Friday 11 September 2015

156. Charya.. by kechari's grace

ஒன்றான பொருள்
ஒன்றான பொருளறிந்து ஒன்றைக் கேளு
உத்தமனே நலமான உறுதி கொண்டு
நின்றாடும் வாசிதனில் மனக்கண் சாற்றி
நிசமான சரியையொடு கிரியை யோகம்
பண்டான ஞானமொடு நூலுமைந்தா
பார்த்தவர்க்குக் கெதிமோக்ஷம் பலனுண்டாகும்
அண்ட கேசரி மாது தன்னா லந்த
ஆதியென்ற சரியைவழி அறிந்து பாரே

Translation:
The singular entity
Knowing about the singular entity listen about one,
The good one! With steadfastness
Holding the vasi that dances so,
The truthful charya, kriya, yoga
And the ancient jnana, the four, son
Those who have experienced will attain moksha
Due tho the lady, anda kechari,
See the path of charya, the origin.

Commentary:
Vedantanta marga recommends the four step path of charya, kriya, yoga and jnana.  Tamil Siddha philosophy is Vedanta Siddhantha.  It has, as it basis, Vedanta.  Any Agama based system recommends the four steps of charya, kriya, yoga and jnana.  Agatthiyar says that those practice these four steps will definitely attain moksha.  He tells Pulatthiyar to hear about charya, the first step, with the grace of Sakthi, the lady Kechari.

The term Kechari needs further explanation here. Siva’s Sakthi is Chit Sakti or the power of consciousness.  Her substates are Kechari, Gochari, dikchari and bhuchari.  Kechari is the power that limits the universal consciousness into limited consciousness.  Because of her Siva becomes Jiva.  She is associated with the state of kaivalya.  Gochari is associated with anthakarana.  She causes limitation in perception.  She is associated with kaarana sarira or causal body and iccha.  Dikchari is associated with senses, the next step in limitation.  She is associated with sukshma sarira or subtle body, madhyama speech and jnana.  Bhuchari is associated with the gross world, the external objects.  She is associated with sthula sarira or gross body, vaikari speech and kriya.

Thus, moving from Chith Sakthi to bhuchari is moving from subtle to gross.  Hence, Agatthiyar is saying that one should learn about charya with the power of Kechari, the first sakthi who causes manifestation, limitation and the last step before becoming chith sakthi. 

சித்தர்கள் மார்க்கம் வேதாந்த சித்தாந்தம் எனப்படுகிறது.  அதன் அடிப்படையாக இருப்பது வேதாந்தம்.  ஆகமத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கங்கள் அனைத்தும் முக்தியின் வழியாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளைக் கூறுகின்றன.  இந்த நான்கு படிகளையும் கடைப்பிடிப்பவர்கள் நிச்சியமாக மோக்ஷத்தை அடைவர் என்று கூறும் அகத்தியர் மாது கேசரியின் அனுகிரகத்துடன் சரியையைப் பற்றி ஆய்வோம் என்கிறார்.

இங்கு கேசரி என்றால் என்ன என்று பார்ப்போம்.  பரமசிவனின் சக்தி சித் சக்தி அவளது நிலைகளே கேசரி, கோசரி, திக்சரி மற்றும் பூசரி என்பவை.  இவற்றில் கேசரி நிலை என்பது அளவுக்குட்பட்டமை ஏற்படும் முதல் படி, சிவன் ஜீவனாகும் படி.  கேசரி நிலை கைவல்யத்துடன் தொடர்புடையது.  கோசரி நிலை அந்தக்கரணம் எனப்படும் உட்கருவிகளுடன் தொடர்புடையது. அவள் காரண சரீரத்துடன் தொடர்புடையவள்.  அவளே இச்சா சக்தி.  திக்சரி புலன்களுடன் தொடர்புடையவள்.  அவள் சூட்சும சரீரத்துடன் தொடர்புடையவள்.  அவளே ஞான சக்தி.  அவள் மத்தியமை வாக்குடன் தொடர்புடையவள்.  பூசரி என்பவள் வெளியுலகத்துடன் தொடர்புடைய சக்தி.  அவள் தூல சரீரத்துடனும் வைகரி வாக்குடனும் தொடர்புடையவள்.  அவளே கிரியா சக்தி.


கேசரியே ஒருமை நிலை வெளிப்பாடுடையாதாக மாறுவதன் முதற்படி என்பதால் அந்த சக்தியினால் சரியை என்னும் முதல் படியைப் பார்ப்போம் என்கிறார் அகத்தியர்.  கேசரியே வெளிப்பாடுடைய உலகம் ஒருமை நிலையை அடையும்போது கடைசிபடியாக இருப்பது.  

No comments:

Post a Comment