Friday 16 October 2015

193. Truth about Ganga

Verse 193
அகார தீக்ஷை
விரும்பி மனங் கொண்டு சிவ பூசை கேளு
வேதாந்த சின்மயத்தை மெய்யிற்கொண்டு
வரும்பிறவி தனையகற்றுஞ் சிவமேதென்றால்
வகையுடனே சொல்லுகிறேன்  அகாரமாச்சு
அருந்தவமாய் நின்றதொரு அகார பீடம்
ஆரறியப் போறார்கள் ஆதிவிந்து
திருந்தியதோர் விந்துவென்றால் கெங்கை கெங்கை
திருவான கெங்கையடா அமிர்தந்தானே

Translation:
Akara dheeksha
With interest, with the help of mind, listen about Siva puja
If it is questioned, “adorning the Vedanta chinmaya truly/ as body
Which is that Sivam that removes further birth?”
I am telling you properly, it became the akara
It is the akara dais which remains as supreme austerity
Who will know this, it is the original seed,
The beautiful seed means ganga, ganga”
The beautiful ganga is the divine nectar.

Commentary:
Agatthiyar is describing an important principle in this verse. Tirumular describes manifestation as follows:
The Supreme Divine is Paraparam.  It distinguishes itself as bodham or awareness and becomes Paraparai.  Paraparam and Paraparai are inseperable.  From this state emerges effulgence and the state of Param.  From Param emerges Parai and from her the nadham.  From this nadha emerges bindu which leads to the state of Sivam and Sakthi.  Sivam and Sakthi states lead to the distinctions of iccha, kriya and jnana and then another bindu emerges.  This bindu is the cause for the manifested world.  Thus there are two bindus, one preceding the state of Sivam and Sakthi and one following it. 
Agatthiyar mentions that akaara is the bindu that preceds the Siva and Sakthi state.  This is the Adibindhu, Ganga, the divine energy. This Ganga later appears as the nectar that nourishes the body during kundalini yoga.

 Lord Siva is depicted with River Ganga flowing from his matted hair.  While this river is thought to be the one descending from Himalayas Agatthiyar points out that it is only symbolic.  The divine nectar is depicted as River Ganga flowing down from Siva’s matted locks.  The locks represent the nadi or energy channels.  As this is the effect of kundalini or the Vaalai Sakthi, Ganga is depicted as a lady.  This is the true meaning of the puranic recount that Ganga descended from the Heavens on top of Siva’s head who controlled it and directed the waters through his matter lock.  The heavens is the supreme space, vetta veli.  Supreme consciousness descends through the sahasrara and takes the form of divine nectar.  This is a very powerful phenomenon if left uncontrolled could shatter the body. Hence, Siva is said to control the rage of Ganga and let her flow down as trickles.  She flows through the nadi and nourishes the body just as how the worldly river nourishes people with its waters.  The nectar has magical properties and so does the river water.  Several scientific studies have shown that the river water kills any germs (at least when it was not polluted so much).


இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவிக்கிறார்.  உலகம் எவ்வாறு தோன்றுகிறது என்று கூறும்போது திருமூலர் சர்வ சிருட்டி என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.  ஆதியில் இருந்தது பராபரம்.  அது போதமாகப் பிரிந்து பராபரை என்ற நிலையை அடைகிறது.  பராபரமும் பராபரையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாத நிலைகள்.  இந்த நிலையில் சோதி தோன்ற அது பரம் என்னும் நிலையை அடைகிறது.  இந்த நிலையிலிருந்து பரை தோன்ற அவளிடமிருந்து நாதம் பிறக்கிறது.  அந்த நாதத்திலிருந்து பிந்து தோன்ற அதுவே சிவம் சக்தி என்ற நிலைகளை அடைகிறது.  இந்த நிலையில் சக்தி இச்சை, கிரியை, ஞானம் என்று பிரிகிறது.  அதிலிருந்து ஒரு பிந்து தோன்றுகிறது.  அதுவே பின் உலகமாக விரிகிறது. இவ்வாறு இரு பிந்துக்கள் தோன்றுகின்றன என்கிறார் திருமூலர்.  முதலில், சிவ சக்தி நிலைகளுக்கு முற்பட்ட நிலையில் தோன்றுவது ஆதி விந்து.  இதைத்தான் அகத்தியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  இதை கெங்கை என்றும் அமிர்தம் என்றும் கூறுகிறார் அவர்.  உடலில் யோகத்தின் உச்சியில் தோன்றும் அமிர்தம் மரணமில்லாப் பெருவாழ்வை அளிக்கிறது.

பொதுவாக சிவனைக் குறிக்கும்போது அவரது ஜடாமுடியிலிருந்து கங்கை ஆறு பாய்வதாகக் காட்டுவது வழக்கம்.  இப்பாடலில் அகத்தியர் இது ஒரு குறியீடுதான், இங்கு குறிப்பிடப்படுவது இமயமலையிலிருந்து இறங்கிவரும் கங்கை அல்ல என்று விளக்குகிறார்.


ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கும் கங்கையை சிவபெருமான் தனது சடாமுடியில் தாங்கி அவளது ஆற்றலைக் குறைத்து தனது முடிக்கற்றையின் வழியே உலகம் தாங்கும் அளவுக்கு வெளிவிடுகிறார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.  யோகத்தில் குறிப்பிடப்படும் அமிர்தம் வெட்டவெளி எனப்படும் ஆகாயத்திலிருந்து சகஸ்ராரத்தின் மூலம் உடலுள் இறங்குகின்றது.  அவ்வாறு இறங்கும்போது அது பெரும் சக்தியுடன் இறங்குகிறது.  அதை சாதாரணமாக உடலால் தாங்க முடியாது.  அதனால் பரவுணர்வு அதைக் கட்டுப்படுத்தி மனித உடலால் தாங்ககூடிய  அளவுக்கு நாடிகளின் மூலம் பாயச் செய்கிறது.  நாடிகளே சிவனின் முடிக்கற்றைகள்.  இவ்வாறு கங்கை என்பது சக்தியின் வெளிப்பாடு அதனால் அவள் பெண்ணுருவில் குறிக்கப்படுகிறாள்.  

No comments:

Post a Comment