Verse 533
நில்லடா வழி துறையிவ் வணக்கமாக
நின்று கரை யேறினபின் மலையிற் செல்லு
அல்லடா இவ்விடமே சொர்க்கம் சொர்க்கம்
ஆதியந்தச் சொர்க்கமதில் அருள் கண் மேவி
செல்லடா சிவயோக வாழ்க்கை தன்னிலே
செம்மையுடன் சகல சவு பாக்கியம் பெற்று
உள்ளதா உள்ளவரை உலகத்தோடே
உகந்தவரை தானிருந்து உள்ளம் பாரே
Translation:
Remain in the
path, with humility
After reaching
the shores (overcoming it) go to the mountain
This place is
heaven, heaven,
In the aadhi
andha sorgam, going through the eye of grace
Go so, in the
life of Sivayogam
Attaining all
the riches (sakala saubhagyam)
Remain with
the world as long as required
Remain until
interested, see the heart.
Commentary:
Agatthiyar
says that after knowing the path and following it, becoming an expert in it one
should climb the mountain. Mountain
signifies peak of certain principles.
One has to clear the dregs or impurities first, attain the right state
before attempting to reach the peak of any principle. Otherwise the principle will overwhelm the
yogin. For example if one attains
siddhis before removing his ego and desire one will use them for personal gain
and fall into an abyss. The situation
will become worse than before. Hence
Agatthiyar is saying that one should climb the heights after reaching the
shores. The mountain also refers to
Kailaya or the supreme state. It is the
state of supreme bliss. Agatthiyar calls
this the heaven. It is the “aadhi andha sorgam”
or the heaven of beginning and end. This
is laya. This is the life of siva
yogam. After reaching this supreme state
the soul remains in the world enjoying all the riches, as jiva mukta until it
decides to give it up. At that point its
material existence ceases.
This verse
reminds us of Bhishma and his waiting on the arrow bed to leave the earth.
மேற்கூறிய மார்க்கத்தைக் கடைப்பிடித்து கரையேறிய பிறகு
மலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இங்கு மலை என்பது சில தத்துவங்களின் உச்சத்தைக் குறிக்கும். அது கைலாயம் எனப்படும் உடல்கடந்த நிலையையும்
குறிக்கும். இந்த நிலையை அடைவதற்கு ஒரு
யோகி பிற தத்துவங்களை வெல்வது முதற்கடமை.
இல்லாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும். உதாரணமாக அகங்காரம் பேராசை ஆகியவற்றை வெல்லாத
ஒருவன் சித்திகளைப் பெற்றால் அவற்றை அவன் விபரீத பலன்களுக்கே பயன்படுத்துவான். இந்த உச்ச நிலையை அகத்தியர் ஆதி அந்த சொர்க்கம்
என்கிறார். இதுவே லயம். இதுவே சிவயோக வாழ்வு. இந்த நிலையை அடைந்த பிறகு இந்த யோகி ஜீவன்
முக்தராக உலகில் எல்லா நன்மைகளையும் சௌபாக்கியங்களையும் அனுபவிப்பவராக தான்
விரும்பும்வரை வாழலாம். தான்
விரும்பும்போது உலகை விட்டுப் போகலாம்.
இப்பாடல், தான் முடிவு செய்த காலத்தில் உடலை விட்டு
நீங்குவதற்குக் காத்திருந்த பீஷ்மரின் கதையை நினைவுபடுத்துகிறது.
Guru Ji, I am Kumar from Bangalore. My wife & I are childless from last 7 years. We tried various Poojas and medicines, but no positive results. I noticed in some website that there is a mantra in Agatthiyar Paripoornam "OM REENG ANG VANG" to be chanted 1008 times. Can you please suggest about this.
ReplyDeleteSitharyogam.com சென்று பார்க்கவும்..
DeleteNamaste Kumar,
ReplyDeleteI am not in a position to give any advice on the mantra. Please send me your email address I have suggestions that I do not want to share in the public forum.