Saturday, 31 October 2015

219. Not only good things but also those that can cause evil will come under one's control through vasyam

Verse 219
ஆமப்பா தேவரோடு முனிவர்தானும்
அடங்காத பிசாசுமுதற் சத்துருக்கள்
ஓமப்பா மிருகமுதல் அஷ்ட நாகம்
ஒடுங்காத பக்ஷிமுதல் சகலமெல்லாம்
தாமப்பா ஆதி கணபதியின் சூக்ஷந்
தண்மையுடன் தியானித்துத் தானே நின்றால்
காமப்பால் கானற்பால் வசியமாகிக்
கருணையுடன் சகலமும் வசியங்காணே

Translation:
Yes son, along with Deva the munis
From globins to one’s enemies
From animals to the ashta naga (eight snakes)
The uncontrollable birds to everything
The subtlety of Adi Ganapathy
If you remain contemplating on him
Kamappaal and kaanalpaal will come towards (you)
Everything will be attracted towards one through vasyam.

Commentary:
Not only good things will be come to a person through vasyam the evil things will also be brought under control.  Devas include the rain god Varuna, Indra, Yama and Agni.  They are said to grants various benefits to people.  Munis are sages who grant both benefits and curses to people depending on the context.  Ashta naga or eight snakes are Ananthan, Vasuki, Karkodakan, Dhakshan, Shankan, Guligan, Padman and Mahapadman.  They are considered to be protecting the world. Along with these the kamappaal, kaanal paal will also come under one’s control.

நற்பொருட்கள் மட்டுமல்லாமல் தீயவையும் வசிய சித்தியைப் பெற்றால் ஒருவரது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார் அகத்தியர்.  தேவர் என்பவர்கள் வருணன், இந்திரன், யமன், அக்னி போன்றோர்.  அவர்கள் உலக மக்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பவர்கள்.  முனிவர்கள் என்பவர்கள் மக்களுக்கு அவர்களது செயலுக்கேற்ப வரமோ சாபமோ அளிப்பவர்கள்.  அஷ்ட நாகங்கள் என்பவை அனந்தன், வாசுகி, கார்கோடகன், தக்ஷன், சங்கன், பத்மன், குளிகன், மகாபத்மன் என்பவர்கள்.  அவர்கள் உலகைக் காப்பதாகக் கருதப்படுகிறது.  இவர்களைத் தவிர காமப்பாலும் கானற்பாலும் வசிய சித்தியினால் ஒருவரது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார் அகத்தியர். 

218. Actual purpose of vasiyam or vaseekaram

Verse 218
ஓதடா ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
உண்மையென்ற ஆதிகணபதிதான் மைந்தா
நீதியுடன் உனதிடத்தில் நின்றுகொண்டு
நீநினைத்த காரியங்கள் வசியஞ் செய்வார்
பேதமென்ற வேதமெல்லாம் வசியமாகும்
பேரண்டஞ் சித்தண்டம் வசியமாகும்
வேதமென்ற வேதமொடு சாஸ்திரங்கள்
விளங்கிநின்ற மந்திரங்கள் வசியமாமே

Translation:
Son, if you recite it thousand eight times
Truthfully, Son, the Adi Ganapathy,
Will remain in you
Will attract the fruits of the actions
The different knowledge systems will come under your control
The macrocosm and microcosm will come under control
The Veda and sastras
And all the mantra will come under control.

Commentary:
Vasiyam is charm or making an object come to you.  Agatthiyar says that if one recites the mantra, siva siva om reeng ang, mentioned in the previous verse is recited 1008 times the Adi Ganapathy will remain with the yogin and make all the actions one wishes to perfom come to him.  All the knowledge systems, scriptures and mantra will be attracted towards the yogi, by Adi Ganapathy’s grace.

Vasiyam or vaseekaram is usually mentioned in the bad connotation, that it is invokes to attract people towards themselves. Men use mantras to attract women towards themselves and women use magical potions and mantra to attract men towards themselves.  Agatthiyar explains the true meaning of vasiyam.  Its actual purpose is to make worthwhile actions fruitful, to acquire the knowledge and attain mantra siddhi.


வசியம் என்பது ஒன்றைத் தன்னிடம் வரச் செய்வது.  பொதுவாக இந்த கர்மம் கெட்ட நோக்கிலேயே பார்க்கப்படுகிறது.  ஆண் பெண்ணைக் கவருவதற்கும் பெண் ஆணைக் கவருவதற்கும், பிறரைக் கவருவதற்கும் பயன்படுவதே வசியம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  முன் பாடலில் கூறிய சிவ சிவ ஓம் றீங் அங் என்ற மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஓதினால் ஆதி கணபதி ஒருவரிடம் நின்று அவர் காரியங்கள் அறிவு முறைகள், வேதம், சாஸ்திரம், மந்திரம் ஆகியவற்றை அவரை நோக்கி வசியம் செய்வார் என்று அகத்தியர் கூறுகிறார்.  

Thursday, 29 October 2015

217. Mantra for vaseekaram

Verse 217
உகந்துகொண்டு வசீகரத்தின் சூக்ஷங் கேளு
உத்தமனே வடதிசையை நோக்கி மைந்தா
அகந்தெளிய விபூதி உத்தளமாய்ப் பூசி
ஆனகலை ஆசனமேல் இருந்துகொண்டு
முகந்தெளிந்த ருத்திராக்ஷ மணியை வாங்கி
முத்தியுடன் ஆதிகண பதியை நன்றாய்ச்
செகந்தெளிய செபிப்பதற்கு மந்திரங் கேளு
சிவசிவ ஓம் றீங் அங்கென்று ஓதே.

Translation:
With interest hear about the subtlety of vaseekaram
The Good one!  Facing the north, Son,
With clear heart adorn the sacred ash as powder
Remaining in the kalai aasanam
Holding the rudraksha bead which has clear faces
Along with mukhti, the Adi Ganapathy
To chant his mantra with clarity, listen to it
Recite siva siva om reeng ang.

Commentary:
Agatthiyar describes the procedure to attain the vaseekara siddhi.  This siddhi is attained as a result of perfected ashtanga yoga, when the yogin perceives the gross and subtle clearly.  He operates from the causal state.  The yogin sits facing north, he adorns the sacred ash powder, holds the kalai aasana, has the rudraksha bead in hand, contemplates on Adi Ganathi and recites the mantra siva siva, om reeng ang.


வசீகர சித்தியைப் பெறுவதற்கான வழிமுறையை இப்பாடலிலிருந்து கூறத் தொடங்குகிறார் அகத்தியர். இந்த சித்தி அஷ்டாங்க யோகத்தை முறையாகச் செய்து முடிக்கும்போது கிட்டுகிறது.  இதற்கு ஒரு யோகி, விபூதியை உத்தளமாகப் பூசி கலை ஆசனத்தில் அமர்ந்து கையில் தெளிவான முகங்களையுடைய உருத்திராட்ச மணியை வைத்துக்கொண்டு ஆதிகணபதியை மனத்தில் எண்ணி சிவ சிவ ஓம் றீங் அங் என்று ஓத வேண்டும் என்கிறார் அகத்தியர்.

216. Agatthiyar begins to talk about vaseekaram

Verse 216
வசீகரம்
காணவே ஸ்தூலமுடன் சூக்ஷங் கண்டால்
காரணமாய்ச் சென்று விளையாடலாகும்
பூணவே நின்று விளையாடு தற்குப்
புத்தியுடன் அஷ்டகர்ம சித்து கேளு
தோணவே அஷ்டகர்ம சித்து கேளு
சொல்லுகிறேன் வசீகரத்தின் சூக்ஷந்தன்னை
ஊணவே தானிருந்து மூலம் பார்த்து
உவமையுடன் குருபதியை உகந்துகாணே

Translation:
Vaseekaram
The gross and the subtle are seen together
It is possible to play with them as the cause
To remain and play with them
Listen about the ashta karma sitthu, with your buddhi.
Listen about the ashta karma sittu
I will tell you subtle details about vaseekaram
Remaining firmly and seeing the muladhara
See the gurupathi happily.

Commentary:
Agatthiyar explained the gross and the subtle in the previous verses as the body and the singular letter or Divine consciousness that dances within.  If this knowledge is attained he says it will be possible to operate from the state of cause. He says that at this state the ashta karma will be possible.  For that one has to remain perceiving the muladhara.


சூட்சுமம் என்றால் உள்ளிருந்து ஆடும் இறை சக்தி என்றும் ஸ்தூலம் என்றால் மற்றவை அனைத்தும் என்றும் கூறிய அகத்தியர் இந்த அறிவைப் பெற்றால் காரண நிலையிலிருந்து செயல்படலாம் என்கிறார்.  இது ஒருவருக்கு அஷ்ட கர்ம சித்தியை ஏற்படுத்தும்.  அதனைச் செய்ய ஒருவர் மூலாதாரத்தில் அழுத்தமாக ஊணி குருபதியைப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர்.  இவ்வாறு கூறிவிட்டு அவர் முதல் கர்மமான வசீகரத்தைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார்.

Wednesday, 28 October 2015

215. Ashta karma-1

Verse 215
அஷ்ட கர்ம விபரம்
யோகமென்ற அஷ்டாங்க யோகம் பார்க்க
உத்தமனே அஷ்டகர்மஞ் சித்து கேளு
ஆமென்ற தேக நவக்கிரக மாச்சு
ஆதியென்ற அனுக்கிரக முடியில் நின்று
பாகமென்ற ஆதார மூலந்தன்னை
பத்திகொண்டு ஊடுருவிப் பார்க்கும்போது
வேகமென்ற அட்சரத்தின் ஆட்டையல்லால்
என் மகனே மற்றதெல்லாம் ஸ்தூலங்காணே

Translation:
 Details about ashta karma
Seeing the yoga, the ashtanga yoga
The Superior one! Listen about ashta karma sitthu
The locus, the body, became the nine planets/ house of nine/the new house
Remaining at the origin, the blessed top
The part, the primary substratum (muladhara)
Holding it, if peered
The action of the letter, the speed
My son, the rest is gross (sthula)

Commentary:
Agatthiyar begins to describe the ashta karma siddhi.  They are the eight mystical accomplishments starting with vaseekaram or attraction towards oneself.  He says that when one performs ashtanga yoga the ashta siddhi occurs.  He says that the body became the nava graha.  This terms means nine planets, the new house as well as house of nine.  The cakras in the body are considered to be loci of the external planets.  They are nine including the rahu and ketu in the Indian astrological system.  Nava means new.  By performing the ashtanga yoga the yogin attains a new body, that of light.  Hence, it is a nava graha or a new house within which his soul resides.  Nava graha may also mean the house with nine thresholds, the nine apertures- mouth, ears, nose etc.  Planetary positions are said to confer certain benefits to the person.  In this context the status of the cakra grant the person certain effects that include the ashta karma siddhi.  Agatthiyar says that when one holds on to the muladhara and looks within one perceives that all the actions happening within the body and outside of it are all actions of the single letter, which may be the omkara or si.  That is the essence, the subtley that makes the rest, the sthula or gross entities function.


அஷ்ட கர்ம சித்தியைப் பற்றி இப்பாடலிலிருந்து கூறத் தொடங்குகிறார் அகத்தியர்.  அஷ்ட கர்ம சித்தி என்பவை வசீகரம் முதலாய எட்டு சித்திகள்.  இவற்றை ஒரு யோகி அஷ்டாங்க யோகப்பூர்த்தியில் பெறுகிறார்.  அவரது உடல் நவகிரகமாகிறது என்கிறார் அகத்தியர்.  இந்தச் சொல் ஒன்பது கோள்களையும் (ராகு, கேது உட்பட இந்திய வானவியல் குறிப்பிடும் ஒன்பது கிரகங்கள்), ஒன்பது சக்கரங்கள் அல்லது உணர்வு வாழும் இடங்களையும் ஒன்பது வாசலைக் கொண்ட உடலையும் குறிக்கிறது.  நவ என்பது புதிய என்ற பொருளையும் கொண்டது.  அஷ்டாங்க யோக சித்தி பெற்ற ஒரு யோகி ஒளியுடலைப் பெறுகிறார்.  இவ்வாறு அவர் புதிய உடலைப் பெறுகிறார்.  உடலில் நவகிரகங்கள் என்பது ஒன்பது சக்கரங்களுடன் தொடர்புடையது.  எவ்வாறு ஒருவரது ஜாதகத்தில் கோள்களின் நிலை பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவோ அதே போல் இந்த சக்கரங்களின் நிலையம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஒன்பது வாசல் கொண்ட உடல் என்பது கண், காது, மூக்கு என்பது போன்ற ஒன்பது வாசல்களைக் குறிக்கிறது.  இந்த உடலில் ஒருவர் மூலாதாரத்தைப் பற்றிக்கொண்டு பார்த்தால் அனைத்தும் ஓரெழுத்தின் ஆட்டம் என்பதைக் காணலாம் என்கிறார் அகத்தியர்.  ஓரெழுத்து என்பது ஓம் அல்லது சி யாக இருக்கலாம்.  இதைத்தவிர மற்றதெல்லாம் ஸ்தூலம் என்கிறார் அகத்தியர். 

Sunday, 25 October 2015

214. What is the indication that ashtanga yoga was performed correctly?

Verse 214
அறிந்துகொண்டு ஆதாரம் நன்றாய்ப் பார்த்து
ஆதியென்ற பற்பமொடு சுன்னம்ரெண்டாம்
வருந்தி மனக் கனிவதனால் செய்து மைந்தா
வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரு
தெரிந்துசடந் தானறிந்து யோகம்பாரு
தீர்க்கமுள்ள மார்க்கமென்று சொல்லக்கேளு
பொருந்திநின்ற அஷ்ட கன்மஞ் சித்துபெற்றால்
பூரணமா அஷ்டாங்க யோகமாமே

Translation:
Knowing this, seeing the substrata well
There are two entities- the Origin- parppam and sunnam (sunya)
Son, by maturing and melting the heart with effort
Perceive ashtanga yoga in the proper way.
Knowing about the body, perceive yoga
Listen to it being called the long and definite pathu
If the ashta karma sitthu is attained
Then the ashtanga yoga has been completed fully.

