Verse 42
அஞ்சான ஐந்து பத்து நாடி தன்னை
அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு
துஞ்சாத இடையான பின் சுழினையாகி
துலங்குகின்ற காந்தாரி அத்தியோடு
மிஞ்சான அஸ்வனியும் அலம்புருடன்
வேகமுள்ள சூதமுடன் சிங்குவை பத்தும்
நெஞ்சார நின்றதோர் நாடிபத்தும்
நேர்மையுள்ள பிரிதிவியின் கதிதான் பாரே
Translation:
I am telling
you about the five and five ten nadi
Son, listen to
this carefully
The sleepless
idai, pin, suzhinai
Along with
gandhari, atthi
The remaining
asvani, alam, purudan
The speeding
sootham along with singuvai-these ten
Are the ten
nadi that remain with the heart
This is the
path of the earth principle.
Commentary:
Agatthiyar is
now describing the ten important nadi or energy channels in our body. They are idai, pingalai, suzhinai, gandhaari,
atthi, asvani, aalam, purudan, sootham and singuvai. The nadis are the base through which the
breaths flow. Hence, the nadi are
derived from the earth principle.
இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள் எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார். அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி,
அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன. நாடிகள் என்பவை குழல்கள். அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன. அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை.
No comments:
Post a Comment