Sunday, 27 September 2015

184. Truth about the deities in the cakras

 Verse 184
கேளப்பா அவையடக்கஞ் சொல்லக் கேளு
கிருபையுள்ள வல்லபையுங் கணபதியு மைந்தா
ஆளப்பா பிரம்மாவுஞ் சரஸ்வதியுமானார்
அதின் பிறகு திருமாலும் லட்சுமியுமானார்
மேலப்பா ருத்திரனும் உருத்திரியுமானார்
மேன்புடனே மயேசுரனும் மயேஸ்பரியுமானார்
காலப்பா சதாசிவனும் மனோன்மணியுமாகி
காரணமெல்லாம் முடிந்து சத்தி சிவமாச்சே

Translation:
Let me tell you about all that is included
The merciful Vallabhai and Ganapathi, Son,
Became Brahma and Sarasvathi
After that they became Thirumal and Lakshmi
Over that, Rudra and Rudri,
Above that, they became Mahesvaran and Maheswari
The time/breath, after becoming Sadasiva and Manonmani
With all the causes terminating, it became Sakthi and Sivam.

Commentary:
This verse shows us an interesting concept.  Kundalini yoga assigns different deities to the different cakras.  They represent various principles. It is said that consciousness ascends through the cakras.  Here Agatthiyar says that Vallabhai and Ganapathi transform into the next set of deities, Vishnu and Lakshmi.  Crossing these deities, they transform into Rudra and Rudri and sequentially until Sakthi and Sivam.  Thus, these deities represent different principles, one leading to the next.  This shows us the stupidity in saying one deity is superior to the other!  The set of deities up to Sadasiva and Manonmani represent the manifested universe.  Crossing the Sadasiva Manonmani state the cause for manifestation ends.  Sakthi and Sivam represent the state preceding manifestion.


இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான தத்துவத்தைக் கூறுகிறார்.  குண்டலினி யோக நூல்கள் ஒவ்வொரு சக்கரத்துக்கும் ஒரு தேவதையையும் அதன் துணையும் அதிபதிகளாகக் கூறுகின்றன.  உதாரணமாக மூலாதாரத்துக்கு பிரம்மாவும் சரஸ்வதியும் அதிபதிகள், சுவாதிஷ்டானத்துக்கு விஷ்ணுவும் லட்சுமியும் அதிபதிகள்.  இப்பாடலில் அகத்தியர், கணபதியும் வல்லபையுமே விஷ்ணு/லட்சுமியாக, ருத்திரன்/ருத்திரியாக மாறுகின்றனர் என்று குறிப்பிடுகிறார்.  இவ்வாறு இந்த தெய்வங்கள் தத்துவங்களை, உணர்வுநிளைகளைக் குறிக்கின்றனர்.  இதனால் தெய்வங்களில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்று சண்டையிடுவது எவ்வளவு முட்டாள்தனம் என்று அகத்தியர் நமக்குக் காட்டுகிறார்.  இவ்வாறு கணபதியும் வல்லபையும் சதாசிவன் மனோன்மணி நிலையை அடைந்தபிறகு காரண நிலைகள் கடக்கப்பட்டுவிடுகின்றன.  அவர்களுக்கு மேலே உள்ள நிலைகளான சக்தியும் சிவமும் காரண நிலைக்கு முற்பட்டவைகள் என்பது இதனால் தெரிகிறது.

183. Siddhi of the path

Verse 183
தெரிசிப்பேத் தினந்தோறுந் தியானம் பண்ணி
தீர்க்கமுடன் மானதமாம் பூசை செய்தால்
நெறிசித்தி யாகி அந்த நெறி யிற்குள்ளே
நின்றிலங்கும் கணபதியும் வல்லபையு மைந்தா
பரிசித்த மாகவேநீ தெரிசித்தாக்காற்
பத்தியுடன் சகலசித்தும் கைக்குள்ளாகும்
வருவித்த சித்தால்தான் கைக்குள்ளான
மகத்தான அவையடக்கஞ் சொல்லக் கேளே

Translation:
You will perceive it daily through contemplation
If you perform mental worship elaborately
The path will attain siddhi and within that path
Ganapathy and Vallabhai will glow within that path, Son.
If you have the darsan with purity
And devotion, all the mystical accomplishments will be attained
Through the accomplishments attained
Let me tell you what are all contained.

Commentary:
As a continuation of the previous verse Agatthiyar says that if Pulatthiyar sees Ganapathy and Vallabhai through dhyana and recitation of aim kleem om the path of consciousness, kundalini, will open up and within that path the effulgence, Ganapathy and Vallabhai will glow.  He adds that all the mystical accomplishments or siddhi will be attained.  He goes on to elaborate the principles contained in the siddhi. “avaiyadakkam” also means displaying humility in the presence of audience.  It also means “they are contained”.

மேற்கூறியவாறு ஐம் கிலீம் ஓம் என்று மானசீகமாக உச்சரித்து தியானத்தின்மூலம் கணபதியையும் வல்லபையையும் தினமும் தரிசித்தால் நெறி எனப்படும் குண்டலினியின் பாதை, உயருணர்வின் பாதை சித்தியாகும் என்றும் அந்தப் பாதியில், வழிமுறையில் கணபதியும் வல்லபையும் நின்றிலங்குவார்கள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இதனோடு அனைத்து சித்திகளும் கைக்குள் வரும் என்றும் அவர் கூறுகிறார்.  இதனை அடுத்து அந்த சித்திகள் பற்றி அவர் கூறத்தொடங்குகிறார்.

“அவையடக்கம்” என்ற சொல் சபையில் எவ்வாறு அடக்கமாக இருப்பது என்பதையும் எவையெல்லாம் ஒன்றினுள் அடக்கம் என்றும் பொருள் தருகிறது.  இங்கு “அவையடக்கம் கூறுகிறேன்” என்று அகத்தியர் சொல்லும்போது அந்த சித்திகளுக்குள் எதெல்லாம் அடக்கம் என்று கூறுவதாகப் பொருள் கொள்ளவேண்டும் என்று அடுத்தபாடலில் தெரிகிறது.

182. Glory of Pranava-1

Verse 182
பிரணவ மகிமை
நித்தமும் நீ புத்தியுடன் பார்த்து மைந்தா
நேர்மையுடன் அந்திசந்தி பூசைபண்ண
சுத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியா கேள்
சோதிஎன்ற ஆதார மூலம் பார்த்து
பத்தியுடன் அங்கிலி ஓமென்று நீயும்
பதிலாக மானதமா உருவே செய்தால்
சித்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தைதனில் ஒளி விளக்காய்த் தெரிசிப்பாயே

Translation:
Glory of Pranava
Son, seeing it everyday through buddhi,
If you perform the twilight, terminus (andhi-sandhi) puja,
Pulathiyaa!  I am telling you completely and truthfully
Seeing the effulgence the origin of substratum (aadhara mulam)
If you recite aim kleem om
Mentally
Son, Siddhi Ganapathi and Vallabhai
You will see them as the lighted lamp in the chinthai.

Commentary:
Agatthiyar begins a series of verses on the greatness and efficacy of Pranava from this verse onwards.  He gives the benefit of reciting the pranava here.  He advises that one should perform the andhi.sandhi puja with buddhi.  This may indicate the ritualistic stipulation that any ritual should be performed only after sandhyavandhana.  None of the rituals will be beneficial unless it is performed by one who does the sandhyavandhanam.  Andhi sandhi also refers to the state that remains inbetween definite states.  These are states like kumbaka- the state between the end of one inhalation and one exhalation, or between two inhalations or exhalations.  This is also the state between manifested and unmanifested state.  The sandhi represents the gap when one state ends and another begins.  Thus it is a state without a specific identity, not one without identity but one to which a specific identity cannot be attached.  This is quality of the Divine, the nirguna, the one contains all the qualities but cannot be defined by a specific quality. 

After performing andhi sandhi Agatthiyar advises Pulatthiyar to recite the mantra aim kleem om, mentally.  This is includes the Siva and Sakthi beeja, the male and female aspects of the Divine.  If one performs this chanting he says that one will be blessed with the vision of Ganapathy and Vallabhai, the Divinities associated with the muladhara (or adhara mulam- the origin of the adharas or substrata that support various principles).  They will be seen as the flame of the lamp.

இப்பாடலிலிருந்து தொடங்கி இனி வரும் பாடல்களில் அகத்தியர் பிரணவத்தின் மகிமையைக் கூற ஆரம்பிக்கிறார்.  அதற்கு முன்னுரையாக பிரணவத்தை உச்சரிப்பதனால் ஏற்படும் பயன் என்று கூறுகிறார்.  அதற்கு முன் சடங்காக ஒருவர் அந்திசந்தி பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அந்தி சந்தி என்பது சந்தியாவந்தனத்தைக் குறிக்கலாம்.  சடங்குகளை விவரிக்கும் நூல்களை அனைத்தும் எந்த ஒரு விசேஷ சடங்கைச் செய்வதற்கும் ஒருவர் முதலில் சந்தியாவந்தனம் செய்துவிட்டே ஆரம்பிக்கவேண்டும் என்று கூறுகின்றன.  சந்தியாவந்தனம் செய்யாத ஒருவர் ஒரு சடங்கைச் செய்தால் அந்த சடங்கால் அவருக்கு பயன் ஏற்படாது.
                                                                   
அந்தி சந்தி என்பது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும் குறிக்கலாம்.  சந்தியாகாலம் என்பது பகலும் இரவும் சந்திக்கும் நேரம்.  இந்த நேரத்தை பகல் என்றும் கூற முடியாது இரவு என்றும் கூறமுடியாது.  அந்த சந்திப்பு உள்மூச்சு வெளிமூச்சுக்கள் சந்திக்கும்போதும் ஒரு சுவாசம் முடிந்து மற்றொன்று துவங்குவதற்கு இடையேயும், ஒரு எண்ணம் முடிந்து மற்றொரு எண்ணம் தொடங்குவதற்கு முன்னும் என்று பல இடங்களில் நிகழ்கின்றது.  இவ்வாறு சந்தி என்ற நிலைக்கு இதுதான் என்று குறிப்பிடக்கூடிய குணம் கிடையாது.  இது இறைவனை நிர்குணன் என்று கூறுவதைப் போல உள்ளது.  நிர்குணன் என்றால் குணமற்றவன் என்று பொருளல்ல, இதுதான் இது அல்ல என்று ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டவனல்ல என்று பொருள், எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவன் என்று பொருள்.  அதனால் அந்தி சந்தி பூசை என்பது இறைவழிபாடு என்றும் பொருள் தருகிறது. 


இவ்வாறு பூசையை முடித்துவிட்டு புலத்தியர் ஐம் கிலீம் ஓம் என்று மானசீகமாக ஜெபிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  அவ்வாறு செய்தால் சக்தியுடன் கணபதியும் வல்லபையும் ஒளி விளக்காக மூலாதாரத்தில் காட்சியளிப்பர் என்கிறார் அவர். மூலாதாரம் அல்லது ஆதார மூலம் என்பதனால் அதுவே எல்லா ஆதாரங்களுக்கும் மூலமாக உள்ளது என்று பொருள்.  அதனால் அகத்தியர் மூலாதாரத்துக்கு அதிபதிகளான சித்தி கணபதி வல்லபை ஆகியோரை முதலில் குறிப்பிடுகிறார்.  கணபதியும் வல்லபையும் எவ்வாறு எல்லா காரியங்களுக்கும் துவக்கமாக இருக்கிறார்களோ அதோ போல் பிரணவ ஜபம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு துவக்கமாக இருக்கிறது. 

181. How people get deluded.

Verse 181
பூசைநெறி அறியாமல் ஆண்பெண் என்றும்
பொல்லாத மாய்கைவலைத் தன்னிற் சென்று
ஆசைகொண்டு மோகமதால் அறிவுங் கெட்டு
வங்கமென்ற சங்கதியை அறியாமல்தான்
பாசமென்ற பலராசியில் மனதழுந்தி
பரகதியை அறியாத பாவிமாரே
ஓசைஎன்ற சத்தமுதிற் தடங்கி வீட்டை
உற்ற மனக்கண்ணாலே நித்தம் பாரே

Translation:
Without knowing the method of puja, as man and women
Getting ensnared in the net of the evil maya
Becoming desirous and losing the mind due to longing
Without knowing the truth
With the mind getting embedded in the a variety of fruits of action, the pasa
The sinners who do not know the paragathi!
With the sound maturing and abiding,
See the house with the mind’s eye daily.

Commentary:
Agatthiyar says that people get deluded by the distinctions of man and woman.  They do not know the method of puja and get ensnared by the evil maya.  They lose their minds due to desire and longing.  The mind also gets embedded in desiring the fruits of action, the pasa.  He calls people who live so as sinners who do not know the Paragathi and tells them to see the house where sound abides after maturing with their mental eye.


மக்கள் ஆண் பெண் என்ற வித்தியாசத்தைப் பார்த்து மனம் மயங்குகின்றனர்.  பூசை முறைகளை அறிவதில்லை.  தமது மனதை ஆசையாலும் மோகத்தாலும் இழந்து உண்மையை அறியாமல் பலவிதமான பலன்களில் ஆசை வைத்து பாசத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.  அத்தகைய மக்களை பாவிகள் பரகதி அறியாதவர்கள் என்று அழைத்து அவர்களை சத்தம் முதிர்ச்சியடைந்து ஒடுங்கும் வீட்டை மனக்கண்ணால் பார்க்கும்படி அறிவுரை கூறுகிறார் அகத்தியர்.

Friday, 25 September 2015

180. The Linga and peetam within- perceive them and worship them

Verse 180
பாரப்பா நயனவொளி சூக்ஷத்தாலே
பதிவான மூலமதில் ஆறாதாரங்
காரப்பா ஆதார லிங்க பீடம்
கண்ணிறைந்த டுச்சுடராம் கமலபீடம்
நேரப்பா நின்றதொரு விந்து பீடம்
நின்றிலங்கும் கற்பூர தீப பீடம்
ஆரப்பா அறிவார்கள் ஆதிபீடம்
அந்தரங்க பீடமதைப் பூசை பண்ணே

Translation:
See son, with the subtlty of the light of the eye
The origin, the six adhara.
Seek the adhara linga and the dais (peetam)
The flame in the middle that fills the eye, the lotus dais,
It is the dais of the bindhu,
The dais of the flame of camphor.
Who will know this original dais (aadhi peeta)
Worship the internal dais.

Commentary:
The eye mentioned here is the eye of wisdom, not the material eye.  With that eye Agatthiyar tells Pulatthiyar to “see’ or perceive the origin and the six adhara or cakra.  The linga is the sakthi or power that rises through these adhara.  The adhara are the substratum. Agatthiyar calls them dais or peetam.  In the siddha parlance the adhara are called the yoni and the power that surges through them rising by piercing them is the linga.  Thus the symbolism of linga and yoni is actually the kundalini sakthi rising through the cakra.   The cakras are the sakthi that brings about ascent of consciousness, the Siva.  Agatthiyar calls this as the flame in the middle or madhya.  The cakra are depicted as lotus and hence he calls them as lotus dais.  The flame of consciousness that rises through them is equated to the flame of camphor.  He advises Pulatthiyar to worship this internal dais or aadhi peetam.


இங்கு அகத்தியர் ஞானக்கண்ணால் ஆதியையும் ஆறு ஆதாரங்களையும் பார்க்கச் சொல்கிறார்.  ஆதி என்பது சிவன், ஆதாரங்கள் சக்தி.  இதைத்தான் யோனியுடன் கூடிய சிவ லிங்கம் குறிக்கிறது.  இதையே அடுத்த வரிகளில் அகத்தியர் குறிப்பிடுகிறார்.  இவ்வாறு தாமரை மலர்களாகக் குறிப்பிடப்படும் சக்கரங்களின் ஊடே எழும் ஒளியான காற்பூரதீபமான லிங்கத்தையும் ஆதாரங்களான பீடங்களையும் பார்த்து அவற்றை வழிபடச் சொல்கிறார் அகத்தியர்.

Thursday, 24 September 2015

179. Aham Brahmasmi

Verse 179
தானேதான் தன்மனமே சாக்ஷியாகத்
தன்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
கோனேதான் தானவனாய் அருளே தங்கும்
குருவான நவக்கிரக சூக்ஷத்தாலே
பூணேநீ பொற்கமலத் துச்சி மீதில்
பூரணமாய் நின்றிலங்கும் போதத்தாலே
நானேதான் நீயெனவே நன்மையாக
நாட்டமுடன் வாசியினால் நயந்து பாரே

Translation:
The self, with its mind as the witness,
If you remain as fully complete
The self is the king, the grace will remain as “self is that”
Due to the subtlty of the nine planets, the guru
You adorn it at the peak of the golden lotus
Due to the bodham which as the fully complete
As “I am You”
See with interest, through vaasi.

Commentary:
Agatthiyar says that one should remain as the poorna or fault-free with his mind as the witness.  This is possible if the influence of the nine planets become beneficial.  The nine planets represent various conscious states.  Hence, Agatthiyar calls them as guru as they remove the darknesss of ignorance and shed light on the soul.  This state is achieved when consciousness reaches the pinnacle of the cakras, at the sahasrara which Agatthiyar calls as the top of the golden lotus.  This may also mean all the cakras as each cakra represents the pinnacle of particular principle, eg, elements, qualities etc.  In this state the soul remains as “aham brahmasmi”.  Agatthiyar is says that this is realized through vaasi.


 அஹம் பிரம்மாஸ்மி என்ற நிலையைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார் அகத்தியர்.  அதற்கு ஒருவர் மலங்களற்றவராக, பூரணமாக, தனது மனமே சாட்சியாக நிற்கவேண்டும் என்கிறார் அவர்.  இந்த நிலை நவகிரங்களால் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார். நமது உடலில் நவகிரங்கள் எவ்வாறு சக்கரங்களைக் குறிக்கின்றன என்று முன்னமே பார்த்தோம்.  இவ்வாறு நவகிரகங்கள் உணர்வு நிலைகளை, தன்மைகளைக் குறிப்பதால் அவை நன்மை பயப்பவையாக இருந்தால்தான், குருவாக இருந்தால்தான் ஏற்படும் என்கிறார் அவர். இந்த நிலை பொற்றாமரை உச்சியில் ஏற்படும் என்றும் அந்த நிலையில் அஹம் பிரம்மாஸ்மி என்ற போதம் நிலைபெற்றிருக்கும் என்றும் கூறுகிறார் அகத்தியர்.  இதை ஒருவர் வாசியால் காணலாம் என்றும் அவர் கூறுகிறார்.  

178. Definition of rishi and muni

Verse 178
பாரடா ஆண் ரூபம் முநிதானாச்சு
பதிவான பெண்ரூபம் ரிஷிதானாச்சு
காரடா ரிஷிமுனிவர் கருணைதன்னை
கருணையுடன் கண்டறிந்து பூசை செய்ய
ஆரடா அறிவார்கள் ஆதியந்தம்
அரகரா ஆதியந்தம் ஆண்பெண்ணாச்சு
நேரடா ஆண் பெண்ணா இறந்தாலென்ன
நேர்மையுள்ள அறிவல்லோ சாக்ஷிதானே

Translation:
See son, the male form became the muni,
The female form became the rishi
Seek the mercy of rishi and muni
Knowing it well perform the puja
Who knows about the origina-terminus
Araharaa! The origin-terminus became male and female
So what if the male and female die
It is the consciousness which is the witness, isn’t it?

Commentary:
Agatthiyar describes a very important concept here.  The male yogin is called muni and the female yogin became the rishi.  However, it is the Supreme Reality, the Sivam which manifested as male and female.  Agatthiyar calls the Divine origin-terminus as it is the origin of everything and everything ends as the Divine.  He says, it doesnot matter if the male and the female forms die as they are all nothing but consciousness, the witness of everything.


அகத்தியர் இப்பாடலில் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார்.  ஆண் யோகி முனிவர் எனப்படுகிறார் என்றும் பெண் யோகி ரிஷி எனப்படுகிறார் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு தோன்றிய ஆணும் பெண்ணும் இறந்தால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அவ்வாறு தோன்றியது ஆதி அந்தம் எனப்படும் இறைவன் தானே என்கிறார் அகத்தியர்.  இந்த ஆதி அந்தமே அறிவாக, அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறது.  

Wednesday, 23 September 2015

177. Benefits of performing puja at the saint's samadhi

Verse 177
காணவே குருபூசை நன்றாய்ச் செய்து
கருணைவளர் சமாதி தனில் கடாக்ஷமாக
பூணவே நித்தியமும் பூசை செய்தாற்
பூரணமாய்மூர்த்திகரம் புதுமையாகும்
தோணவே சத்தியுட சமாதி தன்னில்
துலங்கும் வெகு புதுமைகள்தான் என்ன சொல்வேன்
பேணவே பூரணமாய்ச் சமாதி பூசைப்
பெருமைவிட்டு ஒருமையதாய்ச் செய்துபாரே

Translation:
Performing guru puja well
At the tomb increasing the grace as blessings
If the worship ritual is performed daily
The embodiment of murthy will occur with newness
In the tomb of the sakthi
Several novalties will occur, What can I say!
Nurture the tomb with prayers
Perform it leaving pride and with the idea that it is singularity.

Commentary:
Agatthiyar says that when the above rituals are perfomed perfectly with humility, devotion with the attitude seeking the singularity several novalies will occur at the tomb.  The lady yogin will grant her blessings.


சமாதியில் பூஜைகளைக் மேற்கூறியபடி பக்தி, கருணை, தாழ்மை ஆகியவற்றுடன் செய்தால், ஒருமை என்ற உணர்வுடன் தற்பெருமையை விட்டுவிட்டுச் செய்தால் பல புதுமைகள் அங்கு நடக்கும்.  அந்த யோகி தனது கடாக்ஷத்தை அருளுவார் என்கிறார் அகத்தியர்.

176. Performing gurupuja

Verse 176
பண்ணப்பா சகலரச வர்க்கம் வைத்துப்
பதிவான மயேஸ்வரியைப் பூசைபண்ணி
கண்ணப்பா தானோக்கி மனது கூர்ந்து
கன்னிகா தானமுடன் கோதானங்கள்
பொன்னப்பா தான் விளையும் பூதானங்கள்
புத்தியுடன் பூரிக்கா தானஞ் செய்து
நண்ணப்பா தன் பத்தியில் வந்திருந்து
நாட்டமுடன் குருபூசை நன்றாய்க்காணே

Translation:
Placing a variety of things
Perform worship of Maheshvari
Perform with a merciful mind
Offering of girl (in marriage) offering of cow
Offering of land where crops grow like gold
Performing offering of eagle wood, with awareness
Seek it with devotion
Perform guru puja and see well.

Commentary:
Following the entombment rituals Agatthiyar suggests that one should perform Maheswari puja offering several things including offering of cow, girl in marriage, land and eagle wood.  One should perform such a gurupuja with devotion.


பெண் யோகியை சமாதிபடுத்திய பிறகு பல ரசவகைகளைப் படைத்து மகேஸ்வரிக்குப் பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அதனுடன் கோதானம் பூதானம் கன்னிகா தானம், பூரிகா அல்லது அகில் மர தானம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார் அவர்.  இவ்வாறு மனதில் பக்தியுடன் குருபூஜை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Tuesday, 22 September 2015

175. Closing the tomb

Verse 175
வையப்பா கீழ்முகமாய்க் குகையில் வைத்து
மார்க்கமுடன் செங்கல் கல்லுப்பு நீறும்
மெய்யப்பா மூன்று பொடி ஒன்றாய்க் கூட்டி
மேன்மைபெற குகை நிறைய அமிழ்த்திவைத்து
கையப்பா வாராமல் மணல் நிறுத்திக்
கருணையுடன் சதுரமதாய் திரணை செய்து
செய்யப்பா திரணை நடுஸ் தம்பம் வைத்துத்
தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை பண்ணே

Translation:
Place the body facing East within the cave
Add the powders of brick, rock salt and sacred ash
Combining the three together
Fill the cave so immerse the body in it
Add sand to it
Place a square stone plank with cornice
Place a pillar in the middle
And pray and perform mental worship.

Commentary:
After the body is place in the tomb it is filled with powdered brick, rock salt and sacred ash.  One wonders in the case of the male yogin also whether Agatthiyar meant rock salt when he said “kalluppodi”.  He does not mention adding the camphor as it was done with the male yogin. The tomb was filled with sand and a flat piece of slab is placed.  Instead of a linga as it was death in the male yogi’s case a pillar or sthamba is placed on top.  Agatthiyar says that mental worship should be performed after covering the tomb.


பெண் யோகியின் உடலை சமாதியினுள் வைத்த பிறகு அதை செங்கல், கள் உப்பு மற்றும் விபூதியால் அமிழ்த்த வேண்டும்.  ஆண்யோகிக்கு கல் பொடி என்று கூறியது கள் உப்புப் பொடியாக இருக்குமோ என்ற கேள்வி இங்கு எழுகிறது.  பிறகு சமாதியினுள் மணலைச் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஆண் யோகிக்குக் கூறியதைப் போல இங்கு கற்பூரத்தைச் சேர்க்கக் கூறவில்லை. பிறகு சமாதியின் மேல் சதுரமான கல்லை வைத்து அதன் மேல் ஒரு ஸ்தம்பத்தை வைக்க வேண்டும் என்கிறார்.  சமாதியின் மீது லிங்கத்தை வைக்கக் கூறவில்லை.  இவ்வாறு ஆண் யோகியின் சமாதிக்கும் பெண் யோகியின் சமாதிக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.  இவ்வாறு சமாதியை மூடிய பிறகு அங்கு மானச பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.

174. Placing the body in the tomb

Verse 174
கேளடா எட்டெழுத்தைக் கால்தலையாய் மாறி
கிருபையுடன் நெற்றிதனிற் பட்டங் கட்டி
ஆளடா தூபமுடன் தீபஞ் செய்து
அருள்பெருக ரதமதின்மேல் அன்பாய் வைத்து
வாளடா மணியோசை சங்கினோசை
மகத்தான ஜெயகண்டி நாதஞ் செய்து
மேலடா சமாதி வலஞ் செய்து நல்ல
வேதாந்தமான நடுக் குகையில் வையே

Translation:
Listen son, reversing the order of the eight letters
Tie the foil on the forehead, with mercy
Wave the fragrant smoke and lamp
Place it over a chariot, with love
Sound the bell, conch
The victory plate,
Circumambulate the Samadhi
Place in the middle of the cave, the vedantha.

Commentary:
The rituals described in this verse are similar to those of the male yogi except that the body is place in the cave created in the west instead of the middle.


முன்னே ஆண் யோகிக்குக் கூறியதைப் போலவே பெண் யோகிக்கும் அபிடேகம் தூப தீபம் ஆகியவற்றைக் காட்டி ரதத்தில் வைத்து சமாதி இடத்துக்கு அழைத்து வரவேண்டும்.  பிறகு சமாதியில் மேற்குப் புறம் அமைத்த குகையில் வைக்கும் முன் சமாதியை மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வரவேண்டும் என்கிறார் அகத்தியர்.  

Monday, 21 September 2015

173. Rituals for the body of a lady yogin

Verse 173
செய்யப்பா சுகாசனமாய்த் தீர்க்கம் பண்ணி
சிவசிவா அபிஷேகம் நன்றாய்ச் செய்து
மெய்யப்பா தெரியாமல் பட்டு வஸ்த்திரம்
மேன்மைபெறத் தானணிந்து விபூதி சாற்றி
மையப்பா மையமத்தில் திலதப் பொட்டு
மகத்தான சுகந்தமலர் மாலை சாற்றி
வையப்பா தங்கத்தால் பட்டஞ் செய்து
மகத்தான எட்டெழுத்தை மாறிக்கேளே

Translation:
Place well in sukhasana
Siva sivaa!  Performing sacred ablution well,
Cover the body well with silk cloth so that nothing is visible,
Adorn it and smear sacred ash
In the middle (of the forehead) a sacred mark (thilatham)
Adorn garland of fragrant flowers
Make a gold leaf foil
Write the eight letters with their order changed, listen.

Commentary:
The lady yogin is placed in sukhasanam and sacred ablution is performed to it.  The body is covered with silk cloth and sacred ash is smeared on the forehead.  A thilakam is placed in the middle. The body is adorned with a garland of sacred flowers.  A gold foil is taken and the eight letters are written on it in the reverse order.  This will used to tie to her forehead.


மூர்த்திகரமான பெண் சாதுவை சுகாசனத்தில் வைத்து உடலுக்கு அபிடேகம் செய்ய வேண்டும்.  பிறகு பட்டு சாற்றி விபூதி அணிவிக்கவேண்டும்.  விபூதியின் நடுவே திலகமிட்டு உடலுக்கு மணம் வீசும் மலர்களால் ஆன மாலையைச் சாற்ற வேண்டும். அதன் பிறகு ஆண் யோகிக்கு செய்தது போல நெற்றியில் அணிவிக்க தங்கத்தால் ஆன பட்டையை அடுத்து அதில் எட்டெழுத்தை முறை மாற்றி எழுத வேண்டும் என்கிறார் அகத்தியர். 

172. Samadhi of a Lady yogin

Verse 172
ஆமப்பா வதிகமுள்ள வாண்பால் தன்னை
அருள்பெருக சமாதி வைக்கு முறைமை சொன்னேன்
ஓமப்பா உறுதியுள்ள சத்தி மாது
உண்மையுடன் மூர்த்திகர மானால் மைந்தா
தாமப்பா முன்போலே சமாதி செய்து
தன்மையுடன் மேல்திசையில் குகைதான் செய்து
நாமப்பா சொல்லுகிறோம் மூர்த்திகரமான
நாதாந்த மாதுதனைச் சுகாசனமே செய்யே

Translation:
Yes, Son!  The male
I told you how to entomb him so that the grace will increase
Yes, Son,  the firm Sakthi, lady
If she attains the status of moorthy
Create a Samadhi as mentioned before
Create a cave in the western direction
I will tell you, The one who became murthy
The nadhantha lady, place her in sukhasana.

Commentary:
After describing how to entomb a male yogin who attained the supreme state of nadhantha Agatthiyar is beginning to describe the entombment of a lady yogin.  He calls her sakthi maadhu.  The Samadhi is created as before and a cave is made in west.  She is placed in sukhasana here.


மூர்த்திகரமான ஒரு ஆண் யோகியை எவ்வாறு சமாதி செய்யவேண்டும் என்று கூறிய பிறகு அகத்தியர் ஒரு மாது அவ்வாறு மூர்த்திகரமானால் எவ்வாறு அவரை சமாதி செய்வது என்று கூறத்தொடங்குகிறார்.  

Sunday, 20 September 2015

171. After returning home

Verse 171
கேளடா தன்பதியில் வந்திருந்து
கிருபையுடன் சட்டரச வர்க்கஞ் செய்து
வாளடா குருபதத்தைப் போற்றி மைந்தா
வணக்கமுடன் குருபூசை வளமாய்ச் செய்து
பாளடா போகாமற் சமாதியில் மைந்தா
பத்தியுடன் நித்தியமும் பூசை செய்தால்
கோளடா வாராமற் சமாதி தன்னிற்
குருவான முற்றாகாரம் அதிகமாமே

Translation:
Listen son, after returning home
With mercy, offering various products
Praising the gurupadam
Performing the gurupuja with humility
Without letting the tomb become uncared for
If worship is performed daily
Without any damage occurring to the tomb
The presence of Guru in the tomb is high.

Commentary:
After returning home one performs worship rituals and prays to the guru.  Pujas are performed daily at the tomb.  The tomb is cared for with great respect.  If it is done so the presence of the guru will be felt more at the tomb.


மேற்கூறியவாறு சடங்குகளைச் செய்த பிறகு ஒருவர் தனது வீட்டுக்கு வந்து அங்கு பலவித பொருட்களை குருவுக்குப் படைத்து பூஜை செய்ய வேண்டும்.  அவரது சமாதியைக் கருத்துடன் கவனித்து அங்கு தினமும் பூசை செய்யவேண்டும்.  அவ்வாறு செய்தால் அங்கு குருவின் சான்னித்தியம் அதிகமாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.