Verse 63
அனாகதம்
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக் காண
நிசமான ருத்திரனார் பதியைக் கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க் கீறி
அல்லடா முக்கோணத் ததிலே நீதான
அப்பனே பன்னிரண்டு திரந்தான்போடு
விள்ளடா செம்பு நிறமான கோட்டை
விசையான கோட்டை நடு விந்து போடே
Anaahatha
Remain so to
know the status and to experience bliss
Hear about the
true locus of Rudra
Word, to know
the word and to experience bliss
Draw a triangle
The opposing triangle
with in it
Draw twelve
petals
It is a fort
in the color of copper
In that active
fort add the bindu in the center
Commentary:
Agatthiyar is
starting to describe the practice for the anahata cakra in this verse. He says that it is a triangle in the hue of copper that has the bindu in the middle.
The anahata
cakra contains two interlocking triangles, one facing up and another facing
down. Agatthiyar describes this in lines
four and five.
அனாகத சக்கரத்தை இப்பாடலிலிருந்து விளக்கத் தொடங்குகிறார்
அகத்தியர். இரு முக்கோணங்கள் ஒன்று
மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கியும் இருக்கும் இந்தச் சக்கரத்தை அவர் வரிகள்
நான்கு ஐந்தில் குறிக்கிறார். இந்த
சக்கரத்தில் பன்னிரண்டு இதழ்களை வரையுமாறு கூறுகிறார். இந்த சக்கரத்தின் மத்தியில் பிந்துவைப் போடா
வேணும் என்கிறார். அனாகதம் ருத்திரனின்
பதியாகும்.
சக்கர வரைபடங்களைப் பதிவீர்களா
ReplyDeleteசித்தர்கள் அருளாமல் நாமாக யந்திரத்தை வரைவது தவறு. இந்தப் பாடல்களில் வழிமுறைகள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளனவா அல்லது சில முக்கியமானவற்றை அகத்தியர் குருமுகமாகப் பெறவேண்டும் என்று கூறாமல் விட்டிருக்கிறாரா என்பது தெரியாதபோது அவ்வாறு நாமாக வரைவது தவறு. பாடல்களில் கொடுத்துள்ளவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு தகுந்த குருவை அடைந்தே அவற்றைப் பயிற்சி செய்வது பாதுகாப்பானது. இந்தப் பயிற்சிகளினால் ஏற்படும் விளைவுகளை ஒரு குருவே எவ்வாறு கையாளுவது என்று கற்றுக்கொடுப்பார். உதாரணமாக அகத்தியர் ஞானம் என்ற நூலில் இந்தப் பயிற்சிகளின் விளைவுகளைக் கையாள கற்பம் உண்ணவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். இப்பாடல் தொகுதியின் பிற்பகுதிகளில் அவற்றின் தயாரிப்பு முறைகளையும் அவர் கொடுத்துள்ளார். அவையும் ஒரு குருவின் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டியவை.
Delete