Verse 69
ஆமப்பா யோகமென்று சிவயோகந்தான்
அருளான முச்சுடரின் அந்தத்தாலே
ஓமப்பா முச்சுடரின் அந்தம் பார்த்தால்
ஒளி விளக்காய் நின்றதொரு மூலத் தீதான்
வாமப்பா நிறைந்த தொரு மூலத்தீதான்
வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலே
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப் பாரு
நாதாந்த மயேஸ்வரத்தைக் காணலாமே
Translation:
Yes son, it is the Siva yogam
Due to the termination of the triple flames, the grace
Yes son, if the termination of the triple flames is seen
It is the fire of muladhara that stood as lighted lamp
It is the fire of muladhara the fully complete with vama
It grew on top of the peak of six angles
I am telling now, see well
The nadhantha Maheswaram can be seen
Commentary:
Vishuddhi cakra is the locus of Maheswara principle. The five actors or pancha kartha, Sadasiva,
Maheswara, Rudra, Vishnu and Brahma represent five different principles. They are located at the five cakras of ajna,
vishuddhi, anahata, manipuraka and svadhishtana. They represent various principles. Hence, when Agatthiyar says that Maheswaram
will become visible it means the principles that Maheswaran represents will be
realized by the yogi. To name a few, the
pancha kartha represent the five states of consciousness. Brahma represents jagrit, Vishnu the svapna,
Rudra the sushupti, Maheswara the turiya and Sadasiva the turiyatheetha. They also represent the soul that has freed
itself from the innate impurities one at a time. They represent the five actions of creation,
sustenance, dissolution, concealment and bestowal of grace.
Agatthiyar explains the triple fire of the sun, moon and
agni as nothing but ramifications of the fire of kundalini in muladhara. He says that if one looks at the terminus of
the triple fires one will recognize that it is the fire of muladhara. It increases in its stature and appears as
the triple fires.
He calls the experience at the vishuddhi as sivayogam or
joining with sivam or higher consciousness.
விசுத்தி சக்கரம் மகேச்வர தத்துவத்தின் இடம். அங்கு மகேச்வர தத்துவம் வெளிப்படுகிறது. பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன்,
ருத்திரன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் முறையே ஆக்ஞா, விசுத்தி, அனாஹதம்,
மணிபூரகம், சுவாதிஷ்டானம் என்ற சக்கரங்களில் தோற்றமளிக்கின்றனர். இதனால் அவர்கள் இந்த சக்கரங்களில்
அமர்ந்திருக்கின்றனர் என்று பொருளல்ல.
இவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வின் ஒவ்வொரு நிலையைக்
குறிக்கின்றனர். பிரம்மா சாக்ரத்
எனப்படும் விழிப்புநிலையையும் விஷ்ணு சுவப்னம் எனப்படும் கனவு நிலையையும் ருத்திரன்
சுஷுப்தி எனப்படும் ஆழ்உறக்க நிலையையும் மகேஸ்வரன் துரிய நிலையையும் சதாசிவன்
துரியாதீத நிலையையும் குறிக்கின்றனர். இவர்கள் ஆத்மா தனது மலங்கள் ஐந்தை, ஒவ்வொன்றாக
இழந்த நிலையைக் குறிக்கின்றனர். இவ்வாறு
அவர்கள் பல்வேறு தத்துவங்களுக்கு நிலைகளுக்குக் குறியீடுகளாக இருக்கின்றனர்.
முச்சுடர் அல்லது முத்தீ என்பது சூரியன், சந்திரன், அக்னி
என்ற மூன்றையும் குறிக்கும்.
இந்த மூன்றுவித ஒளிகளும் மூலாதாரத்தில் உள்ள அக்னியின்
வெளிப்பாடுகளே என்கிறார் அகத்தியர்.
மூலாதாரத்தில் உள்ள ஒளி விளக்கே இவ்வாறு மூன்று தீக்களாக காணப்படுகிறது,
இதை ஒருவர் அவற்றின் அந்தத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.
விசுத்தியில் பெரும் அனுபவம் சிவயோகம், உயர்
விழிப்புணர்வுடன் சேர்க்கை என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment