Saturday 7 March 2015

37. Derived principles

Verse 37
ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே

Translation:
Listen to the extensions of the five elements, the path
Son, the extension of prithvi
Hair, bone, skin
Nerve, flesh- these five
I told you about the extensions of prithvi
Remaining with patience knowing it as the site
See those that have parts of water
The good Pulathiyaa, look with focus.

Commentary:
Agatthiyar is starting to describe the derived principles.  He starts with those who that have qualities of earth element.  Hair, bone, skin, nerves and flesh are principles derived from prithvi principle.

அகத்தியர் இப்பாடலிலிருந்து சார்வுத்தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார்.  முதலில் பிரிதிவி அல்லது நிலதத்துவத்திலிருந்து தொடங்கும் அவர் முடி, எலும்பு, தோல், நரம்பு, சதை என்ற ஐந்தும் பூமி தத்துவத்திலிருந்து தோன்றுபவை என்கிறார் அவர்.

இதனை அடுத்து அவர் அப்பு அல்லது நீரின் கூறைக் கொண்ட தத்துவார்த்தங்களை விளக்குகிறார்.

No comments:

Post a Comment