Verse 74
பாரப்பா பூரணச் சந்திரனைக் கானில்
பாதாதி கேசமுதல் பதிவாய் மைந்தா
நேரப்பா குளிர்ச்சி வெகு குளிர்ச்சியாகும்
நேமமுடன் அந்நேரம் நினைவாய் மைந்தா
தேரப்பா குருபதியில் திறமாய் நின்று
செகத்தோர்க்கு விபூதியை நீ கடாக்ஷி த்தாக்கால்
வீரப்பா கொண்டதொரு சுரமும் தீரும்
வினையான வல்வினையும் விட்டுப்போமே
Translation:
See son, when
the fully complete moon is seen,
You will
imprint it from head to foot
It will be
cool, very cool
At that time,
Son, in the proper way
If you remain
in the gurupathi
And offer
sacred ash to people
An intense
fever will be cured
All the bad
karma will leave them.
Commentary:
So far
Agatthiyar described the personal experiences of a yogi who engages in cakra
worship. In this verse, for the first
time, he is talking about the siddhis or mystical accomplishments that a yogi
acquires through which he could help others.
When the yogi
crosses the lalata cakra and experiences the fully complete moon his entire
body will become cool. If he remains in
the gurupathi, a cakra which is next to lalata, and offers sacred ash to those
suffering from intense fever, they will be cured of their sickness. Also, their evil karma will leave them.
Thus, the yogi
is slowly leaving his state where his consciousness is confined to the body and
is becoming pervasive. The coolness of
his body is providing relief to the intense heat that the other is suffering
due to fever.
இதுவரை தனிமனித அனுபவங்களை மட்டும் பேசிவந்த அகத்தியர்
இப்பாடல் முதல் எவ்வாறு ஒரு யோகி பிறருக்கு உதவுகிறார் என்று கூறுகிறார். லலாட சக்கரத்தை அடைந்து பூரண சந்திரனை
அனுபவித்த யோகியின் உடல் தலை முதல் கால் வரை குளுமையாகிறது. இந்த அனுபவத்தைப் பெற்ற யோகி அடுத்த சக்கரமான
குரு சக்கரம் அல்லது குருபதத்திற்கு உயர்ந்து அங்கு நின்று விபூதி கொடுத்தால்
ஜுரத்தின் வெப்பத்தினால் வாடுபவர்கள் தமது சுரத்திலிருந்து விடுபடுவர் என்கிறார்
அகத்தியர். அவர்களது வல்வினைகளும்
அவர்களைவிட்டு நீங்கும் என்கிறார் அவர்.
உடல் எனும் எல்லைக்குள் கட்டுப்பட்டு அதில் மட்டும் பல
அனுபவங்களைப் பெறும் யோகி குருபத்திற்கு உயரும்போது மெதுவாக தனது உடல் எல்லையைத்
தகர்க்க ஆரம்பிக்கிறார். தான் இருக்கும் நிலையினால் பிறரிடம் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்த ஆரம்பிக்கிறார் என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். அவரது குளுமை பிறரது வெம்மையைக் குறைக்கிறது.
No comments:
Post a Comment