Verse 54
பாரப்பா ஆதாரக் கதவைச் சாற்றி
பலபலவாய் நின்றதொரு தாளைப் பூட்டி
நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா
நிசமான சுழினையே கோல்தான் அப்பா
அறிந்து மிகத் தான் நிறுத்துப் பார்க்கும்போது
வீரப்பா கொண்டதொரு ஆறாதாரம்
விபரமுடன் தோணுதற்கு விபரங்கேளே
Translation:
See son,
closing the doors of the adhara
Locking the
several locks
For those
locks, son,
The key is
suzhinai (ajna)
Knowing this,
if one weighs it carefully
The valorous
six adhara
Listen to the
details for them to become visible.
Commentary:
Agatthiyar
explains why the ajna chakra is considered so important. He says that it is the key which locks the
six adhara or cakra. He equates the
cakra to doors that have locks and the key for the locks is suzhinai or
ajna. He is starting to explain the six
adhara in the next few verses.
எதனால் ஆக்ஞா சக்கரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று
அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். அவர்
ஆறு ஆதாரங்களைக்பூட்டுக்கள் கொண்ட கதவுகள் என்றும் அந்தக் கதவுகளைத் திறக்க
பயன்படும் திறவுகோல் ஆக்ஞா அல்லது சுழினை என்றும் கூறுகிறார். இதனை அடுத்து அவர் ஆறு ஆதாரங்களை
விளக்கப்போகிறார்.
No comments:
Post a Comment