Monday, 11 May 2015

62. Benefit of Manipurakam practice-2

Verse 62
நோக்குவது பூரணச் சந்திரனை நோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
நாக்கு நுனி யந்தமதில் வாசி நின்று
நலங்காமல் தீபமதில் நாடும் பாரு
வாக்கு மனதொன்றாகி நின்று பாரு
மக்களே கண் பசுவு வாழ்வுண்டாகும்
தூக்கமென்ற கொடுமை தனை அகற்றி மைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே

Translation:
See the fully complete moon,
If you remain fully absorbed in that state, as fully complete
Vasi will remain at the tip of the tongue
And seek the flame unwaveringly.
See with words and mind in unison
The life of pasu will ensue, People!
Removing the torture, sleep, Son,
Knowing the blissful place remain there happily.

Commentary:
In the previous verses Agatthiyar mentioned that the muladhara practice purified the Jivakala or qualities of a soul.  The svadishtana practice by such a pure soul reveals the Brahman.  Now, he explains that the manipuraka practice will offer the soul the status of pasu.  Among the three entities pati, pasu and pasam pati is the Lord, pasu is jeevatma and pasam is the attachment.  Tirumular explains these terms as follows:  Pati is the status of the soul when it is free of all mala or innate impurities.  Pasu is the state when the soul has the impurities but it is aware of it.  It is aware of its original nature as pure consciousness that is attached to factors that limit it.  Pasu does not refer to a soul that is unaware of its true nature.  Thus, when Agatthiyar says the life of pasu will occur he means a soul that is aware of its true nature.  However, the soul has not freed itself from its limitations or pasa.  Pasa also refers to the relationship between Pati and Pasu.  It corresponds to the means through which pasu realizes that it is actually pati.

Agatthiyar mentions that during manipuraka practice the vaasi will remain at the tip of the tongue.  This is a state of complete focus and the soul will seek the flame of consciousness.  Hence, Agatthiyar says that the practitioner should have his mind and words in harmony.
Agatthiyar calls sleep as a torture as sleep immerses the soul in ignorance.  Agatthiyar instructs that one should lose the sleep and remain in the blissful state that ensues during this practice.

முந்தைய பாடல்களில் அகத்தியர் மூலாதாரப் பயிற்சி ஜீவகலையைத் தூய்மைப் படுத்தும் என்றும் சுவாதிஷ்டான பயிற்சி பிரம்ம சொரூபத்தைக் காட்டும் என்றும் கூறினார்.  இப்பாடலில் அவர் மணிபூரக சக்கரப் பயிற்சி பசு நிலையை அளிக்கும் என்கிறார்.  பதி பசு பாசம் என்ற மூன்றில் பத்தி என்பது பரவுணர்வு நிலையைக் குறிக்கும். பசு என்பது தான் தூய விழிப்புணர்வு, ஆனால் பாசத்தால் அளவுக்குட்பட்டதைப் போல எண்ணுபவன் என்று ஜீவாத்மா உணர்ந்த நிலை என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிக்கிறார்.  தனது நிலையை உணர்ந்தாலும் ஜீவன் இதில் பாசத்தில் தோய்ந்திருக்கிறது. பசு என்பது தன்னையறியாத நிலையல்ல.

இந்தப் பயிற்சியின்போது வாசி நாக்கு நுனியில் நிற்கும் என்கிறார் அகத்தியர்.  “நலுங்காமல் தீபமதில் நாடும்” என்பது ஆத்மா, விழிப்புணர்வு என்ற தீபத்தை நாடுவதைக் குறிக்கிறது.  வாசி இவ்வாறு நின்றால் மனமும் சொல்லும் அதன் பலனாக காயமும் இசைந்திருக்கும் நிலை ஏற்படும்.  அந்நிலையில் ஆத்ம ஜோதியை நாடுவது சாத்தியமாகிறது.  அகத்தியர் தூக்கத்தைக் கொடுமை என்கிறார்.  ஏனெனில் அது ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்துவிடுகிறது.  அதனால் ஒருவர் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment