Tuesday, 24 January 2017

532. Chendooram and its benefits

Verse 532
கொண்டுமனந் தேறினபின் மைந்தா கேளு
கூர்மையுடன் நவலோகந்த் தன்னிலேதான்
அண்டர் தொழுஞ்செந்தூரஞ் சற்றே பட்டால்
அசடான கசடகன்று அன்னம் போலாம்
கண்டதொரு அருணகிரி உதயங் கண்டால்
கண்கொள்ளா சித்துவிதை விளையாடலாகும்
தொண்டருட தொண்டருக்கு தொண்டு பண்ணி
சுத்தமுடன் சிவயோகத் துறையில் நில்லே

Translation:
Son, hear after consuming it and perfecting your mind,
In the navalokha (nine metals/nine worlds)
If a small portion of chendooram touches it
All the impurities will go away, one can become hamsa (annam)
If the emergence of aruna giri is witnessed
One can play the magical accomplishments (sitthu)
Serving the servitor of servitor
Remain in the sivayoga marga, with purity.

Commentary:
By Agatthiyar aiya’s grace the word chendooram throws in another meaning.  The aru padai veedu or six encampments of Lord Murugan is well known among those who are interested in kundalini yogam.  Nakkirar in his Tirumurugatruppadai describes them in an order beginning with Tirupparam kundram.  This site lights the fire in the muladhara.  Next site is Tiruchendoor which corresponds to the svadhistana chakra and the sense of reason.  Palanai, the third sacred site corresponds to manipurakara chakra.  It corresponds to will power. The fourth site Swamimalai corresponding to the anahata is the center of direct cognition.  Tiruttani corresponds to the vishuddhi chakra and divine love. Pazhamudircholai corresponds to ajna chakra and divine sight.

Thus, the chendooram that Agatthiyar describes here may mean the power of reasoning which purifies the nine worlds or the chakras.  Navalokham means both, nine worlds and nine metals.  The power of reason will help the yogin lose his innate impurities and become hamsa or a supreme yogi.  Hamse or annam in Tamil is a mythical bird which is said to possess the quality to separate milk and water.  This indicates its discriminator power.  Hence Agatthiyar says that the person will become annam.  The aruna giri is the emergence of awareness, higher consciousness.  This will grant the capacity to perform sitthu or magical acts.  However, one who has this capacity should possess humility.  Hence. Agatthiyar says that one should server the server of server.  He recommends that one should remain in the path of sivayoga performing these actions.

அகத்தியர் ஐயாவின் அருளால் முற்பாடல்களில் கூறிய செந்தூரத்துக்கு மற்றொரு பொருளும் தோன்றுகிறது.  குண்டலினி யோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் பற்றித் தெரிந்திருக்கும்.  முருகனின் ஆறு தலங்கள் ஆறு சக்கரங்களைக் குறிக்கின்றன.  திருப்பரங்குன்றம் மூலாதார சக்கரத்தைக் குறிக்கிறது.  அது மூலாதாரத்தில் குண்டலினி அக்னியை எழுப்புகிறது.  அதனை அடுத்த திருச்செந்தூர் சுவாதிஷ்டான சக்கரத்தையும் பகுத்துணர்வையும் குறிக்கிறது.  மூன்றாவது தலமான பழனி, மணிபூரக சக்கரத்தையும் வைராக்கியத்தையும் குறிக்கிறது.  நான்காவது தளமான சுவாமிமலை அனாகத சக்கரத்தையும் நேரடியான பர அனுபவத்தையும் குறிக்கிறது. திருத்தணிகை விசுத்தி மற்றும் அன்பைக் குறிக்கிறது.  ஆறாவது தலமான பழமுதிர்சோலை ஆக்ஞா சக்கரத்தையும் புலன்கள் கடந்த நோக்கையும் குறிக்கிறது.

மேலே பார்த்த பாடல்களில் அகத்தியர் குறிப்பிடும் செந்தூரம் இவ்வாறு பகுத்துனர்வைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அது சரியான புரிதலைத் தந்து ஒன்பது உலகங்கள் அல்லது நவலோகங்களை, அவை குறிக்கும் தத்துவங்களைத் தூய்மைப்படுத்தி ஒரு யோகியை அன்னம் அல்லது ஹம்ச நிலையை அடையச் செய்கிறது.  இதையே அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  அன்னம் என்பது ஒரு அதிசயமான பறவை.  மானசரோவரில் இருக்கும் அதனால் பாலிலிருந்து நீரைப் பிரிக்க முடியும்.  மானசரோவர் என்பது மனஸ் தத்துவத்தைக் குறிக்கிறது. 

அடுத்து அகத்தியர் அருணகிரி உதயத்தைக் கூறுகிறார்.  இது ஞானம் எழும்புவதைக் குறிக்கிறது.  திருவண்ணாமலைக்கு மற்றொரு பெயரான அருணாசலம் என்பது இதையே குறிக்கிறது. இங்குள்ள ஈசன் அக்னி தத்துவத்தையும் அவ்வாறு குண்டலினி அக்னியையும் குறிக்கிறார்.   இந்த ஞானத்தைப் பெற்றால் ஒருவரால் எளிதாக சித்து விளையாடலாம்.  ஆனால் அவர் தொண்டரின் தொண்டருக்கு தொண்டுபுரிந்து இருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு அவர் அந்த சித்தியைப் பெற்ற ஒருவர் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறார். இவ்வாறு ஒருவர் சிவயோக மார்க்கத்தில், மேற்கூரியவைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும் அவை அனைத்தையும் செந்தூரம் அளிக்கும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment