Friday 4 September 2015

153. Bhuta samharam in pinda

Verse 153
ஏறியே பூரணத்தில் செல்லும்போது
என்ன சொல்வேன் பிரிதிவியைப் பிரமனுக்குத்
தேறியே வாய்வுதனை மயேஸ்வரற்குத் தத்தஞ்
சிவ சிவா ஆகாசந் தன்னை மைந்தா
வாரியே அண்டமெல்லாந்தத்தஞ்செய்து
மைந்தனே சகலமுமே சொன்னேன் பாரு
கூறியே சதாசிவத்திற்குத் தத்தம் பண்ணி
கொண்ட பின்பு அறிவு பூரணத்தைக் கேளே

Translation:
While go to the fully complete after ascent
How can I describe it!  Pritvi principle for Brahman
The air principle for Maheswara- were offered.
Siva Sivaa!  The akasha principle
Collecting it and offering the universes
Son, I told you about everything
Offering it to Sadasivam
Listen about the fully complete knowledge.

Commentary:
In the previous verse Agattthiyar described the action of the rishi, muni and devas.  They attain dissolution through kundalini yoga.  As their raise their consciousness through the different cakras the various principles are offered to the deities responsible for that particular cakra.  The earth principle is offered to Brahman, The air principle to Maheswara and the akasha principle to Sadasiva.  This means that the water principle was offered to Vishnu and the fire principle to Rudra.  This is the way in which the elements attain laya in the microcosm.


முந்தைய பாடலில் அகத்தியர் ரிஷி, முனிவர்கள் மற்றும் தேவர்கள் குண்டலினி யோகத்தின் மூலம் லயமடைகின்றனர் என்று கூறினார்.  அவர்கள் தமது உணர்வை ஒவ்வொரு சக்கரத்தின் ஊடேயும் ஏற்றும்போது அந்த சக்கரம் குறிக்கும் தத்துவத்தை அந்த சக்கரத்துக்கான அதிதேவதைக்குச் சமர்ப்பிக்கின்றனர்.  பூமி தத்துவம் பிரம்மனுக்கும் வாயு தத்துவம் மகேஸ்வரனுக்கும் ஆகாய தத்துவம் சதாசிவனுக்கும் தத்தம் செய்யப்பட்டன என்று கூறுவதன் மூலம் நீர்த்தத்துவம் விஷ்ணுவுக்கும் நெருப்புத் தத்துவம் ருத்திரனுக்கும் சமர்ப்பிக்கப்பட்டன என்று குறிப்பால் உணர்த்துகிறார் அகத்தியர்.  இவ்வாறு தான் பிண்டத்தில் பூதங்கள் சம்காரம் செய்யபடுகின்றன.  

No comments:

Post a Comment