Verse 76
ஆச்சப்பா சோதி வெகு காந்தியாகும்
மாகார வவ்வேளை யறிவாய் நின்று
மூச்சப்பா நிறைந்ததொரு வாசியாலே
முனையான சுழிமுனையில் வாசி நாட்டி
பேச்சப்பா தானிருத்தி மவுனமாக
பெருமையுடன் சிவயோகத் திருந்தாயாகில்
போச்சப்பா அபமிருத்தி அகன்றுபோகும்
பொன்னொளிவு தேக காந்தி ஆச்சு பாரே
Translation:
That effulgence
will be brilliant
Remaining at
that time as consciousness
The breath,
Son, with a fully completel vaasi
Planting the
vaasi at the tip of the whorl (ajna)
Stopping the
talk and becoming silent
If you remain
in Siva yoga
Death will go
away
The body will
glow with a golden hue.
Commentary:
Agatthiyar is
talking a very important stage in kundalini yoga. Several Siddhas including Ramalinga Adigal
had their material body turn into body of light. Agatthiyar’s this verse explains that
state. When the yogi’s consciousness
crosses the gurupathi and when he remains as pure consciousness with the vaasi
or the lifeforce planted firmly at the ajna in a state of silence, the state of
Siva yoga, then his body will glow with a golden hue. Siddhas such as Tirumular and Sivavaakiyar
say that every hair follicle will shine with a golden hue. The state described in this verse is not the
ultimate state as the yogi does not take up a body of light. His material body glows with the golden
hue. Siva is called ponnaar meniyan or
one with golden body.
இப்பாடலில் அகத்தியர் குண்டலினியின் ஒரு முக்கியமான
நிலையைக் கூறுகிறார். சித்தர்களின்,
ராமலிங்க அடிகள் உட்பட, தமது பருவுடலை ஒளியுடலாக மாற்றுவதை முக்கிய குறிக்கோளாகக்
கொண்டிருந்தனர். அகத்தியரின் இப்பாடல்
அந்த நிலையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியை விளக்குகிறது. ஒரு யோகி அறிவு நிலையில், அதாவது
விழிப்புணர்வாக இருந்து வாசியை சுழிமுனை எனப்படும் ஆக்னையில் பதித்து மௌன
நிலையில், சிவ யோகத்தில் நின்றால் அவரது உடல் பொன்னொளி வீசும் என்கிறார்
அகத்தியர். திருமூலரும் சிவவாக்கியரும்
இதைக் குறித்து அந்த யோகியின் உடலில் ஒவ்வொரு மயிர்க்காலும் பொன்னொளி வீசும் என்று
கூறியுள்ளனர். சிவபெருமான் பொன்னார்
மேனியன் என்று அழைக்கப்படுவது இக்கருத்தில்தான், குண்டலினி யோகத்தின் ஒரு நிலையைக்
குறிக்கத்தான்.
No comments:
Post a Comment