Wednesday 14 October 2015

190. The five forms, Siva rupa and daily puja

Verse 190
தானான ஆதாரஞ் சோதிபோலே
சங்கையுடன் தோணுமடா அங்கேபாரு
வானான அண்டமதின் நடுவே பார்த்தால்
வகையாகத் தோணுமடா பஞ்சரூபம்
தேனான வடிவு பஞ்ச ரூபமாகிச்
சிவரூப மானசெயல் யாருங்காணார்
கோனான சிவரூபந் தான் தானென்று
குறித்து மனம் நிறுத்தி நித்தம் பூசை பண்ணே

Translation:
The substrata (cakra)- like a flame
Will appear so clearly.  See there
The five forms will appear
The honey-like form, taking the five forms
And then becoming the form of Siva- no one sees this.
The king, the Siva rupa, as the Self
Hold your mind so, and perform daily worship.

Commentary:
Agatthiyar says that as mentioned in the above verse the practice he pointed out will light up all the six adhara.  They will appear like a flame.  The five forms- that of Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva will appear.  Several scriptures say that the Gods will appear before the yogin.  This is the experience that they have mentioned so.  The five deities correspond to crossing of five states, all the principles that constitute material existence.  Seeing the five forms means the yogin has crossed those limitations.  These five forms will merge with Siva rupa or form of consciousness.  Agatthiyar says that this is not easily perceived by anyone.  After attaining this vision, the yogin has perform daily puja or kundalini yoga holding the mind firmly in the realization that these are all nothing but the Self, the Supreme consciousness.  The puja refers to the mental worship or manasika puja, the kundalini yogam.


முந்தைய பாடல்களின் கூறிய வழிமுறைகளை ஒரு யோகி மேற்கொண்டால் ஆத்ம சோதி தென்படும்.  அதன் பிறகு ஆறு ஆதாரங்களும் ஒளி வடிவம் பெற்றுத் திகழும்.  இந்த பயிற்சியை அந்த யோகி தொடர்ந்து மேற்கொண்டால் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் மற்றும் விசுத்திக்கு அதிதேவதைகளான பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் தோன்றுவர் என்கிறார் அகத்தியர்.  இந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்கள் அதிபதிகளாக இருக்கும் சக்கரங்கள் குறிக்கும் தத்துவங்களின் உச்ச நிலையைக் குறிக்கின்றனர்.  அவர்கள் தோன்றுகிறார்கள் என்பது அந்த யோகி அந்த தத்துவங்களைக் கடந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது.  குண்டலினி யோகத்தை மேற்கொள்ளும் யோகிகளுக்கு தெய்வங்கள் தரிசனம் தருவர் என்பது இதையே குறிக்கிறது.  இவ்வாறு ஐவராகத் தோன்றுவது ஒன்றான சிவமே, அவர்கள் அனைவரும் சிவ ரூபமே என்கிறார் அகத்தியர்.  அதனால் இந்த ஐவரும் முடிவில் சிவரூபமாகக் காட்சியளிக்கின்றனர்.  இந்த சிவ ரூபம் பரவுணர்வு, அது அளவுக்குட்பட்ட ஆத்ம உணர்வு பரவுணர்வு நிலையை அடைவது என்பதை மனதில் உணர்ந்து அந்த யோகி தினமும் பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு பூசை என்பது அந்தரங்க பூசையான குண்டலினி யோகத்தைக் குறிக்கும்.

No comments:

Post a Comment