Commentary:
In the previous verse Agatthiyar mentioned that the parppam was a part.  Now he explains this further.  Parppam refers to the manifested state of the Divine, the Primal one or Adhi.  The other part is sunnam or sunya, the unmanifested state pregnant with everything.  Agatthiyar tells Pulatthiyar that this principle should be perceived with a mature heart, a heart that is melting with love.  This is the right way to perceive ashtanga yogam.  He says that knowing the nature of the body and soul yoga should be performed.  He also adds that when one attains the ashta karma sitthu or mystical accomplishments it means the ashtanga yoga has been completed properly.  Thus, Agatthiyar tells us that ashta karma siddhi are nothing but milestones in the path towards ultimate goal.  They are not the end that a yogin should seek.


முந்தைய பாடலில் அகத்தியர் பற்பம் ஒரு பகுதி என்று கூறினார். இப்பாடலில் அது எதன் பகுதி என்று விளக்குகிறார்.  பற்பம் என்பது இறைமையின், ஆதியின் முழுவதுமாக வெளிப்பட்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.  சுன்னம் அல்லது சூனியம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒருமை நிலையைக் குறிக்கும்.  இவ்வாறு வெளிப்பாடு ஒருமை என்ற இருநிலைகளில் பற்பம் ஒரு பாதியாகும்.  இந்தா உண்மையை ஒருவர் கனிந்த மனத்துடன் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  கனிந்த மனம் என்பது முதிர்ச்சியடைந்த மனம் என்றும் அன்பால் கனிந்த மனம் என்றும் இருபொருள்களைத் தருகிறது.  இந்த நிலையில் அஷ்டாங்கயோகத்தைப் புலத்தியர் பார்க்கவேண்டும் என்றும் சடம் அல்லது உடலையும் உயிருடன் அதன் தொடர்ப்பையும் அறிந்து யோகம் அல்லது பரவுணர்வுடன் சேர்க்கையை ஒருவர் சரியான முறையில் முயலவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு செய்யும்போது அஷ்ட கர்ம சித்திகள் ஏற்பட்டால் அது அஷ்டாங்க யோகம் பூரணமாகச் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு அவர் ஒரு யோகி அஷ்ட கர்ம சித்தியை ஒரு மைல்கல் என்று மட்டுமே கருத வேண்டும், அதையே முடிவாகக் கருதக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறார்.

213. Parppam and karppam

Verse 213                                                          
பற்பமென்ற உற்பனத்தை யார்தான் காண்பார்
பதிவான நகாரமுடன் மகாரஞ்சேர்த்து
உற்பனமாய்க் காரமுடன் பூரங்கூட்டி
உறுதியுடன் பூரண நீர் தன்னாலாட்டி
கற்பமென்று அற்புதமாய் புடமே செய்தால்
கசடற்று நீறியது பற்பமாகும்
அற்புதமாய் நீறினதோர் பற்பந்தன்னை
அங்கமென்ற சங்கதியை அறிந்து வூட்டே

Translation:
The parpam, the emergence- who can see it?
Adding the makaara to the nakaara
Adding kaaram and pooram for the emergence
Grinding with the water of poorna, firmly
If it is processed in fire as karpam
The water which is free of impurities will become parppam
The wonderful parppam made of water
Knowing that it is the part, add it.

Commentary:
Parppam and karppam are medicinal preparations.  Agatthiyar uses these terms in the context of creation.  He says that nakaara and makaara are added to kaaram and pooram.   Nakaara corresponds to thirodana sakthi and makaara corresponds to anava.  The triple innate faults, aanava, karma and maya are indiciated here as as the maya and karma operate through the tirodhana sakthi.  Souls, under the rule of aanava are driven by the tirodhana sakthi that includes maya and karma and thus live in the manifested world as life forms.  Kaaram and pooram corresponds to sakthi.  Poornam corresponds to supreme consciousness, its nadha state.  The fire mentioned here is the fire of kundalini.  The water referred to is the jaya neer or victory water we saw before.  The result is parppam, the Tamil term for bhasma or ash.  Agatthiyar says that while adding it, it must be remembered that the parppam made of water is a part.  He explains this further in the next verse.

பற்பம், கற்பம் என்பவை சித்த மருத்துவச் சொற்கள்.  அகத்தியர் இந்த சொற்களைத் தோற்றம் என்ற ரீதியில் பயன்படுத்தியுள்ளார். நகாரத்துடன் மகாரத்தைச் சேர்த்து அதனுடன் காரத்தையும் சாரத்தையும் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  நகாரம் என்பது திரோதான சக்தியையும் மகாரம் ஆணவத்தையும் குறிக்கும்.  திரோதான சக்தி மாயையும் கன்மத்தையும் உள்ளடக்கியது.  இவ்வாறு ஆணவம் திரோதான சக்தியுடன் சேர்ந்து மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை என்று உயிர்களை அளவுக்குட்பட்டவர்களாகச் செயல்பட வைக்கின்றன.  காரம் பூரம் என்பது சக்தி நிலைகள்.  இவற்றை பூரணம் என்ற நீரைச் சேர்த்து ஆட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு பூரணம் என்பது பராபரத்தின் நாத நிலையைக் குறிக்கிறது.  இந்தக் கலவையை தீயிலிட்டு பஸ்மமாக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இங்கு தீ என்பது குண்டலினி அக்னி.  இவ்வாறு மாற்றமடையச் செய்யப்படும் நீர் ஜெயநீர் என்று முன்னம் பார்த்தோம்.  இந்த நீர் ஒரு பகுதி என்று நினைவில் கொண்டு அதைக் கூட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.

இதை அடுத்த பாடலில் மேலும் விளக்குகிறார். 

212. Siva yogam, Siva mukhti

Verse 212
பண்ணப்பா சத்திசிவ பூசைப் பண்ணிப்
பதிவான சிவயோகம் பார்க்கும்போது
கண்ணப்பா தன்னிலையில் கருணையாகுங்
கருணை வளர் தீபமதில் தீபங் காணும்
விண்ணப்பா நிறைந்ததொரு தீபங்கண்டால்
வேதாந்த தேகமடா முத்தியாச்சு
முண்ணப்பா நிறைந்த சிவ முத்தியாலே
முத்தியுள்ள அமுர்தரச பற்பங் கேளே

Translation:
Perform son, Sakthi Siva worship
When experiencing the Siva yoga
The eye in its original state will become mercy,
In the merciful flame the flame is seen
If you see the flame that pervades the sky
The Vedanta body will attain liberation
Due to the Siva mukhti
Listen about the amrita rasa parppam in the state of mukhti. 

Commentary:
Siva yogam is limited consciousness joining the supreme consciousness.  When this state is reached the flame of consciousness is seen.  Agatthiyar calls this as the lamp in the lamp.  When this flame is seen it indicates the state of kaya siddhi or Vedanta deha mukhti.  This siva mukhti makes the amrita rasa flow from the lalata.


சிவ யோகம் என்பது அளவுக்குட்பட்ட அறிவு உயருணர்வு நிலையுடன் சேர்வது.  இந்த நிலையை அடைந்தால் கருணை பொங்கும்.  அப்போது தீபத்துள் தீபம் காணும்.  இந்த விண் அல்லது ஆகாயம் நிறைந்த தீபத்தைக் கண்டால் வேதாந்த தேக முக்தி கிட்டும் என்கிறார் அகத்தியர்.  இதுவே காயசித்தி எனப்படுகிறது.  இந்த காயசித்த சிவ முக்தியை அளிக்கும்.  அதனால் லலாடத்திலிருந்து அமிர்ந்தரசம் சுரக்கிறது.  இதை அகத்தியர் அமிர்தரச பற்பம் என்கிறார்.  

Friday, 23 October 2015

211. The navalokha will become golden

Verse 211
சேரடா வீரமது சேர்ந்தபோது
தெளிவான நீரதுவும் செய நீராச்சு
காரடா செயநீரைப் பதனம் பண்ணிக்
கட்டான வாதமுறை திட்டம்பார்த்தால்
பேரடா கொண்டதொரு நவலோகங்கள்
பொருதி நின்ற வங்கமெல்லாந் தங்கமாச்சு
நேரடா தங்கரதி மாது தன்னை
நேசமுடன் பாசம் வைத்துப் பூசை பண்ணே

Translation:
Add the veeram, when it is added
The clear water becomes jaya neer
Process the victory water
If the method of vada is perceived in its proper form
The nine worlds/metals
The body/all the metals will become gold
The beautiful golden maiden
Worship her with love and devotion.

Commentary:
This verse is a continuation of the previous one.  After adding the veeram or mercury or siva bheejam Agatthiyar says that the clear water becomes jayaneer or victory water.  The jayaneer is then processed and when alchemy is performed following the right procedure Agatthiyar says that the “navalokham” will become gold.  These same lines in the philosophical context gives another meaning.  When the cakras are activated with the Siva bheeja and when vada or pranayama is performed in the right method the nine worlds will be perceived golden.  Nava lokha also means new locus, the body that is transformed.  Thus, the body undergoing nine types of deeksha will reach the tenth state of golden body.  The Siddhas say that the body is sakthi and the soul is sivam.  In this respect golden maiden refers to golden sakthi or the golden body.


முந்தைய பாடல் கருத்தை இப்பாடலிலும் தொடருகிறார் அகத்தியர்.  வீரத்தைச் சேர்த்தால் தெளிவாக இருக்கும் நீர் ஜெயநீராகும் என்கிறார் அவர்.  வீரம் என்றால் பாதரசம்.  இவ்வாறு செய்யப்படும் ஜெயநீரைப் பதனம் பண்ணவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  அதன் பிறகு அதைக்கொண்டு திட்டமாக வாதம் செய்தால் நவலோகங்களும் தங்கமாகும் என்கிறார் அவர்.  நவ லோகம் என்பதை ஒன்பது உலோகங்கள் என்று பொருள்கொண்டால் இது ரசவாதமான கீழான உலோகங்களைத் தங்கமாக மாற்றுவதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  நவலோகம் என்பது ஒன்பது உலகங்கள் என்றும் புதிய உலகம் அல்லது புதிய இருப்பிடமான மாற்றமடைந்த  உடல் என்றும் பொருள்படும்.  இங்கு வாதம் எனப்படுவது பிராணாயாமத்தைக் குறிக்கும்.  இதுவே வாத சித்தி எனப்படுகிறது.  இந்த உடல் தசதீட்சையில் ஒன்பது நிலைகளைக் கடந்து பத்தாம் நிலையான பொன்னுடல் நிலையை அடைகிறது என்றும் இவ்வரிகள் பொருள் தருகின்றன.  இந்த பொன்னான அழகிய மாதுவை வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர்.  உடலை சக்தி என்றும் உயிரை சிவம் என்றும் சித்தர்கள் அழைக்கின்றனர்.  இந்த விதத்தில் தங்க மாது என்பது பொன்னுடலைக் குறிக்கிறது.  

210. Agatthiyar reveals how the cakras are created

Verse 210
பண்ணியதோர் வட்டதுவும் நன்றாய்க்காய்ந்தால்
பாலகனே மண் சீலை வலுவாய்ச் செய்து
புண்ணியனே நிறையறிந்து புடத்தைப் போடு
பூவான முப்பூவுஞ் சுன்னமாச்சு
கண்ணிறைந்த சுன்னமடா கமலச்சுன்னங்
காரமுள்ள சுன்னமதிற் சாரஞ்சேர்க்க
வன்னிஎன்ற ஜெயநீரை என்ன சொல்வேன்
வாநிரைந்த நீரதிலே வீரஞ்சேரே

Translation:
The cake, when it dries well
The young one! Cover it will cloth and mud
The blessed one! Knowing the state by sublimating with fire
It becomes the muppu sunnam
The sunnam that fills the eyes, the lotus sunnam
In the “kaaram” of the sunnam add the “saaram”
The jaya neer (victory water), which is fire- I will tell you
In the water that is suffused with space add the veeram.

Commentary:
Agatthiyar is describing a medical procedure that is also philosophical.  He says that the vatu or cake is then covered with a cloth and sealed with mud.  This process is called “man seelai”.  In the philosophical context the Supreme Being which is flame of consciousness, and space along with nadha is covered with a subtle and material body.  Thus, a body is created with the Divine within it as effulgence, space and primordial sound.  This may also mean the chakras, the cakes are covered with different principles ending with the earth principle.  This the sunnam or void of lotus that is beyond visual perception.  This is the sunnam of kaaram, the void manifestation.  To this is added saaram or essence.  In the philosophical context this refers to Sakthi in different forms.  This, Agatthiyar calls as vanni or fire or the jaya neer or victory water.  To this added veeram, which we saw before to be mercury or Siva bheejam, si. 

All the yoga works talk about the cakras but none describe how they are created.  Only Agatthiyar has described the procedure in which the cakras or energy centers are created, what they contain.


ஒரு மருத்துவத் தயாரிப்பைப் போலத் தோன்றும் இப்பாடல் தத்துவரீதியாகவும் பொருள் தருகிறது.  முந்தைய பாடலில் வட்டு செய்வதைப் பற்றி அகத்தியர் விளக்கினார்.  இறைவனின் ஒளி, வெளி நாத தத்துவங்களைச் சேர்த்து வட்டு செய்யப்பட்டது.  அந்த வட்டை மண் சீலை செய்யவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  மண் சீலை என்பது மருத்துவப் பொருட்களை ஒரு பானையில் இட்டு அதன் வாயைத் துணியால் கட்டி அதனை மண்ணால் பூசுவது.  அவ்வாறு மண் சீலை செய்ய வட்டை புடமிடவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த முறை தத்துவ ரீதியாக இறைவனின் உணர்வு அல்லது அறிவாகிய ஒளி, வெளி அல்லது ஆகாயம் என்ற மூன்று தத்துவங்களை எடுத்து அதை வட்ட வடிவமான ஒன்றாகச் செய்து அதை சீலை, மண் ஆகியவற்றால் மூட வேண்டும்.  இங்கு சீலை, மண் என்பவை சூட்சும மற்றும் ஸ்தூல உடல்களைக் குறிக்கும்.  இவ்வாறு செய்யப்பட உருவை குண்டலினி அக்னியால் புடமிடவேண்டும்.  புடமிடுதல் என்றால் பானை எல்லாப் பக்கமும் வரட்டியால் மூடி தீமூட்டுவது.  இவ்வாறு சுடப்படதே சக்கரம் என்று அடுத்த வரியில் அகத்தியர் கூறுகிறார்.  சக்கரங்களை அவர் கமலச் சுன்னம் என்றும் அது கண்கொள்ளாத சுன்னம் என்றும் கூறுகிறார்.  இப்போது அதனுடன் காரத்தையும் சாரத்தையும் சேர்க்கவேண்டும். அவை வன்னி அல்லது ஜெயநீர் என்கிறார். இவை சக்தி நிலைகள்.  முடிவில் வீரம் எனப்படும் சிவ பீஜம் சேர்க்கப்படுகிறது.  இவ்வாறு அகத்தியர் சக்கரங்கள் எவ்வாறு உருவாக்கபடுகின்றன என்று கூறுகிறார்.  அனைத்து யோக நூல்களும் சக்கரங்களைப் பேசுகின்றனவே ஒழிய அவை எவற்றால் ஆனவை என்று கூறுவதில்லை.  அகத்தியரே இதை விளக்குகிறார். 

209. Another muppu jaya karpam

Verse 209
முப்புச் செயநீர் பற்பம்
கட்டான கட்டுமுறை திட்டங்கண்டால்
கனகமென்ற பாக்கியங்கள் கைக்குள்ளாகும்
மட்டாக இன்னமொரு முப்பூச்சுன்னம்
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மைந்தா மைந்தா
கிட்டாத அந்தமடா அண்டத்தாதி
கெணிதமுள்ள பூரமுடன் வெளியுங் கூட்டித்
தட்டாமல் கல்வமத்தில் நாத நீறால்
தன்மையுடன் தானரைத்து வட்டுப் பண்ணே

Translation:
Muppu jaya neer karpam
The procedure to tie everything, if this is known
The golden attainments will be achieved
I will tell you about another muppu sunnam
I will tell you the procedure, son, son.
The not-easily-achievable origin of the universe.
Along with pooram add the space
In the mortar, with the water of nadha
Grind it and make it into a cake

Commentary:
Agatthiyar is describing another procedure for muppu sunnam.  He prescribes that the pooram, the space and nadha should be ground together and made into a cake.  The pooram here is Divinity who is fully complete.  Pooram also refers to camphor.  It represents the Supreme Being in the form of flame.  Space represents its all-pervading nature.  The Ultimate Reality is called the light within the space or “veLikkul oLi”.  Thus, this muppu sunnam involves the light and space form of the Divinity with nadha or primordial space.  These are the causes of the manifested universe.  He is continuing the idea in this verse in the next.


அகத்தியர் மற்றொரு முப்பு சுன்னத்தை இப்பாடலில் விளக்குகிறார்.  பூரத்தை வெளியுடன் கூட்டி கலுவத்தில் இட்டு நாத நீர் கொண்டு ஆட்டி வட்டுக்களாக்க வேண்டும் என்று கூறுகிறார் அவர்.  வட்டு என்ற சொல் வட்டம் என்று பொருள் படும்.  பூரம் என்பது கற்பூரம் என்பதையும் குறிக்கும்.  அது இறைவனின் ஒளியுருவத்தைக் குறிக்கும்.  வெளி அல்லது வெட்டவெளி என்பது இறைவனின் எங்கும் விரவியிருக்கும் அருவ நிலையைக் குறிக்கும்.  இறைவனை வெளிக்குள் ஒளி என்று சித்தர்கள் அழைக்கின்றனர்.  இவ்வாறு முப்பு என்பது இறைவனின் ஒளி நிலை, வெளி நிலை மற்றும் நாதத்தைக் கொண்டது. இந்தப்பாடலின் கருத்தை அடுத்த பாடலில் தொடருகிறார். 

Thursday, 22 October 2015

208. Kundalini yoga in terms of siddha medicinal terms

Verse 208
காணாத முப்பூவைக் கண்டால் மைந்தா
கருவான காரமுடன் காரஞ் சேரு
பானான காரமதிற் காரஞ் சேர்த்து
பரிதிமதிச் சுடரான செய நீராச்சு
தேனாக செயநீரில் வீரஞ் சேர்க்கச்
சிவந்ததொரு சென்னீராய் நாதமாச்சு
ஊனான நாதமதைப் பானம் பண்ணி
உப்பு முதல் கற்பூரம் வரையுங் கூட்டே

Translation:
If you see the muppu that is hard to see
Add the essence, the kaaram along with kaaram
After adding kaaram to kaaram
It became the sun, moon and flame- the victorious water
Adding the veeram to the honey-like jayaneer (victory/sacred water)
It became the ruddy, reddish, nadha
Turning the body, the nadha into a liquid
Add it from uppu (salt) upto karpuram (amphor)

Commentary:
Agatthiyar takes the previous verse further.  He says that when Pulattihyar sees the muppu which is hard to see he should add the two kaaram.  Here kaaram means akaaram and ukaaram, not spice!.  Akaara and ukaara are bindu and nadha.  The bindu, eventhough it is later than nadha in emergence, needs nadha to activate it.  Thus, Siva needs Sakthi!  After adding the akara and ukara the triple fires of sun, moon and flame should be kindled.  Agatthiyar says that this is jayaneer or victory water.  In this water Agatthiyar wants Pulatthiyar to add veeram. Veeram or saveeram is mercuric chloride.  It is considered Siva bheejam or the seed of Siva.  Agatthiyar suggests that veeram should be added to the jaya neer.  This means adding the Siva bheeja to the kundalini practice where the agni, surya and Chandra mandala are included along with nadha and bindhu or the akaara and ukaara.  The Siva bheeja is si.  Adding these from uppu to karpooram means making the kundalini sakthi flow from the manifestated state to the supreme state which is equated to camphor.  Camphor moves between form and formlessness, similar to the Supreme state of the Divine.


முந்தைய பாடலை மேலும் தொடர்கிறார் இப்பாடலில்.  காண்பதற்கு அறியமுப்பூவைக் கண்டால் அதனுடன் இரண்டு காரம் சேர்க்கவேண்டும் என்கிறார் அவர்.  இங்கு காரம் என்று குறிக்கப்படுபவை அகாரமும் உகாரமும். அகாரம் என்பது பிந்து உகாரம் என்பது நாதம் என்று முன்பு பார்த்தோம்.  அகாரம் சிவம் என்றும் உகாரம் சக்தி என்றும் குறிக்கப்படுகின்றன.  பிந்து நாதத்துக்குப் பிறகு தோன்றினாலும் அதை செயல்படச் செய்ய நாதம் தேவையாக இருக்கிறது.  இவ்வாறு சிவம் செயல்பட சக்தி தேவை!  இந்தக் கலவையைக் கூட்டியபிறகு முத்தீயை எழுப்பவேண்டும் என்கிறார் அகத்தியர். முத்தீ என்பது அக்னி, சூரியன் மற்றும் சந்திரன்.  இவை மூன்று மண்டலங்கள் என்று முன்னமே பார்த்தோம்.  இவற்றை செயநீர் என்கிறார் அவர்.  இந்த செயநீர் அல்லது வெற்றி நீருடன் வீரத்தைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் அடுத்து கூறுகிறார்.  வீரம் என்பது சவ்வீரம் எனப்படும் பாதரசம்.  பாதரசத்தை சிவ பீஜம் என்பர்.  சிவ பீஜம் என்பது சி என்னும் எழுத்து என்று மேலே உள்ள பாடல்களில் பார்த்தோம்.  இவ்வாறு இந்த இரண்டு பாடல்களின் மூலம் அகத்தியர் லயத்தைக் குறிக்கிறார்.  இந்த குண்டலினி யோகப் பயிற்சியை உப்பு முதல் கற்பூரம் வரை உயர்த்த வேண்டும் என்கிறார் அவர்.  உப்பு என்பது உகாரத்தை, மூலாதாரத்தைக் குறிக்கும்.  கற்பூரம் என்பது பரவெளியைக் குறிக்கும்.  உருவிலிருந்து அருவமாவது கற்பூரம்.  முடிவில் பரவெளியில் கலந்து விடுகிறது.  இது ஜீவன் உருவ நிலையிலிருந்து அருவ நிலையை அடைவதைக் குறிக்கிறது.