Verse 46
பாரப்பா வாக்காதி என்னவென்றால்
பதிவான வசனமொடு கெமனந்தானம்
நேரப்பா விசர்க்கமொடு ஆனந்தம் ஐந்தும்
நிரமான வசனாதி என்றும் பேரு
காரப்பா வசனாதி ஐந்தும் கண்டு
கருவான ஆதார மூலம் பார்த்து
சாரப்பா பிரகிருது வழியைப் பார்க்க
தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளு
Translation:
See son, vaak
etc are
The vachana,
gamanam and dhaanam
Visargam and
aanandham are the five
Are also
called vachanaadhi
See the
vachanaadhi five
See the
essence, the adhara mula (muladhara)
Associate. To see the path of prakriti
I will tell
you the way hear the signs.
Commentary:
Agatthiyar is describing the five action of the
karmendriya. They are speech (action of
the mouth), walk (legs), excretion (action of organs for excretion, dhanam- (action
of hands) and physical pleasure (action of organ for procreation). These are also called vachanaadhi. While the indriya are the static part their
functions are the active part. Thus,
indriya and their actions are considered as two different tattva or
principles. While the indriya is the
tattva or principle, their action is thaathvika or saarbu tattuvam or
associated principles.Agatthiyar says that one can understand them by focusing
on the muladhara.
He will be describing the action of prakriti next.
இப்பாடலில் அகத்தியர் கர்மேந்திரியங்களின் செயல்களைக்
கூறுகிறார். அவை வாக்கு (வாயின் செயல்),
நடை அல்லது கமனம் (கால்களின் செயல்), மலம் கழிப்பு (கழிவு உறுப்புக்களின் செயல்),
ஆனந்தம்- உடலால் இன்பம் (லிங்கத்தின் செயல்) மற்றும் தானம்- கொடுக்கல் வாங்கல்
(கைகளின் செயல்). கர்மேந்திரியங்கள்
தத்துவங்கள் என்றும் அவற்றின் செயல்கள் தாத்துவிகங்கள் அல்லது சார்புத்
தத்துவங்கள் என்றும் சித்தர் மரபில் அழைக்கப்படுகின்றன. இவற்றை ஒருவர் ஆதார மூலம் அல்லது மூலாதாரத்தில்
நின்று பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
இதனை அடுத்து அவர் பிரகிருதியின் கதியை விளக்கப்போகிறார்.
No comments:
Post a Comment