Verse 44
கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும்
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார்
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு
காலப்பா தசவாய்வை அறிந்து கொண்டு
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால்
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே
Translation:
Hear son,
along with Naagan, koorman,
Kirikaran,
Devadattan and dhananjayan are the five
People say
that it is the vayu of the five elements
Learn about
the wonderful ten vayus
This is the
kaal, learning about the dasavayu
If you remain
in siva yogam with mental focus
There is
nothing, everything will be siddhi
Now hear about
the path of akasha.
Commentary:
This verse is the continuation of the previous one on
dasa vayu or ten types of vital breaths.
Here Agatthiyar tells us another important fact about them. Why are the ten vayus classified into two
groups? Why are they all not of the same
type? The answer is here in this
verse. The five- prana, apana, vyana, samana
and udhana have parts of vayu and tejas while the five listed here- koornman,
naagan, kirikaran, devadattan and dhananjayan have only parts of vayu. Hence, the first five are considered
important for spiritual accomplishments while the five in this verse perform
bodily functions. Both the groups are important for sivayogam as the latter
five keep the body fit for the yoga and the former cause ascent of
kundalini. Thus, the ten vayus confer
siddhi or mystical accomplishments.
Agatthiyar will be describing the path of akasha next.
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இதில் அகத்தியர் மீதம்
உள்ள ஐந்து வாயுக்களைப் பற்றிப் பேசுகிறார்.
முக்கியமான வாயுக்கள் பத்து என்றால் எதற்காக அவற்றை இரண்டு கூறாகப்
பிரிக்கவேண்டும்? அவற்றினிடைய உள்ள
வேறுபாடு யாது? இதை இப்பாடல் நமக்கு விளக்குகிறது. முற்பாடலில் கூறிய ஐந்து- பிராணன், அபானன், வியானன்,
உதானன், சமானன் என்பவை வாயுவின் கூறுடன் தேயு எனப்படும் அக்னியின் கூறையும்
கொண்டவை. இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஐந்து-
நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன், வாயுவின் கூறை மட்டும்
கொண்டவை. அதனால் முதல் ஐந்தும்
குண்டலினியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்போது இந்த ஐந்தும் உடலை
அதற்குத் தகுந்த நிலையில் வைத்திருக்கின்றன.
அதனால் தசவாயுக்கள் என்னும் இந்த பத்தும் சிவயோகத்துக்கு முக்கியமானவையாக
உள்ளன.
இதனை அடுத்து அகத்தியர் ஆகாயத்தின் கதியை உள்ள தத்துவங்களை
விளக்கப்போகிறார்.
Vayus nine, in unison they function
ReplyDeleteDananjayan, the tenth, indeed is superior.
When blended with the nine in this
Inseparate are they body and the soul.
- Tirumandiram, Verse 653
Interesting right about dananjayanvayu.
Indeed
Delete