Verse 64
போடப்பா விந்து நடு ஓங்காரந்தான்
பூரணமாய் சிங்கிலி யொன்று நாட்டி
நாடப்பா விந்து நடு முனை மையத்தில்
நாடிநின்று சிங்கிலி என்று சொல்லி
வீடப்பா பிலப்பதற்கு தினம் நூற்றெட்டு
விரும்பி மன தரிவதினால் உருவே செய்தால்
சூடப்பா தானேறி முனை மையத்தில்
சூரியன்போல் காந்தி வெகு சோதியாமே
Translation:
Draw son, the
bindu and the omkara in the middle
Establishing as
sang kili
In the middle
tip of the bindhu in the center
Uttering sing
kili
To reach the
house utter hundred and eight times
If recited
with heart and mind that are interested
Heat will
increase in the center of the tip
A brilliance
like the sun, a flame, will occur.
Commentary:
This is an
interesting verse that describes the origin of the flame that Agatthiyar and
other Siddhas talk about frequently. In
this verse which describes the anahata practice, Agatthiyar mentions that the
omkara and sang and kili are written in the middle of two interlocking
triangles and these letters are uttered mentallyhundred and eight times.
Then heat will increase in the tip, which may be the ajna, and it will
appear as a flame with the brilliance of the Sun. This is the atma jyothi we read about in all
the Siddha verses.
அனாகத பயிற்சியை விளக்கும் இப்பாடலில் அகத்தியர் சித்தர்கள்
அனைவரும் கூறும் ஜோதி எவ்வாறு தோன்றுகிறது என்று விளக்குகிறார். மேற்கூறிய இரு முக்கோணங்களின் மத்தியில்
ஓம்காரம் சங் கிலி என்று எழுதி அந்த
அட்சரங்களை மனதுள் நூற்றியெட்டு முறை செபிக்க வேண்டும் என்று கூறும் அகத்தியர்
அவ்வாறு செய்தால் உள்ளே சூடேறி முனை எனப்படும் ஆக்னையில் சூரியனைப் போல ஒரு ஒளி
தோன்றும் என்கிறார். இதைத்தான் பல நூல்கள்
ஆத்ம ஜோதி என்கின்றன.
No comments:
Post a Comment