Monday 3 August 2015

130. Emergence of crops in this world

Verse 130
செய்யென்ற சொன்ன மொழி உமையுங் கேட்டுச்
சிந்தைமன தொன்றாகச் சிவனை நோக்கி
மெய்யென்ற வித்துவதைத் தானுண்டாக்கி
மேதினியில் உயிர் பயிர்கள் மேன்மையாக
மையென்ற திருமால்தான் மேகந்தன்னை
மார்க்கமுடன் நினைக்கையிலே மைந்தாகேளு
பையென்ற முகிலதனால் அமுர்தமுண்டாய்ப்
பார்தனிலே சகலவித்துப் பதிவதாச்சே

Translation:
Listening to the words, “do” Uma
Looking at Siva with mind and intellect in unison
Creating the seed, the body/truth
For the crops, the life, to remain gloriously
Tirumal, the dark one,
Thought about the clouds- listen son,
Nectar occurred due to the clouds
All the seeds were implanted in the world.

Commentary:
This verse talks about crops emerging in this world. Lifeforms cannot exist without food.  Hence creation of crops that feed lifeforms became necessary and so Sakthi created the seeds following Siva’s bidding (seen in the last verse). Tirumal or Vishnu made the clouds rain and the seeds took to life in the world.

Scriptures say that life forms come into this world through the crops.  Souls remain suspended in space.  They descend along with the rain waters that nurish the plants.  The souls enter the plant and become the food that lives consume.  They take residence in the semen of the man and through physical interaction they enter a womb and grow there as a lifeform.  This verse seems to allude to that process.  It may also mean that Sakthi activated the soul, that was exposed to the water element or the svadhistana cakra which is the cause for a particular lifeform.  We have seen in several verses that a soul’s karma is stored in muladhara and it is activated through the svadishtana.  This verse can be interpreted in that angle also.

இப்பாடலில் அகத்தியர் இவ்வுலகில் பயிர்கள் எவ்வாறு தோன்றின என்று கூறுகிறார்.  “நமை வணங்க அனுகிரகம் செய்” என்று சிவன் கூறியவுடன் சக்தி உயிர்களுக்கு உணவளிக்கும் பயிர்களைத் தோற்றுவிக்க வித்து அல்லது விதைகளை தோற்றுவித்தாள்.  இந்த விதைகளுக்கு திருமால் மேகங்களின் மூலம் நீர்வார்த்தார்.  அவை பயிர்களாக உலகில் தோன்றின என்கிறார் அகத்தியர்.

உலகில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று கூறும்போது உயிர்கள் வெளியில், ஆகாயத்தில் இருக்கின்றன என்றும் அவை மழை நீருடன் உலகுள் வந்து பயிர்களுள் நுழைகின்றன என்றும் அந்த பயிர்களை உண்ணும் ஆணுக்குள் அவை விந்துவாக உருவாகின்றன, அந்த விந்து ஒரு பெண்ணுடன் சேரும்போது ஒரு உயிராக வடிவெடுக்கிறது என்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. இந்த முறையில் இப்பாடல் உலகில் உயிர்கள் எவ்வாறு உருபெற்றன என்று கூறுவதாகவும் பொருள் கூறலாம். 


வித்து என்பது மூலம்.  ஒரு உடலில் இந்த வித்து மூலாதாரத்தில் உள்ளது.  அது நீர் தத்துவத்தின் இருப்பிடமான சுவாதிஷ்டான சக்கரத்தின் மூலம் தனது கர்மங்களுக்கு ஏற்ப ஒரு உயிராக உலகில் தோன்றுகிறது என்று யோக நூல்கள் கூறுகின்றன.  இவ்வாறு இப்பாடல் செயலற்ற நிலையில் இருந்த உடல் உயிர் தொகுதி எவ்வாறு இவ்வுலகில் உலவ ஆரம்பித்தது என்று கூறுவதாகவும் பொருள்கொள்ளலாம்.  

No comments:

Post a Comment