக் குறிக்கும்.  இப்பாடலில் அது உணர்வின் உதயத்தைக் குறிக்கலாம்.  கேசரியைப் பற்றிய விளக்கத்தை பாடல் 155 ல் பார்த்தோம்.  அவ்வாறு செய்தால் உடலில் உள்ள பீடை அனைத்தும் விலகிவிடும்.  அப்போது வேதாந்த தேகம் சித்தியாகும் என்கிறார் அவர்.   வேதாந்தம் என்பது அறிந்துகொள்ளவேண்டிய அறிவின் எல்லை, அனுபவத்தின் தொடக்கம் என்று பொருள்.  வேதாந்த தேகம் என்பது அறிவைக் கடந்த அனுபவ தேகம் என்று பொருள்.

No comments:

Post a Comment