Monday 18 July 2016

448. Worship during waxing and waning of the moon

Verse 448
நாட்டமென்ற நடுவான கும்பந்தன்னில்
நாதாந்த புவனை சக்கரத்தைச் சாற்றி
தேட்டமென்ற கும்ப நவ கும்பமெல்லாம்
சிவசிவா பூசை முறை செயமாய்ச் செய்து
ஆட்டமென்ற அம்பலவா தன்னை நீயும்
அங்கனையே பூரணமாய்த் தியானம் பண்ணி
வாட்டமில்லா வாசிமலர் வாசத்தாலே
வளர்பிறையுந் தேய் பிறையும் பூசை பண்ணே

Translation:
In the middle kumbam, the awareness
Adorn the nadhantha bhuvanai chakra
The search, all the nava kumbha
Siva sivaa!  Performing the puja successfully
The dance, the Ambalava, worshipping
Him there as Poornam with contemplation
By  the never withering flower of vaasi, its fragrance
You perform the worship during waxing and waning.

Commentary:
Let us see the subtle meaning of the verse first.  Agatthiyar calls the middle kumba as awareness.  Consciousness remains in the turiya state during the vaasi/siva yoga.  Nadanta state is beyond the primordial state.  It is the state of Sakthi.  At this state the only entities present are Sakthi and then Siva in ascending order.  The yogin experiences this state at ajna.  The nava kumbha means the nine states of consciousness. The dancer, Ambalavan mentioned here is Siva who dances at sahasrara in the body and at Dvadasantha, in space.  The yogin worships Sakti and Siva with the help of vaasi or prana/breath combination.  Agatthiyar mentions that this worship should be performed during waxing and waning.  This refers to inhalation and exhalation, ascent and descent of consciousness. 

Literally, this verse means place the Bhuvanai chakaram in the middle pot, worship her and Siva with fragrant flowers during waxing and waning periods of the moon. 
இப்பாடலின் உட்பொருளை முதலில் பார்ப்போம்.  நடுவான சுழுமுனையில் கும்பக நிலையை இருந்து புவனையின் சக்கரமான ஆக்ஞையில் விழிப்புணர்வை நிறுத்தி நாதாந்த நிலை எனப்படும் சக்தி நிலையையும் அம்பலவர் எனப்படும் சிவனையும் வாசி எனப்படும் மூச்சும் பிராணனும் சேர்ந்த மலரைக் கொண்டு வளர்பிறை தேய்பிறை எனப்படும் உள்மூச்சு வெளிமூச்சு என்ற இரண்டின்போதும், விழிப்புணர்வு எழுந்து மறையும் இரு நிலைகளின்போதும் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர்.


இப்பாடலின் வெளிப்பொருள்: நடுக்கும்பத்தில் புவனையின் அட்சரத்தை எழுதிய தகட்டை வைத்து, நாதாந்தம் எனப்படும் சொல்நிலையைக் கடந்த தியான நிலையால் சக்தியையும் அம்பலவர் எனப்படும் சிவனையும் வாசனை மிகுந்த மலர்களால் வளர்பிறை தேய்பிறை என்ற சந்திரனின் வளர்ச்சி, குறைவு என்ற இரு நிலைகளின்போதும் வழிபடவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment