Verse 534
பாரப்பா உள்ளமதை தினமும் மைந்தா
பத்திக்கொண்டு சுத்தமுடன் பார்த்தாயானால்
பேரப்பா பெற்றதொரு உள்ளந்தானும்
பெருமையுடன் தான் பழுக்கும் உருமை வைத்து
கூரப்பா கருணைவளர் அமுர்த போதம்
கண்நிறைந்த போதமடா யோகத்தேகி
சாரப்பா சாரசமே தானாய் நின்று
சங்கல்ப விகல்பமது சார்ந்து தள்ளே
Translation:
See son, if
you watch the mind (heart) every day
If you see
with devotion and purity
The heart
Will mature,
The amrita
bodham that nurtures mercy
The overwhelming
bodham (will ensue), go through yoga
Remain as the
entire universe
Push away
sankalpa and vikalpa
Commentary:
Agatthiyar
says that the mind or heart should be watched carefully with devotion and
purity. Then it will mature and the
bodham or awareness will occur. This
bodham will make the soul realize right and wrong. It will nurture mercy. So a person interested in enjoying the bodham
should perform yoga. He will enjoy all
pervasive state. The person will not be
affected by sankalpa and vikalpa.
Sankalpa is having intense desire to do something. Vikalpa is imagination, thinking about
something as something else. Both,
sankalpa and vikalpa are due to the play of mind. Hence, a soul wishing to transcend the mind
will avoid both sankalpa and vikalpa.
உள்ளம் என்று அகத்தியர் குறிப்பிடுவது மனத்தை. இந்த மனத்தை ஒருவர் தூய்மையுடனும் பக்தியுடனும்
எப்போதும் கவனித்துவர வேண்டும் என்கிறார் அகத்தியர். இதையே அவர் மனமது செம்மையானால் மந்திரம்
செபிக்க வேண்டாம் என்று வேறொரு இடத்தில் கூறினார். இவ்வாறு மனத்தைக் கவனித்தால் சரி எது தவறு எது,
நிரந்தரமானது எது நிலையற்றது எது என்ற போதம் அல்லது அறிவு தோன்றும். இந்த அறிவு அன்பை, கருணையைச் சுரக்க வைக்கும். இத்தகைய அறிவை விரும்புபவர் யோகத்தில்
ஈடுபடவேண்டும். அதனால் ஒருவர் எங்குமாக
இருக்கும் நிலையை அடைகிறார். சங்கல்பம்
விகல்பம் என்ற இரண்டையும் விலக்குகிறார்.
சங்கல்பம் என்பது ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர முனைப்பு,
விகல்பம் என்பது ஒன்றை மற்றொன்றாக எண்ணுவது.
இவை இரண்டும் மனத்தினால் எழும் நிலைகள்.
மனத்தைக் கடக்க விரும்பும் ஒரு யோகி இந்த இரண்டையும் விலக்க வேண்டும்.
No comments:
Post a Comment