Verse 51
தானான தேகமதில் கூடிநின்ற
சங்கைகளைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
ஊனன ரோமமது மூன்றரையாங்கோடி
உத்தமனே நாடியது எழுபத்தீராயிரமாங்
கோனான தேகமடா பலமோ ஆயிரமாங்
கொள்கியத்தில் குடல்பலந்தான் நாற்பத்தைந்து
பூனான பல்லதுவும் பலந்தான்நாலு
பொருந்திநின்ற சதைபலமும் இருநூறாச்சே
Translation:
The factors
that remain in the body,
I will tell
you details about them, listen
The hair in
the body 3 ½ crores
The supreme
one, the nadi are 72,000
The king, the
body’s measure (palam) is 1000
The weight of
intestines 42 measures
The weight of
the teeth is 4
The weight of
the flesh is 200.
Commentary:
Agatthiyar is
describing the weight of various components of the body. According to him, the total number of hair
follicles in the body are 3 ½ crores, the nadi or energy channels 72000. The weight of the body is 1000 measures
(palam). The intestines constitute 42 measures, teeth 4 measures and flesh 200
measures.
இப்பாடலிலிருந்து அகத்தியர் உடலின் பல பகுதிகளைப் பற்றி
விளக்கப் புகுகிறார். உடலில் உள்ள
மயிர்க்கால்கள் மூன்றரைக் கோடி என்று தொடங்கும் அவர் நாடிகள் எழுபத்திரண்டாயிரம்
என்கிறார். உடல் ஆயிரம் பலம் என்றும்
குடல் நாற்பத்து இரண்டு பலம், பற்கள் நான்கு பலம், சதை இருநூறு பலம் என்றும் அவர்
கூறுகிறார்.
No comments:
Post a Comment