Tuesday 4 August 2015

132. Division of people into four classes

Verse 132
கலங்கிநின்ற லோகமதுக் குறுதியாகக்
கருணையுள்ள விஷ்ணு முனிக் கருத்தை வைத்து
இலங்கி நின்ற எட்டிரண்டும் ஒன்றாய்க் கட்டி
ஏகமென்ற வைந்தெழுத்தால் வேதமாக்கித்
துலங்கிநின்ற மனுவை ஒரு நான்கு ஜாதிச்
சுத்தமுடன் தான் வகுத்துச் சுகமாய் மைந்தா
விளங்கிநின்ற க்ஷத்திரிய வங்கிஷத்தில்
விபரமுள்ள நாகமுனி விபரங் கேளே

Translation:
As a support for the world that stood unclear
The merciful Vishnumuni, with thought,
Tying the eight and two that remained gloriously
Making the singularity the Veda through the five letters
The Manu that stood so,
Divided into to four types, happily, son,
In the type of Kshatriya
Listen to the details about the Nagamuni.

Commentary:
Agatthiyar mentions an interesting fact here.  He says that the four divisions or classifications of people was brought about by Vishnumuni who tied together the “eight and two” or akara and ukara, the Siva and Sakthi and made the singularity that emerged so into dharma or that which should be followed, the Veda, through the five letters.  The five letters are namasivaya.  The singularity is the state of union of akara and ukara, the active and passive state of the Divine.  Thus, the four classes or jati were created based on their actions and inactions, that is, they were assigned certains actions and certain inactions or state of rest or contemplation.  Thus Agatthiyar brings out a important fact that jati is not based on birth but based on one’s duties.  Then he mentions that Nagamuni emerged in the Kshatriya jathi and goes ahead to describe his actions. 


இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். இரு துருவங்களான தன்மை தோன்றிய பிறகு உலகு கலங்கி நின்றது என்றும் அதைக் கண்ட விஷ்ணு முனி கருணை கொண்டு எட்டு இரண்டு எனப்படும் அகார உகாரங்களை ஒன்றாகக் கட்டி ஏகம் எனப்படும் ஒருமை நிலையை ஏற்படுத்தி அந்த நிலையை ஐந்தெழுத்தால் வேதமாக்கினார் என்கிறார் அகத்தியர்.  இதனால் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவய மந்திரம் ஏகாந்த நிலையை, அகார உகாரங்கள் சேர்ந்த ஒருமை நிலையை விளக்குவதற்காகத் தோன்றியது என்பது புரிகிறது.  இவ்வாறு வேதத்தைத் தோற்றுவித்த பிறகு விஷ்ணு முனி மக்களை நான்கு ஜாதிகளாகப் பிரித்தார் என்கிறார் அகத்தியர்.  அகார உகாரங்களை ஒன்றாகக் கட்டுவது என்பது செயல்புரியும் நிலை செயலற்ற நிலை என்ற இரண்டையும் ஒன்று சேர்ப்பது.  இவ்வாறு செய்த பிறகு மக்களை ஜாதிகளாகப் பிரித்தார் என்பதனால் சாதிகள் செயல்கள், செயலின்மை ஆகியவற்றின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன என்பதும் ஒருவரது சாதி அவர் பிறந்த குடியினால் ஏற்படுவது அல்ல, அவர் செய்யும் செயல்களினாலும் செய்யாத செயல்களினாலும் இருப்பது என்பது புரிகிறது.  இதனைக் கூறிய பிறகு அகத்தியர் சத்திரிய ஜாதியில் தோன்றிய நாகமுனி என்பவரையும் அவரது செயல்களையும் கூறப் புகுகிறார்.

No comments:

Post a Comment