Verse 39
கேளப்பா தேய்வினுட கூறு கேளு
கேள்வியென்ன பசியுடனே நித்திரையுமாகும்
கூளப்பா மைதுனம் பயமுஞ் சோம்பல்
தொகுத்துரைத்த ஐந்துமடா தேய்வின் கூறு
சூரப்பா தேய்வினுட கூறரிந்து
ஆக்கமுடன் தன்னகத்தை மனதாய்ப் பாரு
காலப்பா வலுவரிந்து பார்த்தாயானால்
கலையான வாய்வினுட கூறுதானே
Translation:
Listen son,
about the derivative of tejus
It is hunger
and sleep
Along with
physical relationship, fear and laziness,
These five
summarized have components of tejas (fire)
Knowing the
part of tejus
If the heart
is seen as mind
The breath, if
you see its strength
You will see
the kalai, the derivatives of air
Commentary:
This verse
mentions the five derivatives of tejas or fire element. They are hunger, sleep, fear, laziness and
maithunam or sex. It is interesting that
we call burning desire, burning or scorching hunger, all consuming fear
etc. All these adjectives are applicable
to fire which burns, consumes everything!
Agatthiyar
will be describing the derivatives of air in the next verse.
அக்னி அல்லது நெருப்புத் தத்துவத்தின் கூறையுடைய ஐந்தை
இப்பாடலில் அகத்தியர் பட்டியலிடுகிறார்.
அவை, பசி, தூக்கம், மைத்துனம் அல்லது உடலுறவு, பயம், சோம்பல் என்பவை. நாம் பொதுவாக இவற்றைப் பற்றிப் பேசும்போது
சுட்டெரிக்கும் ஆசை, பொசுக்கும் கோபம், தன்னையே உண்ணும் பசி என்பதுபோன்ற சொற்களைப்
பயன்படுத்துவது இதனால்தானோ என்னவோ!
இவையனைத்தும்- ஏரிப்பது, தகிப்பது என்ற அடைமொழிகள், தீக்கே பொருந்தும்.
அடுத்து அகத்தியர் வாயுவின் கூறைக் கொண்டவற்றை
விளக்கப்போகிறார்.
No comments:
Post a Comment