Friday 16 October 2015

198. Makaara deeksha, reaching the state of nadhantha

Verse 198
மகாரதீக்ஷை
ஆமப்பா சிவயோகஞ்செய்வதற்கு
அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்
தாமப்பா  மகாரமென்ற வாலைதன்னைத்
தாரணியில் யாரறிவார் சங்கைமார்க்கம்
காமப்பால் கொண்ட சிவ கெங்கையான
கன்னி மனோன்மணிஈன்ற நாதமென்றும்
நாமப்பா சொல்லுகிறோஞ் செந்தேனென்றும்
நாதாந்த மென்ற  மகாரமாமே

Translation:
Makaara deeksha

For performing Siva yogam
Son, I told you about akaara and ukaara.
The makaara or vaalai
Who will know her, the path of knowledge?
The siva ganga, who has desire (for creation)
The maiden, Manonmani, the nadha that she birthed
I am telling you so, this is the ruddy honey
The makaara which is nadhantha.

Commentary:
The akaara deeksha grants kaya siddhi, mauna siddhi, kevuna siddhi.  Ukaara siddhi grants bodham or jnana.  Now Agatthiyar is describing the makaara deeksha.  It involves sakthi, vaalai or Bala.  She is the Manonmani from whom emerged nadha.  Hence, makaara deeksha is worshipping the nadhantha state.  Agatthiyar says that this state has milk of kama or desire.  The kama or desire is the impetus to create, the iccha.  


அகார தீட்சை காய சித்தி, மௌன சித்தி, கெவுன சித்தி ஆகியவற்றை அருளுகிறது.  உகார தீட்சை போதம் எனப்படும் உணர்வை அருளுகிறது.  இப்போது அகத்தியர் மகார தீட்சை எனப்படும் சக்தி நிலையை எட்டும் முறையை விளக்குகிறார்.  வாலை அல்லது பாலா என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  இந்த நிலை காமப்பாலைக் கொண்டது என்கிறார் அகத்தியர்.  இங்கு காமம் என்பது படைக்க வேண்டும் என்ற உந்துதலைக் குறிக்கும்.  அந்த உந்துதலை உடையவள் சக்தி.  அவளை மனோன்மணி என்கிறார் அகத்தியர்.  இவள் இந்த உந்துதலினால் தோற்றுவிப்பது நாதத்தை.  இவ்வாறு மகார தீட்சை என்பது நாதாந்த நிலையை, சக்தி நிலையைக் குறிக்கிறது.  

No comments:

Post a Comment