Verse 53
ஆச்சப்பா சர்மமது என்னவென்றால்
அப்பனே பலம் நூற்றிப் பதினாலாச்சே
தாமப்பா இப்படித்தான் கூடிநின்று
சரீரமத்தில் வாசலது எட்டுமாச்சு
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நாடிநின்ற கோபுரத்தின் வாசல் ஒன்று
ஓமப்பாஅவ்வாசல் ஒன்பதுக்கு
உண்மையுள்ள ஆதாரக் கதவைப் பாரே
Translation:
Son, the skin
It is 114
palam
All these
remain together and constitute a body
In such a body
the entrances/thresholds are eight.
I am telling
now listen well.
The entrance
of the gopura that is sought is one
Yes, son, for
the nine entrances
See the
truthful door of adhara.
Commentary:
Agattiyar
concludes his measures about the body with the skin which he says is 114 palam
(35X114 g). He then mentions that all these constitute a body which has eight
entrances and says that there is another entrance, the entrance of the gopura
which one should seek. He calls this as the gate of the adhara. He seems to be referring to the muladhara
which is close to the genitals.
Usually the
body is said to have nine gates or entrances.
They are 2 eyes, 2 nostrils, 2 ears, 1 mouth, 1 genital and 1 organ of
excretion. As he is talking about the
muladhara which is close to the genitals one wonders whether he has not
included it in the number eight as he is talking about it separately.
இவ்வாறு உடலில் சர்மம் அல்லது தோல் நூற்றிப் பதினான்கு பலம்
என்று முடிக்கிறார் அகத்தியர். இதனை
அடுத்து இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள உடலில் எட்டு வாசல்கள் உள்ளன என்கிறார் அவர். இந்த எட்டு வாசல்களைத் தவிர்த்து ஒரு ஒன்பதாம்
வாசல் உள்ளது என்றும் அந்த வாசலையே ஒருவர் நாடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வாசலை அவர் கோபுர வாசல், ஆதார வாசல் என்று
குறிப்பதனால் இது மூலாதாரம் என்று தோன்றுகிறாது.
பொதுவாக உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறுவது வழக்கம். அவை இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு
காதுகள், ஒரு வாய், ஒரு பிறப்புறுப்பு மற்றும் ஒரு கழிப்புறுப்பு. ஒருவேளை அவர் பிறப்புறுப்புக்கு அருகில் இருக்கும்
மூலாதாரத்தைத் தனியாகக் குறிப்பிடுவதனால் எட்டு என்ற எண்ணிக்கையில் அவர் பிறப்புறுப்பைச்
சேர்த்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment