Sunday, 30 August 2015

150. Pralaya

Verse 150
ஆண்டுகளும் ஈரொன்ப தாகில் மைந்தா
ஆனசலப் பிரளயம் எழுநூறு கண்டாய்
காண்ட சலப் பிரளயமும் எழுநூறு மீண்டால்
கலங்குமா பிரளயமாம் நூறுதான் மீண்டால்
தோண்டுமொரு பூத சங்காரமெனலாகுஞ்
சுகபூத சங்கார மொரு கோடி மீண்டால்
தாண்டிவரும்போது வந்த சங்காரந்தான்
தருவான சங்காரமொரு மூன்றுமாமே

Translation:
In eighteen years (aandu), son
The pralaya of water seven hundred, see
If the kaanda jala pralaya seven hundred pass by
The turbit maha pralaya- if hundred of them go by
The bhuta samhara will occur
If one crore bhuta samhara goes by
The dissolution (samhara)
A three of them will occur.

Commentary:
This verse talks about jala pralaya when the waters of the world rise up and swallow everything.  Agatthiyar talks about multiple such deluges here.  At the end of seven hundred such deluges the elements will attain laya.  The five elements emerge from mulaprakriti or primordial matter.  Through this pralaya the elements merge back into their origin. 

The concept of samharam or pralaya is interesting.  It follows the principle, the end of anything is the beginning of another.  In this respect every moment witnesses a pralaya when it ends and the next moment begins.  So is the case for breathing.  Thus, kumbaka marks the pralaya as one breath (inhalation or exhalation) ends and the next begins.  This is the reason for the siddhas praising the “andhi sandhi” or the meeting point of one end and the beginning of the next, the sandhi.  One may recall the importance given to Sandhya vandhanam or the worship of the twilight, the meeting point between day and night.

இப்பாடல் ஜலப்பிரளயம் அல்லது நீரினால் உலகம் லயமடைவதைப் பற்றிப் பேசுகிறது.  இத்தகைய பிரளயங்கள் பல ஏற்படுகின்றன என்று அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார்.  இந்தப் பிரளயங்களின் முடிவில் பூத சம்காரம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.  ஐம்பூதங்களின் தோற்றம் மூலப்பிரகிருதியிலிருந்து தோன்றுகிறது.  அதனால் அவற்றின் லயம் அல்லது சம்காரம் என்பது அவை மீண்டும் மூலப்பிரகிருதியை அடைவதைக் குறிக்கிறது. 


சம்காரம் தத்துவம் என்றால் என்ன என்று பார்த்தோமானால் அது ஒன்றின் முடிவின் அல்லது மற்றதன் துவக்கம் என்று தெரிகிறது.  ஒவ்வொரு நொடியும் தான் முடிந்து அடுத்த நொடி தோன்றுவதற்கு இடம் கொடுப்பதனால் சம்காரம் என்பது நொடிக்கு நொடி ஏற்படுகிறது.  அதேபோல் ஒரு மூச்சு முடிந்து அடுத்த மூச்சு தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட சமயம் என்பதும் சம்காரத்தைக் குறிக்கிறது.  இதையே சித்தர்கள் கும்பகம் அல்லது மூச்சற்ற நிலை என்கின்றனர்.   அவர்கள் இதை அந்தி சந்தி என்றும் கூறுகின்றனர்.  சந்தியாவந்தனம் அல்லது பகலும் இரவும் சேரும் அந்திப்பொழுதில் செய்யப்படும் வழிபாட்டை நாம் அனைவரும் அறிவோம்.  

Saturday, 29 August 2015

149. Maal and Vishnu, varusham and aandu

Verse 149
அந்தநாள் ஏழாயிரம் கோடிமீண்டால்
ஆனதொரு ரிஷி முனிவர் பிறந்திடுவாரப்பா
இந்தநாள் பதினாயிரங்கோடி மீண்டால்
இதமான மால்தனக்கு ஒருநாள் ஆகும்
பந்தமுடன் கொண்டநாள் முப்பத்தொருமாதம்
பதிவான மாதமீராறு ஒரு வருஷம்
சொந்தமுடன் வருஷமது அறுபதுமேயானால்
சுகமாகக் கண்டு கொள்ள ஆண்டுகளுமாமே

Translation:
If seven thousand crore such days pass by
One rishi muni will be born
If ten thousand crore such days go by
It will be one day for Maal
Thirty such days is one month
Two sixes of such months is a year
If sixty such years pass by
It will become greater years (aandu).

Commentary:
This verse tells us when a rishi muni is born and the time in the mega scale which constitutes on day in Maal’s scale.  It is interesting to note that in Agatthiyar’s terminology Maal is higher in the hierarchy than Vishnu.  It is also interesting to note that varusham which is usually the name given to a year and aandu, another name for year, refer to two different time scales.  Aandu seems longer than varusham.


எப்போது ரிஷிமுனிவர் பிறக்கிறார் என்றும் மாலுக்கு ஒரு நாள் என்பது என்றும் இப்பாடலில் அகத்தியர் குறிப்பிடுகிறார். மேலும், அகத்தியரின் கால அளவில் மால் என்பவர் விஷ்ணுவைவிட அதிக நாள் இருப்பவர் என்பது போல் தோன்றுகிறது. இவ்விரு பெயர்களும் ஒருவரையே குறிப்பிடப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.  அதேபோல் வருடம் என்பதும் ஆண்டு என்பது இருவேறு கால அளவுகளைப் போலத் தோன்றுகிறது.  ஆண்டு என்பது வருடம் என்பதைவிட நீண்டதாகத் தோன்றுகிறது.

Thursday, 27 August 2015

148. Roma rishi, Brahmamuni

Verse 148
ஆமப்பா அந்தநாள் பதின்கோடி மீண்டால்
அருமையுள்ள ரோமரிஷிக்கு ஒரு ரோமம் உதிரும்
தாமடா ரோமமது மூன்றரையாங்கோடி
சரியாக உதிரும்போ அவர் மரணமாவார்
நாமடா வந்தநாள் மூவிரட்டியானால்
நலமான பிரமமுனியவர்க்குப் பூசை வேளை
ஓமடா சிவபூசை எழுநூறு மீண்டால்
உள்ள முனி ரிஷிகளுக்கு ஒரு நாளுமாமே

Translation:
Yes, Son, if ten crore such days go by
One of the hairs of Romarishi will fall
When three and a half crores of such hair
Fall, he will die.
If six such days go by
It becomes the time for worship for Brahma muni
If seven hundred Siva puja occur
It will be one day for the remaining muni and rishi.

Commentary:
This verse talks about Romarishi we have all heard about.  Agatthiyar says that if ten crore days that he described in the previous verse go by then Romarishi will lose one hair.  When he loses three and a half crores of his hair then he will die.  Brahma muni is next in line and Agatthiyar calls his termination as Siva puja.  If 700 Siva pujas occur then it will be one day for rishi and muni who have a longer life span. 
Based on the number of mala or innate impurities souls are classified as vijnanakala, pralayakala and sakala.  We are the sakala and our life span is determined by the scale of minutes, hours, days etc that we are familiar of.  Pralayakala are souls that terminate when pralaya or dissolution occurs.  The Vijnanakalas are souls that live beyond the pralaya but they are also not eternal.  The rishis and munis mentioned in the previous verses seem to belong to the category, pralayakala while the rishis and munis mentioned here are vijnanakala.  The three types of souls seem to function in different time scales.

இப்பாடல் அகத்தியர் நம்மில் பெரும்பாலோர் அறிந்த ரோமரிஷியைப் பற்றிப் பேசுகிறார்.  முன் பாடலில் கூறிய நாளில் பத்து கோடி கழிந்தால் ரோமரிஷிக்கு ஒரு முடி உதிரும் என்றும் அவரது மூன்றரைக் கோடி முடிகள் உதிரும்போது அவர் இறப்பார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இவரை அடுத்து பிரம்ம முனி என்பவரைப் பற்றியும் அகத்தியர் கூறுகிறார். 

உயிர்கள் அவற்றின் மலத்தின் எண்ணிக்கையைப் பொருத்து விஞ்ஞான கலர், பிரளயகலர் சகலர் என்று மூவகைப்படுவர்.  நாம் அனைவரும் சகலர்கள்.  நமது கால அளவு நாம் அறிந்த வினாடி, மணி, நாள் என்று போகிறது.  பிரளயகலர்கள் என்பவர்கள் பிரளயகாலம் வரை இருப்பவர்கள்.  இவர்களது கால அளவுகளை நாம் முந்தைய பாடல்களில் பார்த்தோம்.  இப்பாடலில் குறிப்பிடப்படுபவர்கள் விஞ்ஞானகலர்கள்.  அவர்கள் மேற்கூறிய இரு வகையினரையும்விட அதிக நாட்கள் இருப்பவர்களானாலும் முடிவில் இறப்பைச் சந்திப்பவர்கள்தான்.  அதையே இப்பாடல் காட்டுகிறது.

147. Enkona muni, Agni muni and Parthumaa muni

Verse 147
கேளடா எண்கோண முனியுமைந்தா
கிருபையுடன் இமைதிறந் திடும்போதையா
சூளடா அவர்தானும் பூரணமே யாவார்
சுகமாக அந்தநாள் நவகோடி சென்றால்
ஆளடா அக்கினிமா முனிதான் மைந்தா
அரகரா பரமபத பாகஞ் சேர்வார்
பாளடா அந்தநாள் எண்கோடி மீண்டா
பார்த்துமா முநியவரும் பரமபதமாமே

Translation:
Listen, The Enkona muni
When he opens his eyes, with mercy,
He will become fully complete
If nine crore such days go by
The Agni mamuni
Araharaa, will become a part of Paramapadam
If eight crore such days pass by
The Parthumaamuni will attain Paramapadam.

Commentary:
Agathiyar is talking about Enkona muni, Agni mamuni and Paartthumaa muni in this verse.  Examination of other siddha verses may explain more about these great souls described here.


இப்பாடலில் அகத்தியர் எண்கோண முனி, அக்னி முனி மற்றும் பார்த்துமா முனி என்பவர்களைப் பற்றிக் கூறுகிறார்.  பிற சித்தர் பாடல்களை ஆராய்ந்தால் இங்கு குறிப்பிட்டுள்ள முனிவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்குமோ என்று தோன்றுகிறது

Wednesday, 26 August 2015

146. Kasi muni, Isvara muni, Enkona muni

Verse 146
காணவே பதிங் கோடி செல்லும்போது
காசிமா முநியவருங் கயிலாசமாவார்
பூணவே அந்தநாள் எண்கோடி மீண்டால்
புகழான மாமுனிக்கி இடறேயாகுந்
தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால்
சுகமான ஈஸ்வரமுனியும் பிரம்மாவாவார்
பேணவே அந்தநாள் ஏழு கோடி சென்றால்
பிலமான எண்கோணமுனி தனக்குக் கேளே

Translation:
If such days ten crores pass by
Kasi mamuni will attain Kailasa
If eight crore such days pass by
The pugazh maamuni will attain completion
If nine such crore days pass by
Isvara muni will become Brahman
If when seven crore such days pass by
The Enkona muni will- hear about him.

Commentary:
This verse talks about Kasi muni, Pugazh Mamuni, Isvara muni and Enkona muni and their life span.  The following link gives the time scales in manvantara and kalpa along with the names of rishis responsible for each of the manvantaram.
இப்பாடலில் அகத்தியர் காசி முனி, புகழ் மாமுனி, ஈஸ்வர முனி, எண்கோண முனி என்பவர்களைக் குறிப்பிட்டு அவர்களது காலங்களைக் கூறுகிறார்.  நமது நூல்கள்

நமது நூல்கள் கால அளவுகளைக் குறிக்கும்போது மன்வந்தரம் கல்பம் என்ற அளவுகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு சப்த ரிஷி குழு பொறுப்பேற்கின்றனர் என்று கூறுகின்றன.  கீழ்க்காணும் தளத்தில் இதைப் பற்றிய விவரங்களைக் காணலாம். https://en.wikipedia.org/wiki/Saptarishi

145. Agora muni, Saradanadha muni, Vishnu muni

Verse 145
பாரடா சுகமாக வனந்த நாள் மைந்தா
பதிவாக ஏழாயிரங் கோடி மீண்டால்
நேரடா வகோரமுநிக்கிருவருமையா
நிசமாக அந்தநாள் எண்கோடி சென்றால்
சாரதா நாதமுனி பூரணமுமாவார்
சங்கையுடன் அந்த நாள் கோடிசென்றால்
பேரடா விஷ்ணுமுனி பரமபதமாவார்
பிலமான அந்த நாள் பதிங்கோடிதானே

Translation:
See son, if the eternal days
Seven thousand crores occur
It is two (years) for Agora muni
If eight crore such days pass
The Sarada Nadha muni will attain completion
If one crore such days go by
Vishnumuni will attain paramapadam
The locus, ten crore such days.

Commentary:
This verse describes the lifespan of Agora muni, Sarada Nadha muni and Vishnu muni.  We may recall that these munis were mentioned in the earlier verses that described creation. 


இப்பாடலில் அகோரமுனி, சாரதா நாத முனி மற்றும் விஷ்ணு முனியின் ஆயுட்காலம் எவ்வளவு என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த முனிவர்களை அகத்தியர் உலகம் தோன்றிய வரலாற்றை விளக்கிய முந்தைய பாடல்களில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூறுவோமாக.

144. Pralaya

Verse 144
காணப்பா அவ்வருஷம் அறுபதுதான் கூடிக்
கருவான ஆண்டுயுகம் என்பார் மேலோர்
பூணப்பா ஆண்டுயுகம் பதினெட்டு சென்றால்
பொங்குகடல் பிரளயமாய்க் கண்டு பாரு
வேளப்பா பிரளயமும் நூறாயிரமுமானால்
பெரிதான நாள்பெருக்கம் பேணிப்பாரே
தோணப்பா அப்பெருக்கு ஈரெட்டு சென்றால்
சுகமான இந்திரர்க்குப் பூரணமாம் பாரே

Translation:
See son, sixty such years together
The wise ones call it a year eon (aandu yugam)
If eighteen such eon-year pass by
The sea will rise causing dissolution (pralaya)
If the pralaya time of hundred thousand passes
The great day will be completed
And if sixteen such great days pass by
Indra will attain completeness.

Commentary:
This verse tells us the lifespan of Indra.  In the previous verse Agatthiyar mentioned a year to contain 127,35, 28, 000 years.  Here he says that if sixty such years pass by it is called a eon-year (aandu yugam).  Eighteen such eon years will cause the waters of the sea to surge up causing complete dissolution or pralaya.  If the time for hundred thousand pralaya passes it will be the great day.  Eighteen such great days constitute the lifespan of Indra.  These scales are beyond our comprehension!


இப்பாடலில் அகத்தியர் இந்திரனின் வாழ்நாள் எவ்வளவு என்று கூறுகிறார்.  முந்தைய பாடலில் அவர் ஒரு வருடம் பிரம்மாண்ட அளவில் ஒருவருடம் என்பது 127, 35, 28, 000 வருடங்களைக் கொண்டது என்று கூறினார்.  அத்தகைய வருடங்கள் அறுபது கழிந்தால் அது ஒரு ஆண்டு யுகம் என்றும் பதினெட்டு ஆண்டு யுகங்கள் கழிந்தால் கடல் மேலெழுந்து பிரளயம் ஏற்படும் என்றும் அத்தகைய பிரளய ஆண்டு நூறாயிரம் கழிந்தால் ஒரு நாள் பெருக்கம் ஏற்படும் என்றும் அத்தகைய அறுபது தினங்கள் கழிந்தால் இந்திரனின் வாழ்வு பூர்த்தியடையும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த கால அளவுகளை நம்மால் கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை!  

Tuesday, 25 August 2015

143. A day, month and a year in the macro scale

Verse 143
ஆமப்பா இந்த யுகம் பதினெட்டு மைந்தா
அப்பனே கூடியொரு சதுர்யுகமாகுந்
தாமப்பா சதுர்யுகம் பதினெட்டு சென்றால்
தயவான இந்திரனுக்கு ஒரு நாளாகும்
ஓமப்பா அந்தநாள் ஆறைந்துகூடி
உத்தமனே சொல்லுகிறேன் ஒரு மாதமாகும்
போமப்பா அம்மாதம் பனிரெண்டுகூடி
புத்தியுடன் வருடமெனப் புகழ்ந்து காணே

Translation:
Yes, son these eighteen eons
Together constitute chaturyugam
If chaturyugam eighteen passes
It will be one day for Indra.
If 30 days of such a day passes by
The good one! It will be one month
If that twelve such months pass
Then see it as a glorious year.

Commentary:
This verse gives the calculations for a day, a month and a year in the macroscale.  When we add all time for all the eons we come up with 127, 35, 28, 000 years.  This is considered a day for Indra the chief of the Devas.  Thirty such days consititute a month and twelve such months constitute a year.


பிரம்மாண்ட கணக்கில் ஒரு நாள், ஒரு மாதம் ஒரு வருடம் என்றால் எவ்வளவு காலம் என்று இப்பாடலில் அகத்தியர் குறிப்பிடுகிறார்.  மேற்கூறிய பதினெட்டு யுகங்களின் கால அளவைக் கூட்டினால் நூற்று இருப்பத்தேழு கோடி முப்பத்தைந்து லட்சம் இருபத்தெட்டாயிரம் ஆண்டுகள் வருகின்றன.  இது இந்திரனின் ஒரு நாள் என்கிறார் அகத்தியர்.  இத்தைய நாட்கள் முப்பது சென்றால் ஒருமாதமாகும் என்றும் அத்தகைய மாதங்கள் பனிரெண்டு சென்றால் ஒரு வருடமாகும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

Friday, 21 August 2015

142. Summary of the eons

Verse 142
பாரடா திரேதாயுகம் அதனைக் கேளு
பதினேழுலக்ஷத்தொன்பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக் கேளு
விருபது லக்ஷத் தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் அதனைக் கேளு
தீர்க்கமுடன் ஒன்பது லக்ஷத்து ஒன்பதினாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் நாலு லக்ஷத்து முப்பதினாயிரமாம்

Translation:
See threthaayugam, listen about it
It is 17 lakhs 9 thousand
The supreme krethaayugam listen about it
20 lakhs 9 thousand
Listen about dvaapara yuga
It is 9 lakh 9 thousand
The kaliyuga, the most difficult one, Son.
See it to be 4 lakh 30 thousand.

Commentary:
Agatthiyar concludes the list of the eons in this verse.  Please find the list of these yugas at http://www.siththarkal.com/2011/10/blog-post_21.html also.

Variyin yuga- 14 crore years
Arpudhanaar yugam- 10 crore
Thanma yugam- 12 crore years
Janya yuga (not found in the verse but makes up for the number)- 10 crore
Veera raajan yugam- 20 crore years
viN yugam- 16 crore
vaayu yugam- 7 crore
maina yugam- 6 crores
manigal yugam- 6 crores
atthE yugam- 19 crores
paniyiratha yugam- 4 crore years
visvaasana yugam- 3 crore
thrEthaa yugam- 17,09,000 years
krEthaa yugam- 9,10,000 years
dvaapara yugam- 9,09,000 years
kaliyuga- 1,30,000 years

Agatthiyar says that kali yuga is the most difficult one.

அகத்தியர் இப்பாடலில் யுகங்களைப் பற்றிய விவரங்களை முடிக்கிறார்.  யுகங்கள் பதினெட்டு என்று கூறிய அகத்தியர் அவற்றின் பெயர்களையும் காலவிவரங்களையும்  தருகிறார்.
அவை:
வரியின் யுகம்- 14 கோடி வருடங்கள்
அற்புதனார் யுகம்-10 கோடி வருடங்கள்
தன்ம யுகம்- 12 கோடி வருடங்கள்
ஜன்ய யுகம்-10 கோடி வருடங்கள்
வீரராசன் யுகம்- 20 கோடி வருடங்கள்
விண் யுகம்-  16 கோடி வருடங்கள்
வாயு யுகம்- 7 கோடி வருடங்கள்
மைன யுகம்- 6 கோடி வருடங்கள்
மணிகள் யுகம்- 6 கோடி வருடங்கள்
அத்தே யுகம்- 19 கோடி வருடங்கள்
பணியிரத யுகம்- 4 கோடி வருடங்கள்
விஸ்வாசன யுகம்- 3 கோடி வருடங்கள்
திரேதா யுகம்- 17, 09,000 வருடங்கள்
கிரேதா யுகம்- 9,10,000 வருடங்கள்
த்வாபர யுகம்- 9,09,000 வருடங்கள்
கலியுகம்-  1,30,000வருடங்கள்

 இவற்றில் மிகக் கடினமானது கலியுகம் என்கிறார் அகத்தியர்.

Monday, 17 August 2015

141. List of eons continued..

Verse 141
தானென்ற விண்ணதனில் ஈரெட்டு கோடி
தருவான வாய் தனக்கு யுகம் ஏழு கோடி
மானென்ற மைனயுகம் இரு மூன்று கோடி
மகத்தான மணிகள் யுகம் இரு மூன்று கோடி
பானென்ற பணியிரதம் நான்கு கோடி
பதிவான விஸ்வாசண் யுகம் மூன்று கோடி
வானென்ற வாய்தன் யுகம் ஒரு கோடியாகும்
மார்க்கமுடன் திரேதா யுகந்தன்னைப் பாரே

Translation:
In the vin yugam sixteen crore                          
In the vayu yuga seven crore
Maina yuga six crore
Manigal yuga six crores
Attheyugam is nineteen crores
Paniyiradha yugam is four crores
Vivaasana yugam is three crores
Vaaithan yugam one crore
See about the threthaa yugam.

Commentary:
Agatthiyar continues further about the yugas in this verse.  We will summarize them in the next verse.


யுகங்களின் பட்டியலை இப்பாடலிலும் தொர்டர்கிறார் அகத்தியர்.  இதனை ஒரு பட்டியலாக அடுத்த பாடலில் காண்போம்.

Sunday, 16 August 2015

140. Description of the eons

Verse 140
கேளடா புலத்தியனே மைந்தா நீயும்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழு கோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறு கோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டு கோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லி வாரேன்
கனமான வீராசன் நாலைந்து தானே

Translation:
Listen son, Pulatthiya!
The eons are eighteen
The vari yuga is two seven (fourteen) crores
The yuga of Arpudhanaar is two five (ten) crores
The thanma yuga is two six (twelve) crores
The great raasi yuga is two eight (sixteen) crores
Time, I am recouting all the yuga
The heavy veeraajan is four fives (twenty)

Commentary:
Agatthiyar is describing the different yugas or eons.  He is listing the yuga as follows:
Vari (14 crore years), arpudhanaar (ten crores), thanma (twelve crores), raasi (sixteen), veeraajan (twenty crore years).


இப்பாடலிலிருந்து அகத்தியர் யுகங்களைப் பட்டியலிடுகிறார்.  வரியுகம் 14 கோடி வருடங்கள், அற்புதனார் யுகம் 10 கோடி வருடங்கள், தன்ம யுகம் 12 கோடி யுகம், ராசி யுகம் 16 கோடி வருடங்கள்,  வீராசன் யுகம் 20 கோடி வருடங்கள் என்கிறார் அவர்.

Thursday, 13 August 2015

139. Conclusion and yuga

Verse 139
பாரான பார்தனிலே மனுவுண்டாக்கிப்
பதிவாக வந்தபின்பு அனேக சாஸ்திரம்
நேரான சாஸ்திரங்கள் சூத்திரங்கள்
நேர்மையுள்ள ரிஷி முனிவர் சித்தரெல்லாம்
மேரான கிரிதனிலே தபசு பண்ணி
வெகுகோடி காலம்வரை யோகஞ் செய்து
பேரான வெளியோடு வெளியாச் சேர்ந்தார்
பலமான காலயுகம் பேசக்கேளே

Translation:
Creating Manu in the world
After he emerged, several sastras
The truthful sastra, sutra (were created).
The honest rishi, muni and siddha
Performing tapas on the Meru Giri
Performing yogam for several crores of years
Joined the space becoming space themselves.
Listen to the talk about time and yuga.

Commentary:
Agatthiyar concludes his exposition on creation by saying that following the creation of Manu several sastra, sutra etc were created and that rishi, muni and siddhas so created remained on Meru giri performing yoga for a very long time.  In the end they reached the state of space and merged with it.
From this verse we understand that the ultimate state or the end point is space and becoming space is the terminal goal.  Rishis, munis and siddhas are souls that are not touched by karma.  Hence, they spent their time in the state of yoga by raising their consciousness to the Meru Giri or the peak of consciousness.  By their choice they remained in the individual state or became space itself.  Agatthiyar starts to describe what is meant by yuga or eons.


படைப்பைப் பற்றிய தனது விளக்கங்களை அகத்தியர் மனுவைப் படைத்த பிறகு சாத்திரங்கள், சூத்திரங்கள் ஆகியவை படைக்கப்பட்டன என்று கூறி முடிக்கிறார்.  அவ்வாறு படைத்த பிறகு ரிஷி, முனி, சித்தர்கள் ஆகியோர் மேரு கிரி எனப்படும் உணர்வின் உச்சத்தில் பல கோடி யுகங்கள் யோகம் புரிந்து தாமே வெளியாகி வெளியுடன் கலந்தனர் என்கிறார் அவர்.  இதனால்  உச்ச நிலை என்பது வெளியாவது வெளியுடன் கலப்பது என்பது நமக்குக் காட்டப்படுகிறது.  சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்பவர்கள் கர்மத்தினால் தொடப்படாதவர்கள் என்பதும் புலப்படுகிறது.  விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்று ஆத்மாக்கள் மூவகைப்படுவர்.  ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் விஞ்ஞானகலர் என்ற நிலையில் இருப்பவர்கள்.  இதனை அடுத்து அகத்தியர் யுகம் என்றால் என்ன என்று விளக்க ஆரம்பிக்கிறார்.