Verse 59
கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றநிலை பார்க்கும்போது
சோதியொன்று தோணுமடா பிரம சொரூபம்
ஆளடா பிரம்ம நிலை ரூபங்கண்டால்
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
காலடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரணத்தைக் காணலாமே
Translation:
Listen son,
knowing its position, with the help of vaasi
Remain in the
top and bottom and see well,
When it is
seen
A flame will
appear, the form of Brahman
If the form of
Brahman is seen
The hard to
control vaasi will abide in the house/locus
The air, the
vaasi, if it remains controlled,
The fully
complete whose perception overflows the sight, can be seen.
Commentary:
Agatthiyar
states that the jiva who perceives its true, pure nature through the prescribed
practice at the muladhara will see the Brahma svaroopa when it remains in the
svadishtana cakra. Vaasi will help in
the process. Vaasi is not simple breathing.
It is drawing the life force in through breath. This process can be regulated by regulating
the breath. By stating that the vaasi
will abide in the locus Agatthiyar is indicating the kumbaka state where there
is no inhalation or exhalation. In this
state the soul experiences the Supreme, the poorana. The sight is so overwhelming. It fills the eye and overflows.
மூலாதாரத்தில் செய்யவேண்டிய பயிற்சிகளின் மூலம் சீவகலையைத்
தூய்மைப்படுத்திய ஜீவன் சுவாதிஷ்டான சக்கரப் பயிற்சியின் மூலம் பிரம்ம சொருபத்தைப்
பார்க்கிறது என்கிறார் அகத்தியர். இந்த
அனுபவத்தைப் பெற வாசி உதவுகிறது. வாசி
என்பது வெறும் மூச்சுப் பயிற்சி அல்ல. அது
பிரபஞ்ச சக்தியை சுவாசத்தின் மூலம் உள்ளிழுப்பது.
சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வாசி கட்டுக்கொள்
கொண்டுவரப்படுகிறது. அதனால்தான் இந்த
சுவாதிஷ்டானப்பயிர்சியில் அது வீட்டில் அடங்குகிறது என்கிறார் அகத்தியர். வாசி அடங்குவது என்பது கும்பக நிலை, உள்மூச்சு
வெளிமூச்சற்ற நிலை. இந்த நிலையில் ஜீவன்
பரம்பொருளை பிரம்மசொரூபத்தை பரிபூரணத்தைப் பார்க்கிறது என்கிறார் அவர். இந்தக்
காட்டி கண்ணுக்குள் அடங்காதது என்றும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment