Saturday, 28 March 2015

53. Entrances on the body

Verse 53
ஆச்சப்பா சர்மமது என்னவென்றால்
அப்பனே பலம் நூற்றிப் பதினாலாச்சே
தாமப்பா இப்படித்தான் கூடிநின்று
சரீரமத்தில் வாசலது எட்டுமாச்சு
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நாடிநின்ற கோபுரத்தின் வாசல் ஒன்று
ஓமப்பாஅவ்வாசல் ஒன்பதுக்கு
உண்மையுள்ள ஆதாரக் கதவைப் பாரே

Translation:
Son, the skin
It is 114 palam
All these remain together and constitute a body
In such a body the entrances/thresholds are eight.
I am telling now listen well.
The entrance of the gopura that is sought is one
Yes, son, for the nine entrances
See the truthful door of adhara.

Commentary:
Agattiyar concludes his measures about the body with the skin which he says is 114 palam (35X114 g). He then mentions that all these constitute a body which has eight entrances and says that there is another entrance, the entrance of the gopura which one should seek.   He calls this as the gate of the adhara.  He seems to be referring to the muladhara which is close to the genitals. 

Usually the body is said to have nine gates or entrances.  They are 2 eyes, 2 nostrils, 2 ears, 1 mouth, 1 genital and 1 organ of excretion.  As he is talking about the muladhara which is close to the genitals one wonders whether he has not included it in the number eight as he is talking about it separately.

இவ்வாறு உடலில் சர்மம் அல்லது தோல் நூற்றிப் பதினான்கு பலம் என்று முடிக்கிறார் அகத்தியர்.  இதனை அடுத்து இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள உடலில் எட்டு வாசல்கள் உள்ளன என்கிறார் அவர்.  இந்த எட்டு வாசல்களைத் தவிர்த்து ஒரு ஒன்பதாம் வாசல் உள்ளது என்றும் அந்த வாசலையே ஒருவர் நாடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த வாசலை அவர் கோபுர வாசல், ஆதார வாசல் என்று குறிப்பதனால் இது மூலாதாரம் என்று தோன்றுகிறாது.


பொதுவாக உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறுவது வழக்கம்.  அவை இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு காதுகள், ஒரு வாய், ஒரு பிறப்புறுப்பு மற்றும் ஒரு கழிப்புறுப்பு.  ஒருவேளை அவர் பிறப்புறுப்புக்கு அருகில் இருக்கும் மூலாதாரத்தைத் தனியாகக் குறிப்பிடுவதனால் எட்டு என்ற எண்ணிக்கையில் அவர் பிறப்புறுப்பைச் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.   

52. Measures of solids and liquids in the body-2

Verse 52
ஆச்சப்பா உப்பதுவும் பலந்தான் ஐந்து
அப்பனே மச்சையது பலந்தான் நாலு
நீச்சப்பா ஈரலது பலந்தான் எட்டு
நிசமான அஸ்தியதைச் சொல்லக் கேளு
காச்சப்பா பலமும் நூற்றிருபதாச்சே
கூட்டி நின்ற சேவுடுமந்தான் நாழியாகும்
பேச்சப்பா பித்தமது படிதான் காலாம்
பலமான சுக்கிலந்தான் அரைக்காலாகும்

Translation:
Yes, son, the salts in the body are 5 measures
Son, the marrow is 4 measures
The liver is 8 measures
The truthful bone, hear about it
Its measure is 120
The amount of sleshmam (kapha) is one naazhi (1444ml)
The pitha is ¼ padi (341 ml)
The semen is 1/8 padi (180.5 ml)

Commentary:
Several websites offer ancient Tamil measures.  Suffice to say 1 naazhi is 1444ml which is the same as one padi.
Agatthiyar is listing the weights and measures of various factors in the body.  He mentions the marrow as 4 palam (1 palam=35 g).  These are the ratios if the body’s weight is taken as 1000 palam or 35 kg.  The liver constitutes 280 g, bones 4200 g or 4 kg.  The fluids in the body given in this verse are sleshmam or kapha which is 1444 ml, pittha is 340 ml and semen around 180 ml.
பல வலைத்தளங்கள் தமிழரது அளவைகளைத் தருகின்றன.  இங்கு ஒரு பலம் என்பது முப்பத்தைந்து கிராம் ஒரு நாழி அல்லது ஒரு படி என்பது 1444 மில்லி லிட்டர் என்பதைத் தெரிந்துகொண்டால் போதும். 
இப்பாடலில் அகத்தியர் ஒருவரது உடல் ஆயிரம் பலம் என்று கொண்டால் (முப்பத்து ஐந்து கிலோ) அதில் ஈரல் இருநூற்று என்பது கிராம், எலும்பு நான்கு கிலோ என்றும் உடலில் உள்ள திரவங்களில் கபம் அல்லது சிலேஷ்மம் ஒரு படி என்றும் பித்தம் கால் படி என்றும் விந்து அரைக்கால் படி என்றும் கூறுகிறார்.  

51. Measures of various factors in the body

Verse 51
தானான தேகமதில் கூடிநின்ற
சங்கைகளைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
ஊனன ரோமமது மூன்றரையாங்கோடி
உத்தமனே நாடியது எழுபத்தீராயிரமாங்
கோனான தேகமடா பலமோ ஆயிரமாங்
கொள்கியத்தில் குடல்பலந்தான் நாற்பத்தைந்து
பூனான பல்லதுவும் பலந்தான்நாலு
பொருந்திநின்ற சதைபலமும் இருநூறாச்சே

Translation:
The factors that remain in the body,
I will tell you details about them, listen
The hair in the body 3 ½ crores
The supreme one, the nadi are 72,000
The king, the body’s measure (palam) is 1000
The weight of intestines 42 measures
The weight of the teeth is 4
The weight of the flesh is 200.

Commentary:
Agatthiyar is describing the weight of various components of the body.  According to him, the total number of hair follicles in the body are 3 ½ crores, the nadi or energy channels 72000.  The weight of the body is 1000 measures (palam). The intestines constitute 42 measures, teeth 4 measures and flesh 200 measures. 


இப்பாடலிலிருந்து அகத்தியர் உடலின் பல பகுதிகளைப் பற்றி விளக்கப் புகுகிறார்.  உடலில் உள்ள மயிர்க்கால்கள் மூன்றரைக் கோடி என்று தொடங்கும் அவர் நாடிகள் எழுபத்திரண்டாயிரம் என்கிறார்.  உடல் ஆயிரம் பலம் என்றும் குடல் நாற்பத்து இரண்டு பலம், பற்கள் நான்கு பலம், சதை இருநூறு பலம் என்றும் அவர் கூறுகிறார்.

Monday, 23 March 2015

50. Charya, kriya, yoga and Jnana

Verse 50
தேரப்பா சரிதையுடன் கிரிகை ரெண்டுஞ்
சிவசிவா சத்தியுட கூறேயாச்சு
காரப்பா யோகமுடன் ஞானம் ரெண்டும்
கருவான சிவத்தினுட காலேயாச்சு
நேரப்பா சிவரசம் அந்தங் கண்டு
நெறிமுறமை தவறாமல் அந்தம் பார்த்து
சாரப்பா சதுரகிரி பொதிகை தன்னில்
சங்கையுடன் நின்று தவந்தானே செய்யே

Translation:
See son, the charya and kriya
Siva sivaa, are parts of Sakthi
Realize son, yoga and jnana
Are parts of the essence, Sivam
See son, the terminus of sivarasa
Seeing the terminus without faltering in the ways, methods,
Associate son, with the chaturagiri , podhigai
Remain with the clue and perform tapas.

Commentary:
After describing the principles or tattva and telling Pulatthiyar that they are nothing but rubbish, fit only for the play of pati, pasu and pasa Agatthiyar is talking about the four steps prescribed by the Agama for realization.  They are charya, kriya, yoga and jnana.  He says the first two, charya and kriya that are specific actions are Sakthi components and the next two, yoga and jnana are Siva components as they are not actions but specific internal states.
He tells Pulathiyar that siva rasa or the siva anubhava should be experienced, Its end is siva turiya.  One has to go beyond this state and attain Para turiya and then cross that also to reach the state of Paraparam. Hence, Agatthiyar is advising Pulathiyar to see two termini.  Pulathiyar is also advised to go to chaturagiri Podhigai and perform tapas.  Chaturagiri Podhigai is the muladhara and the kanda mula, the source of the nadi.  It is the point from which kundalini ascends through the sushumna.  
From this we understand that Agatthiyar is advising Pulatthiyar to embark on kundalini yoga.


தத்துவங்கள் அல்லது கருவிகளைப் பற்றி விவரித்துவிட்டு அவை குப்பை, பதி, பசு, பாசம் என்ற விளையாட்டுக்குத் தான் லாயக்கு என்று கூறிய அகத்தியர் பரவுணர்வைப் பெற ஆகமங்கள் பரிந்துரைக்கும் சரியை, கிரியை,யோகம் ஞானம் என்ற நான்கு படிகளைப் பற்றிப் பேசுகிறார்.  இவற்றில் முதல் இரண்டு- சரியை, கிரியை என்பவை செயல்பாடுகள்.  அதனால் அவை சக்தியின் கூறுகள்.  யோகமும் ஞானமும் மனத்தால் மேற்கொள்ளப்படுபவை.  அவை சிவனின் கூறுகள் என்கிறார் அகத்தியர்.  இவற்றை மேற்கொண்டால் ஒருவர் சிவரசம் எனப்படும் சிவ அனுபவத்தை சமாதியில் பெறுவார்.  ஆனால் அதுவே முடிவு நிலையல்ல.  அதனால் அந்தங்கள் எனப்படும் துரிய நிலைகளை அனுபவித்து, அவற்றைக் கடந்து பரநிலையைப் பெற்று அதன் அந்தத்தையும் பார்த்து முடிவில் சர்வ வியாபகத்தை அடையவேண்டும் என்று புலத்தியரிடம் கூறுகிறார் அகத்தியர்.  இதற்கு புலத்தியர் சதுரகிரி பொதிகையை அடைந்து தவம் செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.  சதுரகிரி பொதிகை என்பது கண்டமூலத்தையும் மூலாதாரத்தையும் குறிக்கும்.  இதனால் அகத்தியர் புலத்தியரைக் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் என்று நாம் புரிந்துகொள்கிறோம். 

Tuesday, 17 March 2015

49. Siva and Sakthi components of the 96 instruments

Verse 49
ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
காடான தத்துவத்தைக் கண்டு தேரே

Translation:
Son, the inner instruments thirty six
Son, they are components of Siva
The external instruments sixty
They are Sakthi’s components
Speech, seeing the inside and outside well,
Seeing the status of the adhara
 Boil the instruments and the senses
Learn and become an expert of the tattva, the forest.

Commentary:
Agatthiyar classifies the tattva or instruments into two categories.  The thirty six instruments, the internal ones represent Siva as they are static in nature.  The sixty external instruments through which the internal instruments function are Sakthi’s components as they represent the active part.  Knowing this principle Agatthiyar tells Pulatthiyar that he should boil or nullify the instruments and thus the tattva which are like the forest that make one get lost in worldly distractions. 


மொத்த தத்துவங்கள் 96ல் உட்கருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறு என்கிறார் அகத்தியர்.  இந்த கருவிகள் வெளியிலிருந்து பெரும் அறிவினால் இயங்குகின்றன.  வெளிக்கருவிகளான 60 சக்தியின் கூறு ஏனெனில் அவை செயல்பட்டு அறிவை ஏற்படுத்துகின்றன.  இந்த சூட்சுமத்தை நன்கு அறிந்து கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் நன்கு காய்ச்சுமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.  அவ்வாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து தேறலாம் என்கிறார் அகத்தியர்.

48. Summary of the principles

Verse 48
காணப்பா ஆதராந் தன்னிலேதான்
கருவான உட்கருவி முப்பத்தாறும்
பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு
புத்தியுடன் உள் வெளியும் நன்றாய்ப் பார்த்தால்
தோணப்பா தத்துவங்கள் தொண்ணூற்றாறுந்
தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில்
வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை
விளங்குபதி பசுபாசம் விளையாட்டாச்சே

Translation:
See son, among the basis
The inner instruments are thirty six
The external instruments are sixty
If you the inner and outer (instruments) with buddhi
The total tatthva of ninety six
Will occur in the heart.  If you see them carefully
There is nothing, everything is a waste, the rubbish called tattva.
The play of pasu, pati and pasu, the game will become clear.

Commentary:
In this verse, Agatthiyar sums up the principles he has explained so far. The total number of principles are 96.  Among these 36 are called the inner principles and the 60 are external principles or instruments.  Agatthiyar calls them all as rubbish, as waste.  All they are fit for is to cause the play- pasu, pati and pasa that cause all the distinctions and the world as we know it. 


இதுவரை பட்டியலிட்ட தத்துவங்களை அகத்தியர் இப்பாடலில் தொகுக்குகிறார்.  தத்துவங்கள் மொத்தம் 96. அவற்றுள் 36  உட்கருவிகள் 60 வெளிக்கருவிகள். அகத்தியர் அவையனைத்தையும் குப்பை, தண்டம் என்கிறார்.  அவை பசு, பதி, பாசம் என்ற விளையாட்டை நிகழ்த்துவதற்குத்தான் சரி என்கிறார் அகத்தியர்.  

47. Path of prakriti and bindhu

Verse 47
கேளப்பா ராசதமுந் தாமதமும் மைந்தா
கிருபையுள்ள சாத்துவிகம் குணங்கள் மூன்றும்
வாளப்பா முக்குணங்கள் அறிந்துகொண்டு
வரிசையுடன் விந்தினுட வழியைக் கேளு
சூளப்பா பைசந்தி மத்திமை வைகரியுஞ்
சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்
ஆளப்பா வாக்காதி நாலும் பார்த்து
அரகரா ஆதாரந் தன்னைக் காணே.
Translation:
Listen son rajas, tamas
The merciful satvika are the three qualities
Knowing about the three qualities
Listen to the path of the bindhu
They are paisanthi, matthimai, vaikari
And sookshma are the four vaak
Seeing the four types of vaak
Araharaa see the adhara.

Commentary:
In this verse Agatthiyar is listing the three qualities satva, rajas and tamas.  He is also mentions the four types of speech the sukshma or para, paisanthi or pashyanthi, maddhimai or madhyama and vaikari.  He says that the four types of speech are the path of the bindu or the primodial form.  All the principles that he has described so far form the basis or substratum of a body and its functioning.  Next he will be explaining these adhara further.


இப்பாடலில் அகத்தியர் முக்குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றையும்முதலில் குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு விந்துவின் கதியான வாக்கைப் பற்றிக் கூறுகிறார்.  வாக் அல்லது பேச்சு பரா அல்லது சூட்சுமம், பஷ்யந்தி, மத்திமை மற்றும் வைகரி என்று நான்கு வகைப்படும்.  மேற்கூறிய தத்துவங்கள் அனைத்தும் ஒரு உருவத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதாரங்களாக இருக்கின்றன.  இவற்றின் தன்மைகளை அடுத்த பாட்டில் அவர் விளக்குகின்றார்.

Monday, 16 March 2015

46. Actions of karmendriya

Verse 46
பாரப்பா வாக்காதி என்னவென்றால்
பதிவான வசனமொடு கெமனந்தானம்
நேரப்பா விசர்க்கமொடு ஆனந்தம் ஐந்தும்
நிரமான வசனாதி என்றும் பேரு
காரப்பா வசனாதி ஐந்தும் கண்டு
கருவான ஆதார மூலம் பார்த்து
சாரப்பா பிரகிருது வழியைப் பார்க்க
தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளு

Translation:
See son, vaak etc are
The vachana, gamanam and dhaanam
Visargam and aanandham are the five
Are also called vachanaadhi
See the vachanaadhi five
See the essence, the adhara mula (muladhara)
Associate.  To see the path of prakriti
I will tell you the way hear the signs.

Commentary:
Agatthiyar is describing the five action of the karmendriya.  They are speech (action of the mouth), walk (legs), excretion (action of organs for excretion, dhanam- (action of hands) and physical pleasure (action of organ for procreation).  These are also called vachanaadhi.  While the indriya are the static part their functions are the active part.  Thus, indriya and their actions are considered as two different tattva or principles.  While the indriya is the tattva or principle, their action is thaathvika or saarbu tattuvam or associated principles.Agatthiyar says that one can understand them by focusing on the muladhara. 
He will be describing the action of prakriti next.

இப்பாடலில் அகத்தியர் கர்மேந்திரியங்களின் செயல்களைக் கூறுகிறார்.  அவை வாக்கு (வாயின் செயல்), நடை அல்லது கமனம் (கால்களின் செயல்), மலம் கழிப்பு (கழிவு உறுப்புக்களின் செயல்), ஆனந்தம்- உடலால் இன்பம் (லிங்கத்தின் செயல்) மற்றும் தானம்- கொடுக்கல் வாங்கல் (கைகளின் செயல்).  கர்மேந்திரியங்கள் தத்துவங்கள் என்றும் அவற்றின் செயல்கள் தாத்துவிகங்கள் அல்லது சார்புத் தத்துவங்கள் என்றும் சித்தர் மரபில் அழைக்கப்படுகின்றன.  இவற்றை ஒருவர் ஆதார மூலம் அல்லது மூலாதாரத்தில் நின்று பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதனை அடுத்து அவர் பிரகிருதியின் கதியை விளக்கப்போகிறார்.

Sunday, 15 March 2015

45. The active part of akasha principle

Verse 45
கேளடா ஆகாச வழிதான் மைந்தா
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வாளடா அர்த்த ஏடணை தான் ஒன்று
வகையான புத்திர ஏடணை தான் ஒன்று
சூளடா உலக ஏடணை தான் ஒன்று
சுத்தமுடன் ஆகாய வழியைக் கண்டு
ஆளடா அந்தரங்கச் சுழியில் நின்று
அப்பனே வாக்காதி அறிந்து பாரே

Translation:
Listen son, the path of akasha,
I will tell with mercy, hear well,
The sword, artha edanai (attachment towards wealth) is one
The putra edanai (attachment towards offspring) is another
The other is ulaga edanai (attachment towards all aspects of world),
Seeing the path of akasha, with purity,
Rule it by remaining in the inner whorl
Son, see about vak etc with knowledge.

Commentary:
Similar to the feelings that were described in previous verse ( 41) as derivatives of akasha principle Agatthiyar describes the moving part of this principle as attachments.  These attachments are born from the above mentioned feelings.  The attachments are three, that towards wealth, offspring and the world.  Some authors mention attachment towards wife but these are three “edanai” according to Agatthiyar.  “edanai” is also called “eshana”.  One cannot perceive these attachements/desires externally.  One can see them while performing yoga and turning one’s attention inwards.  Hence, Agatthiyar is advising Pulatthiyar to see them by remaining in the inner whorl or cakras.
He will describe speech and four other actions next.

பாடல் 41ல் ஆகாயத்தின் கூறைக் கொண்டவை என்று அகத்தியர் காமகுரோதாதிகளைக் கூறினார்.  இப்பாடலில் ஆகாச தத்துவத்தின் அசைவை உடையவையான ஏடணைகளைக் குறிப்பிடுகிறார்.  ஏடணை என்பவை பற்றுக்கள்.  அவை செல்வத்தைக் குறித்த பற்று, புத்திரர்களைக் குறித்த பற்று மற்றும் உலகைக் குறித்த பற்று என்று மூன்று வகைப்படும்.  இந்த பற்றுக்களைக் கூர்ந்து நோக்கினோமானால் முன் கூறிய குணங்களினால் அவை பிறக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்.  இவற்றை சாதாரணமாகப் பிற பொருட்களைப் பார்ப்பதைப் போலப் பார்க்க முடியாது.  யோக நிலையில் கவனத்தை உள்திருப்பும்போதுதான் அவை புலப்படுகின்றன.  அதனால் அகத்தியர் புலத்தியரிடம் அவர் அந்தரங்க சுழி எனப்படும் சக்கரங்களில் நின்று அவற்றைப் புரிந்துகொள்ளுமாறு கூறுகிறார்.

இதனையடுத்து அவர் வாக்கு முதலிய ஐந்து செயல்களைக் கூறப்போகிறார்.

44. Two categories of dasa vayu

Verse 44
கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும்
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார்
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு
காலப்பா தசவாய்வை அறிந்து கொண்டு
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால்
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே

Translation:
Hear son, along with Naagan, koorman,
Kirikaran, Devadattan and dhananjayan are the five
People say that it is the vayu of the five elements
Learn about the wonderful ten vayus
This is the kaal, learning about the dasavayu
If you remain in siva yogam with mental focus
There is nothing, everything will be siddhi
Now hear about the path of akasha.

Commentary:
This verse is the continuation of the previous one on dasa vayu or ten types of vital breaths.  Here Agatthiyar tells us another important fact about them.  Why are the ten vayus classified into two groups?  Why are they all not of the same type?  The answer is here in this verse.  The five- prana, apana, vyana, samana and udhana have parts of vayu and tejas while the five listed here- koornman, naagan, kirikaran, devadattan and dhananjayan have only parts of vayu.  Hence, the first five are considered important for spiritual accomplishments while the five in this verse perform bodily functions. Both the groups are important for sivayogam as the latter five keep the body fit for the yoga and the former cause ascent of kundalini.  Thus, the ten vayus confer siddhi or mystical accomplishments.  
Agatthiyar will be describing the path of akasha next.

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இதில் அகத்தியர் மீதம் உள்ள ஐந்து வாயுக்களைப் பற்றிப் பேசுகிறார்.  முக்கியமான வாயுக்கள் பத்து என்றால் எதற்காக அவற்றை இரண்டு கூறாகப் பிரிக்கவேண்டும்?  அவற்றினிடைய உள்ள வேறுபாடு யாது? இதை இப்பாடல் நமக்கு விளக்குகிறது.  முற்பாடலில் கூறிய ஐந்து- பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை வாயுவின் கூறுடன் தேயு எனப்படும் அக்னியின் கூறையும் கொண்டவை.  இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஐந்து- நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன், வாயுவின் கூறை மட்டும் கொண்டவை.  அதனால் முதல் ஐந்தும் குண்டலினியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்போது இந்த ஐந்தும் உடலை அதற்குத் தகுந்த நிலையில் வைத்திருக்கின்றன.  அதனால் தசவாயுக்கள் என்னும் இந்த பத்தும் சிவயோகத்துக்கு முக்கியமானவையாக உள்ளன. 

இதனை அடுத்து அகத்தியர் ஆகாயத்தின் கதியை உள்ள தத்துவங்களை விளக்கப்போகிறார்.

43. Are the pancha prana only breath?

Verse 43
வளியான வாய்வினிட வழிதான் மைந்தா
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு
நெளியாத பிராணனுடன் அபானன் தானும்
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால்
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே

Translation:
The path of vayu, the air principle, vaLi, Son
I will tell you , hear with mental focus
The unflinching prana, apana
The true udhaanan, samaanan, son
The undiminishing vyaanan, the five son.
Arakaraa along with fire principle it became vayu.
If you see the teyu vayu
Listen about bhuta vayu.

Commentary:
Agatthiyar is now describing the ten important nadi or energy channels in our body.  They are idai, pingalai, suzhinai, gandhaari, atthi, asvani, aalam, purudan, sootham and singuvai.  The nadis are the base through which the breaths flow.  Hence, the nadi are derived from the earth principle.  These are not static entities like the principles described before.  They are dynamic.  Hence, Agatthiyar says that are pritvi’s gathi or movement.


இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள்  எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார்.  அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன.  நாடிகள் என்பவை குழல்கள்.  அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன.  அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை. முன்னம் கூறிய பூமி தத்துவத்தின் கூறையுடைய அசைவற்ற தத்துவங்களைப்போல (எலும்பு, தோல்..) இவை அசைவை உடையவை.  அதனால் இவற்றை பிரித்திவி தத்துவத்தின் கதி என்கிறார் அகத்தியர்.

42. Details about the nadi

Verse 42
அஞ்சான ஐந்து பத்து நாடி தன்னை
அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு
துஞ்சாத இடையான பின் சுழினையாகி
துலங்குகின்ற காந்தாரி அத்தியோடு
மிஞ்சான அஸ்வனியும் அலம்புருடன்
வேகமுள்ள சூதமுடன் சிங்குவை பத்தும்
நெஞ்சார நின்றதோர் நாடிபத்தும்
நேர்மையுள்ள பிரிதிவியின் கதிதான் பாரே

Translation:
I am telling you about the five and five ten nadi
Son, listen to this carefully
The sleepless idai, pin, suzhinai
Along with gandhari, atthi
The remaining asvani, alam, purudan
The speeding sootham along with singuvai-these ten
Are the ten nadi that remain with the heart
This is the path of the earth principle.

Commentary:
Agatthiyar is now describing the ten important nadi or energy channels in our body.  They are idai, pingalai, suzhinai, gandhaari, atthi, asvani, aalam, purudan, sootham and singuvai.  The nadis are the base through which the breaths flow.  Hence, the nadi are derived from the earth principle.


இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள்  எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார்.  அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன.  நாடிகள் என்பவை குழல்கள்.  அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன.  அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை.

Saturday, 14 March 2015

41. Derivatives of akasa principle

Verse 41
கூறாக ஆகாசக் கூறு தன்னை
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம்
நிசமான வாச்சரிய மதமுமைந்து
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து
உத்தமனே தானாவாய் நின்றாயானால்
தேராக வாசியது தேரும் தேரும்
சிவபூதம் ஐந்து தொழில் இருத்தல் ஐந்து

Translation:
The derivatives of the space principle
I will tell you with identification.  Hear carefully
Along with anger, miserliness, desire
The pride and jealousy are the five,
See the adhara the town
The good one! If you see them as self
The vaasi will become significant
Siva bhuta are five and the actions are five.

Commentary:

Agatthiyar mentions that the five qualities of kama, krodha, moha, madham and mascharya are contain elements of space principle.  These are not actions themselves but qualities that lead to actions.  Akasha is the substratum of the other elements.  Similarly these qualities are the substratum for actions.  Agatthiyar mentions another important point here.  He says that the elements of bhuta correspond to Siva principle and their actions correspond to Sakthi principle.

காமம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஐந்து குணங்களும் ஆகாசத்தின் கூறை உடையவை என்கிறார் அகத்தியர்.  ஆகாய தத்துவம் பிற தத்துவங்களுக்கு அடிப்படையாக இருப்பது.  அதேபோல் இந்த குணங்கள் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன.  இப்பாடலில் அகத்தியர் மற்றொரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார்.  பூதங்கள் அனைத்தும் சிவனின் கூறு என்றும் அவற்றின் செயல்பாடு சக்தித் தத்துவம் என்றும் அவர் கூறுகிறார்.

Tuesday, 10 March 2015

40. Derivatives of air principle

Verse 40
தானான வாய்வினுட கூறு கேளு
தன்மையுள்ள புலத்தியனே நடத்தல் ஓடல்
ஊனான இருத்தலொடு கிடத்தல் மைந்தா
உத்தமனே எழுதலொடும் ஐந்துமாச்சு
வாறான வாய்வினுட கூறறிந்து
மார்க்கமுடன் தன்னகத்தை மகிழ்ந்து பாரு
கோனான குருவருளால் பார்த்தாயானால்
குணமான ஆகாசக் கூறைக் கேளே

Translation:
Listen to the derivatives of vayu (air principle)
The good natured Pulatthiya.  Walking, running
Remaining, lying, Son
Along with getting up- they are five
Knowing the derivatives of vayu
Seeing within, happily and in the proper way
If you see it with Guru’s grace.
Hear about the derivates of akasha which are qualities.

Commentary:
While the derivatives of pritvi are the framework of the body such as bones, hair etc the derivatives of the air principle are actions.  Action is prompted by air whose quality is movement.  So, the derivatives of air principle are the five actions-walking, running, sitting, lying down and getting up.

Next , Agatthiyar will mention the derivatives of the space principle.

பிரிதிவியின் கூறு உடல் அங்கங்களான தோல், மயிர், எலும்பு போன்றவையாக இருக்க வாயுவின் கூறை உடையவை செயல்பாடுகளாக இருக்கின்றன.  வாயுவின் தன்மை ஒரு இடத்தில் நில்லாமை அதனால் வாயுவின் கூறை உடையவையும் செயல்பாடுகளாக இருக்கின்றன.  அவையாவன நடத்தல், ஓடுதல், இருத்தல், கிடத்தல், எழுதல் என்ற ஐந்துமாகும்.

இதனையடுத்து தான் ஆகாயத்தின் கூறைக் கொண்டவற்றை விளக்கப்போகிறேன் என்கிறார் அகத்தியர்.