Verse 68
போட்ட பின்பு மனதுகந்து மனக்கண் சாத்தி
பூரணமாய் வங்கிலி யங்கென்றிட்டு
நாட்டமுடன் தானிருந்து ஒரு நூறு மைந்தா
நன்மையுடன்தான் செபித்து நயனமேவி
தேட்டமுடன் குருபதியில் சென்று பாரு
சிவ சிவா வாய்வேக லகிரியுண்டாம்
வாட்டமில்லா லகிரியடா வாய்வேகமாகு
மகத்தான யோக சிவ போதமாமே
Translation:
After drawing, with happiness in the heart, adorning the
mental eye
Add vang, kili, yang
Reciting with desire hundred times
Chanting so go to the eye (third eye)
Go to the Gurupathi and see
Siva sivaa! Enchantment
due to vayu
The undaunted vayu and enchantment will speed up
The glorious yoga siva bodham will occur.
Commentary:
Vishuddhi cakra practice places the yogin in a state of
enchantment. This occurs due to increase
in the speed of vayu or prana. One is
able to perceive this mentally.
Gurupathi is a spot close to the ajna.
Some call the ajna as the gurupati. However, some Siddhas (Gorakshanath)
call a spot above ajna as gurupathi.
Agatthiyar talks about a “laahiri” that this practice confers. Amarakavi Siddheshwara calls this state as
aanandha aaspadam. He says that this
enchantment will submerge a yogin and make him lose his way and that one should
guard against this enchantment.
விசுத்தி சக்கரப் பயிற்சி யோகியை லகிரி நிலைக்கு இட்டுச்
செல்லும் என்கிறார் அகத்தியர். இது வாயு
எனப்படும் பிராணனால் ஏற்படுகிறது என்கிறார் அவர்.
இந்த நிலையை ஒருவர் மனக்கண்ணால் குருபதியில் பார்க்க முடியும்
என்கிறார். குருபதி என்பது ஆக்ஞை என்று
சிலர் கூறுகின்றனர். சில சித்தர்கள்
(கோரகனாதர்) இந்த சக்கரம் ஆக்ஞைக்கு சிறிது
மேலே இருக்கிறது என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment