Thursday, 7 May 2015

57. Benefits of perceiving the muladhara and continuing the practice

Verse 57
காணடா கனிவாகக் கண்டாயானால்
கருணையுள்ள சிவலோகம் உறுதியாச்சு
பூணடா சிவயோகம் உறுதியானால்
பொற்கமலம் உச்சியிலே தீபங்காணும்
பேணடா தீபமதை தினமும் நோக்கிப்
பிசகாமல் வாசியிலே பிலமாய் நில்லு
தோணடா அவ்வாசிப் பிலமாய் நின்றால்
சுக சீவ பிராண கலை சுத்தமாச்சே

Translation:
See son, if you see humbly
The merciful siva loka is guaranteed
You adorn it if the siva yoga becomes firmly established
The flame will be seen at the golden lotus top
Nurture the flame, by seeing it daily
Remain firmly in the vaasi, without fail.
If you remain in the vaasi so,
The comfortable, Jiva kala gets purified.

Commentary:
After describing the method to perceive the muladhara, Agatthiyar describes the benefit derived from that practice.  He calls this as siva yogam. If one performs this siva yogam daily one will see the flame of the soul at the “golden lotus top”.  This may mean sahasrara or the ajna.  This practice guarantees the siva loka or the space of Siva for the practitioner. However, one has to perform this practice daily and remain in vaasi or the pattern of breathing and the ascent of kundalini.  This practice purifies Jiva kala. 
Tirumular talks about five types of kala in his Tirumandiram.  They are pra


மூலாதாரத்தை எவ்வாறு பார்ப்பது என்று முந்தைய பாடலில் கூறிய அகத்தியர் இப்பாடலில் அவ்வாறு செய்வதனால் வரும் பலனைக் கூறுகிறார்.  இந்தப் பயிற்சியை அவர் சிவயோகம் என்கிறார்.  இந்த சிவயோகம் உறுதிப்பட்டால் சிவலோகத்தைப் பெறுவது உறுதி என்கிறார்.  இந்தப் பயிற்சியை ஒருவர் தினமும் செய்து வாசியில் நின்றால் பொன்கமல உச்சியில் சோதி தெரியும் என்கிறார்.  இங்கு ஆத்ம தரிசனத்தைப் பற்றிப் பேசுவதால் இது ஆக்ஞை என்று தோன்றுகிறது.  இதனால் சீவகலை தூய்மையடையும் என்கிறார் அவர்.  

No comments:

Post a Comment