Tuesday 26 July 2016

458. Representation of nadhantha bodha state

Verse 458
தேரப்பா காலைசிவம் மாலை சத்தி
செம்மையுடன் கொண்டு மனந் தேர்ந்தபோது
காரப்பா வாலைபதம் பணிந்துகொண்டு
கருணையுடன் நாதாந்த போதத்தேகி
மேரப்பா பெருநடு முக்கோணத்தில்
விஞ்சை எனுங் காயாஸ்திரி றீங்காரத்தை
சாரப்பா தன்மனமே சாட்சியாகத்
தானிருத்தி றீங்கார மூலம் பாரே

Translation:
Learn son, Sivam in the morning, sakti in the evening
When it is contemplated so
Saluting the feet of vaalai
Going to the nadhantha bodham
Meru, the big triangle in the middle
The reengara of Gayathri,
Join it, holding the mind
As the witness, See the reengaara origin.

Commentary:
Agatthiyar mentioned in the previous verse that Sivam and Sakti or eight and ten, akara ukara, should be learnt to attain the nadhantha bodham state and that they should be chanted during “andhi sandhi”.  This term means twilight in the day and evening.  In this verse he says that Sivam or akara should be chanted during the twilight that leads to the day and Sakti at the twilight that leads to the night.  Vaalai is saluted by the mind which contemplates the Sivam and Sakti.  The nadhantha bodham of the state of pure awareness is represented by the middle big triangle in the Srichakra.  The letter placed there is reeng.  Agatthiyar calls this as “kaayaasthree”.  While this is a version of the word Gayathri, it also means the lady of the body, kaayam, the Sakthi.  She remains at the muladhara.  Muladhara not only means the cakra at the perineum it also means axis mundi or the primary axis which is the cause for existence.  Similarly, kaayam, the body means not only the physical body.  It means subtle, causal and super causal bodies.


முந்தைய பாடலில் சிவமும் சக்தியும் எட்டும் இரண்டும் என்றும் அவற்றை ஒருவர் அந்தி சந்திகளில் ஜெபித்தால் நாதாந்த போத நிலையை அடையலாம் என்றும் அகத்தியர் கூறினார்.  அந்தி சந்திகள் என்பவை இரவும் பகலும் சேரும் காலங்கள். முந்தைய இரவும் அன்றைய பகலும் சேரும் நேரத்தில் சிவத்தையும் அன்றைய பகலும் இரவும் சேரும் நேரத்தில் சக்தியையும் அதாவது முறையே அகாரத்தையும் உகாரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்றும் மனத்தை அலைபாயாமல் வைத்திருப்பதன் மூலம் வாலையையும் வழிபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் நாதாந்த போத நிலையை அடையலாம் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அந்த நிலையை ஸ்ரீசக்கரத்தின் மத்தியில் உள்ள பெரிய முக்கோணம் குறிக்கிறது. அங்கு “காயாஸ்திரி” யின் அட்சரத்தில் மனத்தைக் குவிக்கவேண்டும்.  அந்த றீங்கார மூலத்தைப் பார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  காயாஸ்திரி என்ற சொல் காயத்திரி என்று பொருள்பட்டாலும் அது உடம்பில் உள்ள மாதான குண்டலினியையும் குறிக்கிறது.  இங்கு காயம் என்பது பருப்பொருளாலான உடலை மட்டுமல்லாமல் சூட்சும, காரண, மகாகாரண சரீரங்களையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment