Verse 75
போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
பூரணச் சந்திரனுடைய பிறப்பைக் கண்டால்
காமப்பால் காணற்பால் கருணை தங்கும்
கலையான வாசியது கடக்காதப்பா
சோமப்பால் சொலிக்குமடா அந்தப்பாலை
அந்தமுடன் நித்தியமுங் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான்தானாகுந்
தானான ஆதார மூலம் பாரே
Translation:
All the
diseases and ailments will leave
When the birth
of the fully complete moon’s birth is witnessed
When the
desires elements are seein mercy will remain
The vaasi, the
kala will not exceed
The essence of
the moon will shine.
If you consume
that milk daily
The state of
self will become the Self
See the origin
of the adhara, the Self.
Commentary:
Agatthiyar is
talking about three types of “paal”.
They are kaamappaal or the milk from the breast, kaaNarpaal the essence
of desire or the worldly objects and somappaal the milk of the moon. According to the Siddhas, if one gives up
kaamappaal and kaanar paal then somappaal or the secretion from the lalata will
ooze. Here Agatthiyar is describing the
same concept. He says that when one experiences the emergence of the poorna Chandra then the
desires towards worldly objects including physical pleasure will vanish and
only mercy or love towards everything remains.
In this state the vaasi will remain within, life force will not be
wasted and the milk from the moon will ooze.
The somappaal is also called “amudhappaal” or the nectar like milk, “maangaaippaal”
or the milk of the mango (this is due to the structure from which the secretion
occurs) and by several other names. This divine nectar is said to confer
immortality. Agatthiyar says that if one
consumes this fluid daily then one will be free of physical limitations and
attachments. One will remain in the
state of Self. The limited self will
become universal Self.
இப்பாடலில் அகத்தியர் மூவகையான பால்களைப் பற்றிப் பேசுகிறார். அவை காமப்பால், காணற்பால் மற்றும் சோமப்பால்
என்பவை. காமப்பால் என்பது முலைப்பால்,
காணற்பால் அல்லது கானற்பால் என்பது உலகப்பொருட்களில் ஆசை. சோமப்பால் என்பது
லலாடத்திலிருந்து ஊறும் அமுதம். காமப்பாலையும்
காணற்பாலையும் தவிர்த்தால் சோமப்பால் ஊறும், ஒருவர் அதைத் தினமும் பருகினால் தான்
என்ற நிலையில் இருப்பார் என்கிறார் அகத்தியர்.
இந்த சோமப்பாலை சித்தர்கள் அமுதப்பால், மாங்காய்ப்பால் (அது சுரக்கும்
இடத்தின் உருவை வைத்து) என்றுபல பெயர்களில் அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment