Tuesday 26 July 2016

457. Know about eight and two

Verse 457
பஞ்ச கண தீட்சை
திட்டமுடன் பஞ்சகண தீட்சை தன்னை
செய்யு கிறமார்க்கத்தைசெப்பக் கேளு
சட்டமுடம் ஆதி கர்ப்பம் அகாரம் விந்து
சங்கையுடன் ஆண்டொன்று செபித்த பின்பு
இஷ்டமுடன் உகாரமென்ற சத்தி மாது
இன்பமுடன் மனம் நிறுத்திக் கொண்டு தேறு
வட்டமதில் மனம் நிறுத்தி அந்தி சந்தி
மைந்தனே எட்டுரண்டுங் கொண்டு தேறே
Translation:
Pancha gana deeksha
The Pancha gana deeksha, its definitude
Listen to how it should be performed
The primary karpam is akara, the bindu
It is chanted for one year
Ukara, the Sakthi mother
Hold your mind in it and become an expert
Holding the mind in the circle during andhi and sandhi
Son, become an expert with eight and two.

Commentary:
Agatthiyar reiterates how the pancha gana deeksha is performed.  Please refer to verse 201, 202, 203 and 397 for details on pancha gana.  Sivam, sakthi, vaalai, manas and breath are the five components of the pancha gana.  As said in verse 202 he says that Sivam is akara and it should be performed in the day,  This letter should be uttered for a year.  Sakthi is ukara, manas should be held without any wavering and this practice should be performed during andhi and sandhi or during twilight.  Thus one should become an expert of pancha gana deeksha by learning about Siva the akara and sakti the ukara.  These are represented by eight and two respectively.


பஞ்ச காண தீட்சையைப் பற்றி இப்பாடலில் மறுபடியும் கூறுகிறார் அகத்தியர்.  பாடல்கள் 201, 202, 203 மற்றும் 397 பார்க்க.  பஞ்ச கணங்கள் என்பது சிவம், சக்தி, வாழை, மனஸ் மற்றும் பிராணன்.  இவற்றில் சிவம் என்பது ஆதி கர்ப்பம், விந்து, அகாரம்.  அதை ஒரு வருடம் உச்சரிக்கவேண்டும் என்றும் சக்தி என்பது உகாரம், மனதை அலையாமல் வைத்திருக்க வேண்டும், இதை அந்தி சந்தியில் செய்யவேண்டும் என்றும் பஞ்ச கணதீட்சை சித்தியாகவேண்டும் என்றால் எட்டு இரண்டு எனப்படும் அகார உகாரங்களைப் பற்றி அறியவேண்டும் என்றும் கூறி இப்பாடலை முடிக்கிறார். 

No comments:

Post a Comment