Verse 71
Translation:
நாட்டவே ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் நுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்துப் புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானே நின்று
குணமாக அங்ரீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம் நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசை கேளே
Translation:
Placing the Omkara in the middle
Adding the akaara and ukaara
And reenkaara and nukaara
Remaining firmly, going to the middle of the eyebrow
Remaining alone without a big group
Reciting ang, reeng, um
With a heart free from fatigue, hundred times, son!
When one does so, listen about the order.
Commentary:
Siddha method of cakra worship involves yantra and
mantra. The previous verse described the
diagram or yantra to be drawn for the worship.
This verse mentions the letters that should be placed within the diagram
and the mantra that should be recited. Agatthiyar mentions that the mantra ang,
reeng, um should be recited hundred times.
In the next verse he will describes the effects of this practice.
The locus of this cakra is the middle of the brows. There is an opinion that Rama’s kodhandam or
the bow represents the brows and the arrow shot through them is the ascent of
consciousness. Beyond the brows the
formless form of Divine is experienced.
Agatthiyar advises that one should practice the above
mentioned austerity while remaining alone, not in a group.
சித்தர்களின் சக்கர வழிபாட்டில் யந்திர மந்திரங்கள் முக்கிய
இடத்தை வகிக்கின்றன. முந்தைய பாடலில்
ஆக்ஞா சக்கரத்தை விளக்கிய அகத்தியர் இப்பாடலில் அதில் இடப்படும் அட்சரங்களையும்
செபிக்க வேண்டிய அட்சரங்களையும் குறிப்பிடுகிறார். அடுத்த பாடலில் இப்பயிற்சியின்
பலன்களைக் கூறுவார்.
ஆக்ஞா சக்கரத்தின் இடம் புருவமத்தி. ராமரின் கையில் இருக்கும் வில் புருவங்களைக்
குறிக்கின்றன என்றும் அதன் ஊடே செலுத்தப்படும் அம்பு விழிப்புணர்வு அல்லது
குண்டலினி சக்தி என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆக்ஞைவரையில் தான் உருவத்தையுடைய இறைவன் காணப்படுகிறான். ஆக்ஞைக்கு மேல் அருவுருவமே பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment