Verse 49
ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
காடான தத்துவத்தைக் கண்டு தேரே
Translation:
Son, the inner
instruments thirty six
Son, they are components
of Siva
The external
instruments sixty
They are
Sakthi’s components
Speech, seeing
the inside and outside well,
Seeing the
status of the adhara
Boil the instruments and the senses
Learn and
become an expert of the tattva, the forest.
Commentary:
Agatthiyar
classifies the tattva or instruments into two categories. The thirty six instruments, the internal ones
represent Siva as they are static in nature.
The sixty external instruments through which the internal instruments
function are Sakthi’s components as they represent the active part. Knowing this principle Agatthiyar tells
Pulatthiyar that he should boil or nullify the instruments and thus the tattva
which are like the forest that make one get lost in worldly distractions.
மொத்த தத்துவங்கள் 96ல் உட்கருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறு
என்கிறார் அகத்தியர். இந்த கருவிகள்
வெளியிலிருந்து பெரும் அறிவினால் இயங்குகின்றன.
வெளிக்கருவிகளான 60 சக்தியின் கூறு ஏனெனில் அவை
செயல்பட்டு அறிவை ஏற்படுத்துகின்றன. இந்த
சூட்சுமத்தை நன்கு அறிந்து கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில்
மாறுபாடுகளையும் நன்கு காய்ச்சுமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார். அவ்வாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில்
உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து தேறலாம் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment