Saturday 17 October 2015

201. Vakaara deeksha

Verse 201
வகார தீக்ஷை
புனிதமுடன் தானிருந்து பூசை பண்ணி
பொற்கமலத் துச்சியிலே மனதைவைத்து
இனிதமுடன் வகாரமென்றால் வாசியாச்சு
ஏகமென்ற வாசியிலே இன்பம் வைத்து
கனிகரண மான சிவ சத்தி வாலை
கண்ணான பூரணமும் நாலுங் கூட்டி
மணிகரண மானதொரு அஞ்சும் மைந்தா
மகத்தான பஞ்ச கண தீக்ஷையாச்சே

Translation:
Vakaara deeksha
Remaining with purity, performing puja
Placing the mind at the top of the golden lotus
The sweet vakaara is the vaasi, the life force
Desiring the singularity vaasi
Joining siva, sakthi, vaalai
And the important poorna- four
The embodiment of the jewel, these five, son
This became the pancha gana deeksha.

Commentary:
Agatthiyar describes the vakaara deekshai in this verse.  We already saw that vakaara is the amrit that secrets from the lalata.  It represents bindhu, the primordial form.  He says that along with the four deeksha mentioned before the yogin should include vakaara deeksha also in his contemplation.  Thus, Siva, Sakthi, Vaalai or kundalini energy, the supreme state or Poorna and bindhu or vakaara are the five entities that are contemplated upon. This is called pancha gana deeksha or the worship of the five distinct entities.  The Lord of these gana is Ganapathi.  Hence, Siddhas invoke him at the beginning of all there works.  There is nothing beyond these five entities.

வகார தீட்சையை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர். வகாரம் என்பது அமிர்த்தம் என்று முன்னமே பார்த்தோம். அது பிந்துவின் வெளிப்பாடு.  அகத்தியர் மேற்கூறிய சிவ, சக்தி, வாலை, பூரணம் ஆகிய நான்குடன் வகார தீட்சையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் கூறுகிறார்.  இதுவே மணியாக ஆக்ஞையில் தென்படுகிறது.  இதுவே பஞ்ச கண தீட்சை என்கிறார் அகத்தியர்.  இந்த ஐந்து கணங்களுக்கும் அதிபதி கணபதி அதனால்தான் அவரை சித்தர்கள் எந்தச் செயலைத் தொடங்குவதற்கு முன்பும் வணங்குகின்றனர்.

No comments:

Post a Comment